Search
  • Follow NativePlanet
Share

நபதீப் – ஒன்பது தீவுகள்!

8

நபதீப் என்பது பெங்காளி மொழியில் ‘ஒன்பது தீவுகள்’ எனும் பொருளை குறிக்கிறது. மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள இந்த இடம் பங்களாதேஷ் நாட்டினை ஒட்டியே அமைந்துள்ளது. நபதீப் எனப்படும் இந்த தீவுத்தொகுதியிலுள்ள ஒன்பது தீவுகளும் பின்வரும் பெயர்களில் அழைக்கப்படுகின்றன. அந்தர்த்வீப், சிமந்தாத்வீப், ருத்ராத்வீப், மத்ய த்வீப், கோத்ரும்த்வீப், ரித்த்வீப், ஜானுத்வீப், மொஹத்ரும் த்வீப் மற்றும் கோலாத்வீப் என்பவையே அவை.

ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த ஸ்தலமாக கருதப்படுவதால் இந்த நபதீப் தீவுகளுக்கு உலகெங்கிலுமிருந்து யாத்ரீகர்கள் வருகை தருகின்றனர். நபதீப் மண்டலா பரிக்கிரமா எனும் திருவிழா இங்கு வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

மந்திர உச்சாடனங்களுடன்கூடிய ஒரு ஊர்வல சடங்கு நிகழ்ச்சி ஒன்று இத்திருவிழாவின்போது நடத்தப்படுகிறது. குருபூர்ணிமா மற்றும் ராஷ் பூர்ணிமா போன்ற திருநாட்களும் விசேஷமாக இப்பகுதியில் கொண்டாடப்படுகின்றன.

சைதன்ய மரபு!

இந்த தீவுநகரத்திற்கு கிழக்கே அழகிய பாகீரதி ஆறு ஓடுகிறது. அது மட்டுமல்லாமல் இது மஹா சைதன்ய குரு அவதரித்த ஸ்தலமாகவும் புகழ் பெற்றுள்ளது.

இவர் வைணவ மரபை செழிக்க செய்தவர் வேதாந்தி ஆவார். ஒரு சமூக சீர்திருத்தவாதியாகவும் திகழ்ந்த இவருக்கு பின் பல சீடர்களும் தோன்றி அவரது பணியை தொடர்ந்துள்ளனர்.

சுற்றுலா வசதிகள்

நபதீப் தீவுப்பகுதியில் தங்கும் வசதிகளுக்கு குறைவில்லை. இங்கு முனிசிபாலிட்டி கெஸ்ட் ஹவுஸ் ஒன்று உள்ளது. இதில் தங்குவதற்கு முன்கூட்டியே பதிவு செய்துகொள்ள வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது தவிர சைதன்யா கௌடியா மிஷன் இல்லம் மற்றும் இஸ்க்கான் கெஸ்ட் ஹவுஸ்,  தனியார் ஹோட்டல்கள் போன்றவையும் இங்கு அமைந்திருக்கின்றன.

இங்குள்ள உணவகங்களில் சுவையான பெங்காளி உணவுகள் பரிமாறப்படுகின்றன. உள்ளூர் போக்குவரத்து தேவைகளுக்கு வாடகைக்கார் மற்றும் டெம்போக்கள் போன்றவை கிடைக்கின்றன.

நபதீப் சிறப்பு

நபதீப் வானிலை

சிறந்த காலநிலை நபதீப்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது நபதீப்

  • சாலை வழியாக
    மாநில நெடுஞ்சாலை 6 வழியாக கொல்கத்தாவிலிருந்து 119 கி.மீ தூரத்தில் உள்ள இந்த நபதீப் நகரத்திற்கு வரலாம்.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    ரயில் மார்க்கமாக பயணம் மேற்கொள்ள வசதியாக நபதீப் நகரத்திலேயே ரயில் நிலையம் அமைந்துள்ளது. சில நீண்ட தூர எக்ஸ்பிரஸ் ரயில்கள் இங்கு நின்று செல்கின்றன.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    நபதீப் நகரத்துக்கு அருகில் கொல்கத்தா விமான நிலையம் உள்ளது. இது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகளை கொண்டுள்ளது.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
08 Jun,Mon
Return On
09 Jun,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
08 Jun,Mon
Check Out
09 Jun,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
08 Jun,Mon
Return On
09 Jun,Tue