நல்கொண்டா நகருக்கு அருகில் அமைந்திருக்கும் இந்த கொல்லன்பாகு ஜெயின் கோயில் ஹைதராபாத் நகரிலிருந்து 79 கி.மீ தூரத்தில் உள்ளது. ஜைனக்கோயிலான இது ஜைனம் அதிகம் பின்பற்றப்படாத ஆந்திர பூமியில் அமைக்கப்பட்டிருப்பது ஒரு ஆச்சரியமான விஷயமாக கருதப்படுகிறது.
இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையுடையதாக கருதப்படும் இந்த ஜைனக்கோயில் சரியாக பராமரிக்கப்படாததால் இடிபாடுகளுடன் காட்சியளிக்கிறது. இருப்பினும் ஆந்திர அரசாங்கம் மற்றும் இந்திய தொல்லியல் துறையின் முயற்சிகளுக்கு பிறகு இது சற்று கவனிக்கப்பட்டு சுற்றுலாப்பயணிகள் மத்தியிலும் பிரசித்தி பெறத்துவங்கியுள்ளது.
இருப்பினும் இந்த புராதனக்கோயிலை அதன் ஆதிகால தோற்றத்துக்கு கொண்டுவர இன்னும் ஏராளம் முயற்சிக்க வேண்டியுள்ளது. வைணவம் தழைத்தோங்கிய மண்ணில் சமணக்கோயில் உருவாகியிருக்கும் அதிசயம் ஒரு வரலாற்று அற்புதமாகவே கருதப்படுகிறது.



Click it and Unblock the Notifications