பனகல் கோயில் என்றழைக்கப்படும் இந்த பனகல் சோமேஸ்வரா கோயில் பனகல் எனும் கிராமத்தில் வீற்றிருக்கிறது. இந்த கிராமம் நல்கொண்டா நகருக்கு அருகிலேயே அமைந்துள்ளது. ஹைதராபாத் நகரிலிருந்து 101 கி.மீ தூரத்தில் இந்த பனகல் கிராமம் உள்ளது.
வரலாற்றாசிரியர்களின் கருத்துப்படி இந்த கிராமம் புராதன காலத்தில் காகதீய ராஜ வம்சத்தினரின் தலைநகரமாக செழிப்பாக இருந்திருக்க வேண்டும் என்பதாக சொல்லப்படுகிறது.
11ம் நூற்றாண்டு வாக்கில் இந்த ஸ்தலத்தை காகதீய வம்சத்தினர் தலைநகராக ஆக்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. அதன் அடையாளமாக ஒரு கோயிலையும் அவர்கள் இந்த ஊரில் நிர்மாணித்துள்ளனர்.
இந்த கோயில் 66 தூண்களைக் கொண்டதாக கம்பீரத்துடன் எழும்பி நிற்கிறது. இந்த தூண்கள் ஒவ்வொன்றும் நுணுக்கமான செதுக்கப்பட்டு காட்சியளிக்கின்றன. கோயில் மண்டப வாசலில் ஒரு நந்தி சிலையும் வீற்றுள்ளது.
சிவபெருமான் மூலவராக கருவறையில் காட்சியளிக்கின்றார். மேலும் கோயில் சுவர்களில் ராமாயண மற்றும் மஹாபாரத காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன.



Click it and Unblock the Notifications