எத்திப்போத்தலா அருவி நாகர்ஜுனாசாகர் நகருக்கு வெகு அருகாமையிலும், நாகர்ஜுனாசாகர் அணையிலிருந்து 11 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்திருக்கிறது. இந்த அருவி கிருஷ்ணா நதியின் கிளை நதியான சந்திரவங்காவிலிருந்து பிறந்து, 70 அடி உயரத்திலிருந்து ஆர்பரித்துக் கொட்டிக்கொண்டிருக்கிறது.
ஆனால் உண்மையில் இந்த அருவியின் நீர் சந்திரவங்கா, தும்மலா மற்றும் நக்கலா ஆகிய சிற்றாறுகளின் கலவையே ஆகும். மேலும் இந்த அருவியின் நீர் நாகர்ஜுனாசாகர் அணையின் மூலம் கிருஷ்ணா நதியில் சென்று கலக்கிறது.
எத்திப்போத்தலா அருவி பசுமையான அடர் வனங்களுக்கு மத்தியில் இயற்கை வனப்புடன் காட்சியளித்துக் கொண்டிருப்பதால் ஆண்டு முழுவதும் இந்த அருவிக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் படையெடுத்து வருவது போல வந்து கொண்டே இருக்கின்றனர்.
இந்த அருவிக்கு வெகு அருகில் உள்ள ஒரு குன்றில் ஆந்திர பிரதேச அரசு வியூ பாயிண்ட் ஒன்றை அமைத்துள்ளது. எனவே இந்த வியூ பாயிண்ட்டிலிருந்து சுற்றுலாப் பயணிகள் அருவியின் பேரழகை பரிபூரணமாக கண்டு ரசிக்கலாம்.
மேலும் எத்திப்போத்தலா அருவிக்கு அருகிலேயே அமைந்திருக்கும் ரங்கநாதன் மற்றும் தாத்ரேயர் கோயில்களுக்கு பயணிகள் நேரம் இருந்தால் சென்று வரலாம்.



Click it and Unblock the Notifications