நல்கொண்டா பகுதியில் நிலவும் மத நல்லிணக்கத்துக்கு ஒரு சிறந்த உதாரணம் இந்த லதீஃப் ஷேஃப் தர்க்கா ஆகும். ஒரு முஸ்லிம் யோகிக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த தர்க்காவிற்கு எல்லா மதப்பிரிவுகளை சேர்ந்தவர்களும் அதிக எண்ணிக்கையில் விஜயம் செய்கின்றனர்.
இரண்டு மலைகளைக்கொண்ட ஒரு மலைப்பகுதியில் அமைந்திருக்கும் இந்த தர்க்கா ஸ்தலம் மலையேற்ற ஆர்வலர்கள் மற்றும் நடைப்பயணிகள் போன்றோரையும் ஈர்க்கிறது. எ
னவே பக்தர்கள் மட்டுமல்லாது சுற்றுலாப்பயணிகளையும் ஏராளமாக இந்த தர்க்காவில் பார்க்க முடிகிறது. இந்த தர்க்காவில் வேண்டிக்கொண்டால் நினைப்பது நிறைவேறும் என்பதாக ஐதீக நம்பிக்கை நிலவுகிறது. எனவே வெகு தூரத்திலிருந்தும் யாத்ரீகர்கள் இந்த தர்க்காவுக்கு பயணம் மேற்கொண்டு வருகை தருகின்றனர்.
வருடாந்திர உருஸ் திருவிழா இந்த தர்க்காவில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அச்சமயம் லட்சக்கணக்கான பக்தர்கள் தர்க்காவுக்கு விஜயம் செய்து களப்பணியிலும் ஈடுபடுகின்றனர். இந்த தர்க்காவுக்கு வெகு அருகிலேயே கபுராலா குட்டா எனும் மலையும் காணப்படுகிறது.



Click it and Unblock the Notifications