நிலவின் தென் துருவத்தில் ஒரு வெற்றிகரமான 'மென்மையான தரையிறக்கத்தை' அடைந்த பிறகு, சூரியனை ஆய்வுச் செய்ய ஆதித்யா-1 விண்கலத்தை அனுப்பியது. இந்தியா இப்போது ஆழ்கடல் ஆய்வு மற்றும் பல்லுயிர் மதிப்பீடுகளுக்காக கடலுக்குள் 6 கிமீ ஆழத்திற்கு மூன்று மனிதர்களை ஏற்றி செல்லும் 'மத்ஸ்யா 6000' எனும் நீர்மூழ்கி கப்பலை தயாரித்து வருகிறது. இதன் மூலம் உலக நாடுகளின் கவனம் இந்தியாவின் மேல் திரும்பியுள்ளது!
ஆழ்கடலை ஆய்வுச்செய்ய மத்ஸ்யா 6000
மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, ஆளில்லா நீர்மூழ்கிக் கப்பல் மத்ஸ்யா 6000 இன் வீடியோ மற்றும் படங்களை ட்வீட் செய்தார். அப்போதிலிருந்து மத்ஸ்யா 6000 இன் படங்கள் சமூக வலைத்தளத்தில் அதிக அளவு பகிரப்பட்டு வருகின்றன. இது கடலின் ஆழத்தை ஆராயும் "சமுத்ராயன்" திட்டத்தின் ஒரு பகுதியாகும். சென்னையில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஓஷன் டெக்னாலஜி (NIOT) கப்பலை உருவாக்கி வருகிறது.

நவீன தொழில்நுட்பத்துடன் கடினமாக உருவாக்கப்படும் மத்ஸ்யா 6000
தற்போது வளர்ச்சியில் இருக்கும் இந்த வாகனம், 2.1 மீட்டர் விட்டம் மற்றும் 600 பார் அழுத்தத்தைத் தாங்கக்கூடிய 80 மிமீ தடிமன் கொண்ட டைட்டானியம் அலாய் ஸ்பியர் மூலம் தயாரிக்கப்ட்டுள்ளது. ஆழ்கடல் பயணத்தின் ஒரு பகுதியாக, அரிய கனிமங்களுக்காக ஆழ்கடல்களை ஆராய்வதற்காக இந்தியக் குழுவின் ஆழமான நீரில் மூழ்கும் வாகனமான மத்ஸ்யா 6000 பயன்படுத்தப்படும்.
இந்தியாவின் முதன் முதல் கடல் ஆய்வு பயணம்
இது இந்தியாவின் முதல் மனித கடல் ஆய்வு பணியாக இருக்கும். உண்மையில், நீருக்கு அடியில் 6,000 மீட்டர் வரை கோள வாகனத்தில் மனிதர்களால் பயணிக்க முடியும். இருப்பினும், முதல் நீருக்கடியில் உல்லாசப் பயணம் 500 மீட்டர் நீளம் மட்டுமே இருக்கும். அதற்கு கீழே ஆய்வுகளுக்காக மட்டுமே அழைத்து செல்லப்படும் என்றும் இந்த ஆய்வுகள் எதுவும் கடல் வாழ்விடத்தையும், கடல்வாழ் உயிரினங்களை பாதிக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த இந்தியா
வெற்றிகரமாக சந்திரயானை நிலவில் தரையிறக்கியதன் மூலம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த இந்தியா, அடுத்ததாக சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா-1 விண்கலத்தை அனுப்பியது. இதன் பரப்பரப்பு அடங்குவதற்குள் சமுத்ராயன் மிஷனின் கீழ் உருவாக்கி வரும் மத்ஸ்யா 6000 நீர்மூழ்கி கப்பலின் போட்டோ மற்றும் வீடியோவை பகிர்ந்து அனைவரையும் ஆச்சர்யத்திற்குள்ளாக்கியுள்ளது.
மூன்று பேர் வரை பயணிக்கலாம்
ஆழ்கடல் வளங்களை ஆராய்வதற்கும் கடல் பல்லுயிர் பெருக்கத்தை மதிப்பிடுவதற்கும் மூன்று பேர் இந்தியாவின் முதல் ஆள்களைக் கொண்ட ஆழ்கடல் பணியான சமுத்ராயனில் அனுப்பப்படுவார்கள். இது இந்தியாவின் கான்டினென்டல் ஷெல்ஃப் மற்றும் பிரத்யேக பொருளாதார மண்டலங்களுக்கு முக்கியத்துவம் அளித்து ஆழ்கடல் ஆய்வுகளை நடத்துவதற்கான இந்திய முயற்சியாகும்.

புது புது விஷயங்கள் கண்டுபிடிக்கப்படும்
திட்டத்தின் ஒரு பகுதியாக ஏராளமான குழுக்கள் மற்றும் பணியாளர்கள் இல்லாத நீர்மூழ்கிக் கப்பல்கள் கடல் தளத்தை ஆராயும். தாதுக்களால் ஆன பாலிமெட்டாலிக் முடிச்சுகளின் ஆய்வு மற்றும் பிரித்தெடுத்தல் பணியின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும். கனிமங்களில் மாங்கனீசு, நிக்கல், கோபால்ட், தாமிரம் மற்றும் இரும்பு ஹைட்ராக்சைடு ஆகியவை அடங்கும். இதன் மூலம் கடலின் ஆழத்தை பற்றி நமக்கு தெரியாத பல விஷயங்கள் நமக்கு தெரிய வரும்.
2026 இல் மத்ஸ்யாவின் முதல் பயணம்
பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையான 'ப்ளூ எகானமி'யை இந்த மத்ஸ்யா 6000 ஆதரிக்கிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், வாழ்வாதாரம் மற்றும் வேலைவாய்ப்பை மேம்படுத்துவதற்கும், கடல் சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கும் கடல் வளங்களை நிலையான முறையில் பயன்படுத்துவதை இதன் நோக்கமாகும். அனைத்து பணிகளும் முடிந்த பிறகு 2026 ஆண்டு முடிவடைவதற்குள் மத்ஸ்யா 6000 இல் மனிதர்கள் பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications





