சென்னை புறநகர்களுக்கு பயணம் செய்யும் ரயில் பயணிகளும் குளுகுளு பயணத்தை அனுபவிக்க வேண்டும் என்பதற்காக ஏப்ரல் 19ம் தேதி முதல் புறநகர்களுக்கும் ஏசி வசதி உடனான மெமு ரயில் சேவைகளை தெற்கு ரயில்வே துவங்கியது. பிறகு பராமரிப்பு பணிகள் காரணமாக தற்காலிகமாக இந்த ரயில் சேவை சில நாட்களுக்கு நிறுத்தப்படுவதாக சொல்லப்பட்டு வந்த நிலையில், பணிகளின் கோரிக்கையை ஏற்று வார இறுதி நாட்களில் கூடுதல் ரயில் சேவைகளை இயக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

பயணிகளின் கோரிக்கையை ஏற்று தெற்கு ரயில்வே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. மே 2 முதல், தினமும் எட்டு முறை ஏசி ரயில் இயக்கப்படும். முன்னதாக, ஆறு முறை மட்டுமே இயக்கப்பட்டது. அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் பயணிகளின் தேவை அதிகரித்ததால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பயணிகளின் வசதிக்காக நேர அட்டவணையும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
பயணிகள் தொடர்ந்து ஏசி ரயில் சேவையை அதிகரிக்கக் கோரிக்கை வைத்தனர். குறிப்பாக, வேலைக்குச் சென்று திரும்புபவர்கள் அதிகாலையிலும், மாலையிலும் ஏசி ரயில் வேண்டும் என்று கேட்டனர். அவர்களின் கோரிக்கையை தெற்கு ரயில்வே நிறைவேற்றி உள்ளது. "பயணிகளின் வசதிக்காக, ஏசி மின்சார ரயில் சேவைகளின் நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இதனால், அதிக பயணிகள் பயனடைவார்கள்" என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

புதிய நேர அட்டவணைப்படி, காலை மற்றும் மாலை நேரங்களில் ஏசி ரயில் சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இது பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதனால், அவர்கள் வசதியாக பயணம் செய்ய முடியும். SR எனப்படும் தெற்கு ரயில்வே, பயணிகளின் வசதிக்காக தொடர்ந்து பல மாற்றங்களைச் செய்து வருகிறது. ஏசி ரயில் சேவையின் அதிகரிப்பு ஒரு நல்ல முயற்சி ஆகும்.
அதோடு வார இறுதி நாட்களில் மக்கள் கூட்ட நெரிசல் இன்றி பயணம் செய்வதற்காக சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே கூடுதலாக இரண்டு AC EMU சேவைகளும் துவங்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள புதிய மாற்றி அமைக்கப்பட்ட அட்டவணையின் படி AC EMU சேவை விபரம் இதோ...
- 49001 தாம்பரம் 06.50 - செங்கல்பட்டு 07.35, ஞாயிறு தவிர
- 49002 செங்கல்பட்டு 07.50 - சென்னை கடற்கரை 09.2,5 ஞாயிறு தவிர
- 49003 சென்னை கடற்கரை 09.41 - தாம்பரம் 10.36 ஞாயிறு தவிர
- 49004 தாம்பரம் 13.00 - சென்னை கடற்கரை 13.55 சனி தவிர
- 49005 சென்னை கடற்கரை 14.30 - செங்கல்பட்டு 16.00 சனிக்கிழமை தவிர
- 49006 செங்கல்பட்டு 16.30 - சென்னை கடற்கரை 18.00
- 49007 சென்னை கடற்கரை 18.17 - செங்கல்பட்டு 19.45
- 49008 செங்கல்பட்டு 20.10 - தாம்பரம் 20.50
- 49009 தாம்பரம் 17.10 - சென்னை கடற்கரை 18.05
- 49010 சென்னை கடற்கரை 18.17 - தாம்பரம் 19.12 ஞாயிற்றுக்கிழமை மட்டும்
49010 தாம்பரம்-சென்னை கடற்கரை தாம்பரத்தில் இருந்து 17.10 மணிக்கு புறப்பட்டு 18.05 மணிக்கு சென்னை கடற்கரையை அடையும். சனிக்கிழமைகளில் ஏசி ஈமு ரயில் எண். 49009 சென்னை கடற்கரை-தாம்பரம் சென்னை கடற்கரையில் இருந்து மாலை 4.17 மணிக்கு புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 4.12 மணிக்கு தாம்பரத்தை அடையும்.



Click it and Unblock the Notifications






