நாகர்ஜுனாசாகர் அணை கட்டப்பட்ட காலத்தில் உலகிலேயே கற்களையும், செங்கற்களையும் கொண்டு உருவாக்கப்பட்ட அணைகளில் மிகப்பெரியதாக கருதப்பட்டது. இந்த அணை நாகர்ஜுனாசாகர் நகருக்கு வெகு அருகாமையில் நல்கொண்டா மாவட்டத்தில் அமைந்திருக்கிறது.
கிருஷ்ணா நதிக்கு குறுக்கே கட்டப்பட்டிருக்கும் நாகர்ஜுனாசாகர் அணையை கட்டும் பணி 1955-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 1967-ஆம் ஆண்டு முடிக்கப்பட்டது. 11, 472 மில்லியன் கியூபிக் மீட்டர் கொள்ளளவு கொண்ட இந்த அணை 490 அடி உயரம் மற்றும் 1.6 கிலோமீட்டர் நீளத்துடன் கடலை போல பிரம்மாண்டமாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. இந்த அணையில் மொத்தம் 26 முகத்துவாரங்கள், 42 அடி அகலத்திலும், 45 அடி உயரத்திலும் அமைந்துள்ளன.
இந்தியாவில் பசுமை புரட்சியின் ஒரு பகுதியாக முதலில் தொடங்கப்பட்ட திட்டம் என்ற முறையில் நாகர்ஜுனாசாகர் அணை இந்திய வரலாற்றில் முக்கிய இடம் வகிக்கிறது.
மேலும் நீர் மின்சார திட்டத்திற்கு பயன்படுத்தப்பட்டு வரும் நாகர்ஜுனாசாகர் அணை, அதன் அருகாமை பகுதிகளின் நீர் பாசன வசதியை பூர்த்தி செய்து வருகிறது.



Click it and Unblock the Notifications