Search
  • Follow NativePlanet
Share
» » திருமலை திருப்பதியில் அறிமுகப்படுத்தப்படும் புதிய ஆன்லைன் பரிவர்த்தனை வசதிகள் என்ன தெரியுமா?

திருமலை திருப்பதியில் அறிமுகப்படுத்தப்படும் புதிய ஆன்லைன் பரிவர்த்தனை வசதிகள் என்ன தெரியுமா?

உலகப்புகழ் பெற்ற திருமலையான் கோவிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். வருகின்ற பக்தர்களில் பாதி பேர் முன்கூட்டியே டிக்கெட் புக் செய்தும், மீதி பாதி பேர் திருமலைக்கு வந்த பின்னர் ஆதார் டிக்கெட்டுகள் வாயிலாகவும், இலவச தரிசனம் வழியாகவும் சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

இந்நிலையில் இந்தியா முழுவதும் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான கோவில்கள் மற்றும் துணைக் கோவில்களில் இனி பக்தர்கள் பணமாக அல்லாமல் போன்பே (PhonePe), கியூ ஆர் கோட் (QR Code scan) போன்ற UPI செயலிகளை பயன்படுத்தி பணம் செலுத்தும் வசதிகளை அறிமுகப்படுத்தவுள்ளது. இதன் மூலம் பக்தர்கள் எளிதாக போன் மூலம் பரிவர்த்தனை செய்து உடனே அகர்பத்திகள், பஞ்சகவ்யா பொருட்கள், தேவஸ்தான டைரிகள் மற்றும் காலண்டர்களை வாங்கி மகிழலாம். பணம் எடுக்க ATM தேடி ஓட வேண்டிய அவசியமில்லை!

1

கூடிய விரைவில் UPI payment வசதி

வெங்கடேச பெருமாளை தரிசிக்க சேவா டிக்கெட்டுகள், திருமலையில் விற்கும் அகர்பத்திகள், பஞ்சகவ்யா பொருட்கள், தேவஸ்தான டைரிகள் மற்றும் காலண்டர்களை நீங்கள் வாங்கும் வேண்டும் என்றால் பண பரிவர்த்தனை மட்டுமே செய்து அவற்றை வாங்க வேண்டும் என்ற சூழல் நீடித்து வருகிறது. ஆனால் இப்போது PhonePe, QR Code scan, GPay போன்ற UPI payment செயலிகளை பயன்படுத்தி ஆன்லைனில் பணம் செலுத்தும் வசதிகள் செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பக்தர்கள் சிரமின்றி பொருட்களை வாங்கவே இந்த முடிவு

மேல் திருப்பதி மற்றும் கீழ் திருப்பதியில் ஏற்கனவே பக்தர்கள் நேரடியாக சென்று ரூம் புக்கிங் செய்ய ஆன்லைனில் பணம் செலுத்தும் வசதி நடைமுறையில் இருந்து வரும் நிலையில் தற்போது மற்ற சேவைகளுக்கும் ஆன்லைன் பணம் செலுத்தும் வசதி வரவுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் தேவஸ்தானத்துடன் இணைந்த மற்ற இணைந்த கோவில்களிலும் பக்தர்கள் பண பரிவர்த்தனைகள் சிரமிமின்றி செய்ய ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளது.

2

பக்தர்களுக்கான அறிவிப்பு பலகைகள்

அதே போல தேவஸ்தான கோவில்களில் நடந்து வரும் வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்க பொறியியல் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தான வெப்சைட் மற்றும் தேவஸ்தான டிவி சேனலான SVBC டிவி மூலமாகவும், திருப்பதி ரயில் நிலையம் மற்றும் பக்தர்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்களிலும் திருமலை திருப்பதி தேவஸ்தான கோவில்கள் பற்றி தெரிவிக்க பலகைகள் வைக்கப்படவுள்ளது. இதனால் கோவில்களில் நடக்கும் நிகழ்வுகள் மற்றும் அறிவிப்புகள் பக்தர்கள் உடனுக்குடனேயே தெரிந்துக் கொள்ளலாம். எந்த சிரமுமின்றி சுவாமி தரிசனம் செய்ய இது வழி வகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3

தேவஸ்தான தூய்மையில் பக்தர்களுக்கும் பங்கு உண்டு

தேவஸ்தானத்தின் உள்ளூர் கோவில்களிலும் கல்யாண உற்சவம் உள்ளிட்ட ஆர்ஜித சேவைகள் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இது குறித்த விரிவான அறிக்கையை வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தேவஸ்தான கோவில்களின் பசுமை மற்றும் தூய்மையை பாதுகாப்பது பக்தர்களின் கடமையும் கூட, அவர்களுக்கும் அதில் பங்கு உள்ளது என தேவஸ்தானம் பகதர்களுக்கு அறிவுறுத்துகிறது.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அனைத்து கோவில்களிலும் பக்தர்களுக்கு சுகாதார வசதிகள் செய்து தருவதில் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

More News

    Read more about: travel news tirupati
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+