நல்கொண்டா நகரத்துக்கு வெகு அருகிலேயே உள்ள இந்த மட்டபள்ளி கிராமம் கிருஷ்ணா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இங்குள்ள ஒரு நரசிம்மஸ்வாமி கோயிலுக்காக இந்த கிராமம் சுற்றுலாப்பயணிகளிடையே பிரசித்தி பெற்றுள்ளது.
இந்த கிராமத்தின் அமைதிக்காகவே இது அவசியம் விஜயம் செய்யப்படவேண்டிய ஸ்தலங்களின் பட்டியலில் இடம் பெற வேண்டியது அவசியமாகும். அடர்ந்த காட்டுப்பகுதியில் நடுவே வீற்றிருக்கும் இந்த கிராமத்தை ஒட்டியே புனிதமான கிருஷ்ணா ஆறு ஓடுவது கூடுதல் விசேஷமாகும். எனவே ஆற்றங்கரை கிராமத்துக்கே உரிய அமைதி இயற்கை எழில் போன்றவற்றை இது வாய்க்கப்பெற்றுள்ளது.
ஹிந்து புராணக்கதைகளின்படி மட்டபள்ளி பஞ்ச நரசிம்ம ஷேத்திரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. வேடாத்ரி, வேதபுரம், மங்கள்கிரி மற்றும் வடபள்ளி ஆகியவை ஏனைய நான்கு ஷேத்திரங்களாகும்.
இந்த நான்கும் நான்கு எதிரெதிர் திசைகளில் வீற்றிருக்க மையப்பகுதியில் இந்த மட்டபள்ளி ஷேத்திரம் அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. மட்டப்பள்ளியில் வீற்றிருக்கும் கடவுளுக்கு இணையான கடவுள் வேறு இல்லை என்பதாக உள்ளூர் நம்பிக்கைகள் நிலவுகின்றன.



Click it and Unblock the Notifications