Search
  • Follow NativePlanet
Share
» »புதிதாக திறக்கப்பட்ட இந்தியாவின் முதல் கடல் பாலம் பெரிய சாதனை படைத்துள்ளது தெரியுமா?

புதிதாக திறக்கப்பட்ட இந்தியாவின் முதல் கடல் பாலம் பெரிய சாதனை படைத்துள்ளது தெரியுமா?

மிக உயரமான ரயில் பாலம், மிக உயரமான சிலைகள், மிகப்பெரிய கோவில்கள், மிக நீண்ட பாலம் என இந்தியர்களின் கட்டுமானம் உலகை திரும்பி நம் பக்கம் திரும்பி பார்க்க வைக்கிறது. இந்நிலையில் மும்பை மாநகரில் 21.8 கிமீ தூரத்திற்கு கட்டப்பட்டுள்ள மிக நீண்ட கடல் பாலம் அந்த வரிசையில் சேர்ந்துள்ளது. இந்தியாவின் மிக நீளமான கடல் பாலத்தை மும்பை டிரான்ஸ்-ஹார்பர் இணைப்பு (MTHL) அடல் சேது, ஏழு மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டதிலிருந்து, இன்று வரை மும்பையின் முக்கிய போக்குவரத்து அம்சமாக சேர்ந்துள்ளது. வெறும் ஏழே மாதத்தில் இந்த அடல் பாலம் மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது!

மும்பையில் போக்குவரத்து நெரிசலைக் குறைத்த அடல் சேது

அடல் சேது மும்பையில் உள்ள செவ்ரியை நவி மும்பையில் உள்ள நவா ஷேவாவுடன் இணைக்கிறது, இது தெற்கு மும்பை மற்றும் பன்வெல், புனே மற்றும் நவி மும்பை போன்ற முக்கிய இடங்களுக்கு இடையிலான பயண நேரத்தை கணிசமாகக் குறைக்கிறது. பாலத்தின் அதிக பயன்பாடு போக்குவரத்தை நிர்வகிப்பதற்கும் பிராந்தியத்தின் ஒட்டுமொத்த இணைப்பை மேம்படுத்துவதற்கும் அதன் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

வேகமான பயணத்திற்கு உறுதியளித்த பாலம்

கூடுதலாக, சிர்லே இன்டர்சேஞ்ச் மற்றும் மும்பை-புனே விரைவுச்சாலைக்கு இடையே ஒரு உயர்த்தப்பட்ட சாலையின் மேம்பாடு, தெற்கு மும்பை, மேற்கு புறநகர் பகுதிகள், நவி மும்பை, பன்வெல், புனே மற்றும் மும்பை-கோவா நெடுஞ்சாலை ஆகியவற்றுக்கு இடையே இன்னும் வேகமான பயணங்களை உறுதியளிக்கிறது.

atalsetu

ஏழு மாதத்தில் மிகப்பெரிய சாதனை செய்த அடல் சேது

ஜனவரி 12ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்ட இந்தப் பாலம் மறுநாள் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டது. மும்பையில் உள்ள அடல் சேது மனதைக் கவரும் சாதனை படைத்துள்ளது. மும்பைக்கும், இந்த பாலத்திற்கும் இது ஒரு பெரிய சாதனை அல்ல. ஏழு மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டதிலிருந்து, மும்பையை நவி மும்பையுடன் இணைக்கும் இந்தியாவின் மிக நீளமான கடல் பாலம், மும்பை பெருநகரப் பகுதி மேம்பாட்டு ஆணையத்தின் (MMRDA) படி, 5 மில்லியனுக்கும் அதிகமான வாகனங்களால் பயன்படுத்தப்பட்டது.

atlasetu best view

7 மாதங்களில் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள்

மும்பை டிரான்ஸ் ஹார்பர் லிங்க், அதிகாரப்பூர்வமாக அடல் சேது என்று பெயரிடப்பட்டு, மும்பையிலிருந்து நவி மும்பையை இணைக்கும் இந்தியாவின் மிக நீளமான கடல் பாலமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது, ஜனவரி 2024 இல் திறக்கப்பட்டதில் இருந்து குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது. மும்பை பெருநகரப் பகுதி மேம்பாட்டு ஆணையம் (எம்எம்ஆர்டிஏ) கடந்த 7 மாதங்களில் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் கடந்து சென்றதாக அறிவித்துள்ளது.

ஒரு நாளைக்கு சராசரியாக 22,00 கடந்து சென்றுள்ளன

MMRDA செய்தித் தொடர்பாளர் கூறுகையில், இந்த பாலத்தில் 47.40 லட்சம் கார்கள், 50,020 மினிபஸ்கள் மற்றும் இலகுரக வாகனங்கள், 59,799 இரட்டை அச்சு வாகனங்கள், 73,074 மூன்று ஆக்சில் வாகனங்கள், 80,277 நான்கு முதல் 6 ஆக்சில் வாகனங்கள் மற்றும் 503 ஓவர் வாகனங்கள் கடந்து சென்றுள்ளன. இது 227 நாட்களில் ஒரு நாளைக்கு சராசரியாக 22,000 வாகனங்கள் சென்றதற்கு சமம்.

atalsetu night

இந்திய போக்குவரத்து துறையில் ஒரு மைல்கல்

21.8 கிலோமீட்டர் நீளமுள்ள அடல் சேது இந்தியாவின் மிக நீளமான கடல் பாலமாகவும், உலகளவில் 12வது பெரிய பாலமாகவும் உள்ளது. ரூ.17,840 கோடிக்கும் அதிகமான செலவில் கட்டப்பட்ட இந்த பொறியியல் அற்புதம் தெற்கு மும்பை மற்றும் நவி மும்பை இடையேயான இணைப்பை கணிசமாக மேம்படுத்தியுள்ளது. இந்த பாலத்தை இந்திய போக்குவரத்து துறையில் ஒரு மைல்கல் என்று தான் சொல்ல வேண்டும்!

More News

    Read more about: travel news mumbai atal setu
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+