பர்மோதி கிராமத்தில் உள்ள இந்த பீர் சாஹேப் கல்லறை நதௌன் சுற்றுலாத்தலத்தின் முக்கிய சுற்றுலா அம்சங்களில் ஒன்றாக அறியப்படுகிறது. நாட்டுப்புற கதைகளின்படி, இப்பகுதியின் வாழ்ந்த சாய் ஃபஸல் ஷா எனும் யோகி பல அற்புதங்களை தன் வாழ்நாளில் நிகழ்த்தி மக்கள் மத்தியில் பிரசித்தி பெற்றிருந்ததாக சொல்லப்படுகிறது.
அவரது மகிமையால் கவரப்பட்ட கடோச் வம்ச மன்னரான சன்சார் சந்த் இந்த கல்லறையை நிர்மாணித்துள்ளார். ஹிந்து பஞ்சாங்கத்தின்படி மக மாதத்தில் அல்லது பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் இந்த கல்லறை ஸ்தலத்தில் ‘பண்டாரா’ எனப்படும் அன்னதான சடங்கு நடத்தப்படுகிறது. அச்சமயம் ஒரு மல்யுத்தப்போட்டியும் இங்கு நிகழ்த்தப்படுவது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications