Search
  • Follow NativePlanet
Share
» »மதுரை மக்களுக்கு செம நியூஸ் – கூடிய விரைவில் மெட்ரோ நகரமாக மாறப்போகும் மதுரை!

மதுரை மக்களுக்கு செம நியூஸ் – கூடிய விரைவில் மெட்ரோ நகரமாக மாறப்போகும் மதுரை!

தமிழகத்தின் கலாச்சார தலைநகரமான மதுரையை கூடிய விரைவில் மெட்ரோ அலங்கரிக்கப்போகிறது! மதுரை மெட்ரோ திட்டம் தமிழ்நாட்டின் மதுரையில் நகர்ப்புற இயக்கத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு குறிப்பிடத்தக்க முயற்சியாகும். முன்மொழியப்பட்ட நெட்வொர்க் திருமங்கலத்திலிருந்து ஒத்தக்கடையை இணைக்கும் என்று கூறப்படுகிறது, தோராயமாக 31.9 கிலோமீட்டர் தொலைவை உள்ளடக்கிய இந்த மெட்ரோ சேவை மொத்தம் 17 நிலையங்களை உள்ளடக்கியது!

மதுரையில் கூடிய விரைவில் மெட்ரோ

தமிழ்நாட்டின் கலாச்சார தலைநகராக விளங்கும் மதுரையில் சுற்றிப் பார்ப்பதற்கு பல இடங்களும், தெரிந்துக் கொள்வதற்கு பல விஷயங்களும் உள்ளன. மதுரையில் விமானம், ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்து ஆகியவை மிக சீரான முறையில் இருந்தாலும், மெட்ரோ சேவை இன்னமும் அந்த பட்டியலில் இடம் பெறவில்லை. ஆனால் அந்த குறை இப்போது தீர்ந்துவிட்டது. கூடிய விரைவில் நீங்கள் மதுரை மாநகரின் அழகை மெட்ரோவில் பயணம் செய்து ஆராயலாம். அதனைப் பற்றிய விரிவான தகவல்கள் இதோ!

Metro

சென்னையில் கலக்கி வரும் மெட்ரோ சேவை

சென்னையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையிலும், நவீன மற்றும் சொகுசு போக்குவரத்து அம்சமாகவும் மெட்ரோ ரயில் சேவை செயல்பட்டு வருகிறது. இதனை பல்வேறு வழித்தடங்களில் விரிவுபடுத்தும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. சென்னை மெட்ரோ ரயில் முதல் கட்ட திட்டம் 54.1 கி.மீ தொலைவிற்கு விம்கோ நகர் முதல் சென்னை விமான நிலையம் வரை, சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரை என இரண்டு வழித்தடங்களில் முழுமையாக செயல்பாட்டில் உள்ளது.

இரண்டாம் கட்ட பணிகள் தீவிரம்

இந்நிலையில், 2-வது கட்ட மெட்ரோ பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகிறது. ரூ.69,180 கோடி செலவில், 118.9 கிலோ மீட்டர் நீளத்திற்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தப் பணிகள் அனைத்தும் 2026-ம் ஆண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இரண்டாம் நிலை நகரங்களில் மெட்ரோ ரயில் சேவையை கொண்டு வர தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்த பட்டியலில் கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட நகரங்கள் இடம்பெற்றுள்ளன.

Metro

மதுரையில் முதற்கட்ட ஆய்வு முடிவு

மதுரையில் மெட்ரோ நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்ட நிலையில் முதற்கட்டமாக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் மதுரையில் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்க ரூ.11,340 கோடியில் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. பூர்வாங்கா பணிகள் குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன சார்பாக மெட்ரோ ரயில் திட்ட இயக்குனர் அர்ஜுனன் தலைமையில் மதுரை ரயில்வே தண்டவாளம் அடியை மெட்ரோ சுரங்கம் பாதை அமைப்பதற்கான சாத்திய கூறுகள் இருக்கின்றதா என குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

மொத்தமாக மதுரையில் 17 மெட்ரோ நிலையங்கள்

மெட்ரோ சுரங்க பாதை மதுரையில் ஆறு கிலோ மீட்டர் தூரம் அமைக்க கடினமாக இருக்கலாம் எனவும் பாறைகள் மிகுந்து காணப்படுகின்றது அதனால் எந்த ஒரு பாதிப்பும் பொதுமக்களுக்கு ஏற்படாது மெட்ரோ பணிகள் நிலம் கையாக படுத்தவும் எந்த ஒரு தாமதமும் ஏற்படாது எனவும் தெரிவித்தார். 17 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில் அவற்றை எண்ணிக்கையில் வேண்டுமானால் மாறுபாடு ஏற்படலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

எங்கே எல்லாம் மெட்ரோ நிலையங்கள்

வைகை ஆறு, மீனாட்சியம்மன் கோவில், கடந்து ஆண்டாள்புரத்தில் முடிவடையும். அங்கிருந்து மேல் எழும்பி திருப்பரங்குன்றம் வழியாக திருமங்கலம் வரை சுமார் 32 கிலோமீட்டர் தூரத்திற்கு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது ஆண்டாள்புரத்தில் இருந்து திருப்பரங்குன்றம் வழியாக செல்லும் இந்தப் பாதையில் மெட்ரோ ரயில் இயக்கப்படுகின்றது. திருமங்கலம், கப்பலூர் டோல் பிளாசா, தர்மத்துப்பட்டி, தோப்பூர், திருநகர், திருப்பரங்குன்றம், பசுமலை, வசந்தா நகர், மதுரா கல்லூரி, மதுரை சந்திப்பு, சிம்மக்கல், கீழவாசல், தெற்குவாசல், கோரிப்பாளையம், போலீஸ் கமிஷனர் அலுவலகம், கே. புதூர், மாட்டுத்தாவணி, உத்தங்குடி, உயர்நீதிமன்ற பெஞ்ச் மற்றும் ஒத்தக்கடை ஆகிய பகுதிகள் வழியாக இந்த மெட்ரோ செயல்படும்.

முதற்கட்ட ஆய்வு முடிவடைந்த நிலையில், கூடிய விரைவில் பணிகள் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

    Read more about: madurai news
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+