Search
  • Follow NativePlanet
Share
» »இனி விமான நிலையத்திற்கு ஹெலிகாப்டர் டாக்சியில் செல்லலாம்!

இனி விமான நிலையத்திற்கு ஹெலிகாப்டர் டாக்சியில் செல்லலாம்!

ஆட்டோ, ரிக்ஷா, கார்கள் ஏன் சொகுசு கார்களில் கூட டாக்சிகள் வந்துவிட்டன. இப்போது நீங்கள் கேள்விப்படப்போவது, அதைவிட பெரிது.

ஆம் ஹெலிகாப்டரில் டாக்சி வந்துவிட்டது! ஆஹா! கேக்கவே வியப்பாக இருக்கிறதே, சவாரி செய்தால் எப்படி இருக்கும் என்று தானே யோசிக்கிறீர்கள்? இதோ முழு தகவல்களும் உங்களுக்காக!

நெரிசல் நிறைந்த பெங்களூரு நகரம்

நெரிசல் நிறைந்த பெங்களூரு நகரம்

பெங்களூர் நகரம் முழுவதும் போக்குவரத்து நெரிசலுக்கு பெயர் பெற்றது என்பது நாடறிந்த உண்மையாகும். சில சமயங்களில், இருசக்கர வாகனங்கள் எடுப்பதையோ அல்லது கார்கள் எடுப்பதையோ தாண்டி, சேர வேண்டிய இடத்திற்கு செல்ல நடைப்பயிற்சி சிறந்த தீர்வாகவே தோன்றுகிறது என்பதே உண்மை, இது சார்பாக சமூக வலைதளங்களில் பலர் மீம்ஸ் மற்றும் போஸ்ட் போடுவதை கூட நாம் பார்த்து இருப்போம்.

பெங்களூர் நகரில் அருகில் இருக்கும் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு மேல் எடுக்கிறதாக பெங்களூர் வாசிகள் கூறுகின்றனர். இதனால் பல சிக்கல்களையும் சங்கடங்களையும் அவர்கள் சந்திப்பதாக கூறுகின்றனர்.

இதோ வந்துவிட்டது - விமான டாக்சி

இதோ வந்துவிட்டது - விமான டாக்சி

இந்த அதிகப்படியான போக்குவரத்து நெரிசலால் பலர் தங்கள் விமானங்களைக் கூட அடிக்கடி தவறவிடுகின்றனர். இந்த நெரிசலை முறியடிக்கும் வகையில் பெங்களூரு மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளில் ஹெலிகாப்டர்களை இயக்கும் BLADE என்ற நிறுவனம் அக்டோபர் 10 ஆம் தேதி முதல் பெங்களூரின் HAL விமான நிலையத்திலிருந்து தேவனஹள்ளியில் அமைந்துள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு ஹெலிகாப்டர் டாக்சியை தொடங்கவுள்ளது.

விரைவில், ஒயிட்ஃபீல்ட் மற்றும் எலக்ட்ரானிக் சிட்டி போன்ற கூடுதல் வழிகளும் சேவையில் சேர்க்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்தில் ஒரு மடங்காக குறையும் பயண நேரம்

பத்தில் ஒரு மடங்காக குறையும் பயண நேரம்

பெங்களூரு போக்குவரத்து நெரிசலில் சிக்கி பெங்களூரின் HAL விமான நிலையத்திலிருந்து கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு செல்ல குறைந்தது இரண்டு மணி நேரம் ஆகிறது. ஆனால் இந்த ஹெலிகாப்டர் சேவை மூலம் நீங்கள் வெறும் 15 நிமிடங்களில் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு சென்றிடலாம்.

சர்வதேச விமான நிலையத்திற்கு ஹெலிகாப்டர் சேவைகள் வாரத்தில் ஐந்து நாட்கள் செயல்படும் என்றும், ஒரு பயணிக்கான கட்டணம் ரூ. 3,250ஆகா வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக நீங்கள் இனி பெங்களூர் சர்வதேச விமான நிலையத்திற்கு ஹெலிகாப்டரில் பறக்கலாம்! ஹெலிகாப்டர் சேவையின் மூலம் போக்குவரத்து நெருக்கடியை சற்று குறையும், பயணம் எளிதாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read more about: bangalore karnataka
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X