மறைந்த இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் பெயரால் அழைக்கப்படும் இந்த பூங்கா நல்கொண்டா நகரத்திலுள்ள புகழ் பெற்ற பூங்காவாகும். முக்கிய சுற்றுலா அம்சமாக கருதப்படும் இது உள்ளூர் மக்களாலும் அதிக அளவில் விரும்பி விஜயம் செய்யப்படுகிறது. நகரத்தின் மையப்பகுதியில் வீற்றுள்ள இது நன்றாக பராமரிக்கப்படுகிறது.
கவனமாக கத்தரித்து அலங்கரிக்கப்பட்ட புல்தரைகளும் மலர்ச்செடிகளும் இந்த பூங்காவை அலங்கரிக்கின்றன. பூக்கும் பருவத்தில் விதவிதமான மலர்கள் பல வண்ணங்களில் பூத்து பூங்காவை ஜொலிக்க வைக்கிறது.
இவற்றில் பல மலர்ச்செடிகள் அரிய வகைகளை சேர்ந்தவை என்பதும் குறிப்பிடத்தக்கது. இவை மட்டுமல்லாமல் பல மரங்களும் இந்த பூங்காவில் அணிவகுத்து நிற்கின்றன.
பூங்கா வளாகத்திலேயே வண்ண விளக்குகளுடன் கூடிய ஒரு இசை நீரூற்று ஒவ்வொரு மாலையும் இயக்குவிக்க படுகிறது. குழந்தைகளுக்காக கேளிக்கை நிகழ்ச்சிகளும் இந்த பூங்காவில் அடிக்கடி ஏற்பாடு செய்யப்படுகின்றன.
இந்த பூங்காவிற்கு விஜயம் செய்ய எவ்வித நுழைவுக்கட்டணமும் இல்லை. இருப்பினும் பூங்காவின் உள்ளே அசுத்தப்படுத்தும் செயல்பாடுகள் கூடவே கூடாது என்று அறிவிப்புப்பலகை வாசலிலேயே பயணிகளை எச்சரிக்கிறது.



Click it and Unblock the Notifications