Search
  • Follow NativePlanet
Share
» »ஊட்டி, கொடைக்கானல் போல் கூர்க்கில் இ-பாஸ் கொண்டு வர முடியாது...ஏன் தெரியுமா?

ஊட்டி, கொடைக்கானல் போல் கூர்க்கில் இ-பாஸ் கொண்டு வர முடியாது...ஏன் தெரியுமா?

கோடை காலம், விடுமுறை, சுற்றுலா என்றாலே அனைவரும் இயற்கை அழகு சூழ்ந்த, அமைதியான, மனதிற்கும், உடலுக்கு குளுமையாக இருக்கும் மலைப் பிரதேசங்களுக்கு தான் செல்ல நினைப்பார்கள். இப்படி சுற்றுலா பயணிகள் அதிகம் துவங்கியதால் தமிழகத்திலுள்ள பிரபலமான மலைப் பிரதேசங்களான் ஊட்டி, கொடைக்கானலில் இ பாஸ் அமல்படுத்தப்பட்டது. கோவிட் சமயத்தில் கொண்டு வரப்பட்ட இந்த இ பாஸ் முறை, தற்போதும் தொடர்ந்து வருகிறது.

Coorg

ஊட்டி மற்றும் கொடைக்கானல் போன்ற தமிழகத்தின் முக்கியமான மலைப் பிரதேசங்களில் சுற்றுலா வாகனங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இ-பாஸ் முறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஓவர்-டூரிசத்தை கட்டுப்படுத்த முடிகிறது. அதே போல் கர்நாடக மாநிலத்தின் பிரபலமான மலைப்பகுதியான குடகு (கூர்க்) சுத்தமும் அமைதியும் நிறைந்த ஓர் அழகிய இயற்கை சுற்றுலா மையமாக திகழ்கிறது. இங்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வருடம் முழுவதும் வருவதுண்டு. ஆனால் இங்கு இ-பாஸ் முறை ஏன் செயல்படுத்த முடியாது. இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. வாங்க அந்த காரணங்களை தெரிந்து கொள்ளலாம்.

Coorg

கூர்க்கிங் இ பாஸ் ஏன் அமல்படுத்த முடியாது ?

1. நிர்வாக ஆட்சி மற்றும் சட்ட வரம்புகள்:

ஊட்டி மற்றும் கொடைக்கானல் இரண்டும் தமிழ்நாட்டின் சுற்றுலா மையங்கள். தமிழ்நாடு அரசின் சுற்றுலா துறை மற்றும் காவல் துறைக்கு உள்ளூர் நிர்வாகத்தில் முழு அதிகாரம் உள்ளது. ஆனால் குடகு கர்நாடகாவின் ஒரு சிறப்பு நிர்வாக மாவட்டம், இங்கு சுற்றுலா அனுமதிகளை கட்டுப்படுத்துவதற்கான சட்ட, நிர்வாக அனுமதிகள் தற்போது இல்லாமல் உள்ளது.

2. வழித்தடம் மற்றும் நுழைவாயில்கள் பல:

ஊட்டி அல்லது கொடைக்கானலுக்கு செல்ல ஒரு சில முக்கிய சாலைகள் மட்டுமே உள்ளன. ஆனால் கூர்க்கிற்கு செல்வதற்கான பல நுழைவுப் பாதைகள் உள்ளன . கேரளா, கர்நாடகா, மற்றும் பல அருகிலுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த சாலைகள். இவற்றில் ஒவ்வொன்றிலும் கட்டுப்பாடுகள் விதிப்பது சவாலானது. ஒரு மைய முறை நிர்வாகம் இல்லாததால், ஒரு ஈ-பாஸ் முறை ஒருங்கிணைக்க முடியாது.

3. உள்ளூர் மக்கள் வாழ்வியல்

கூர்க்கில் பெரும்பான்மையான மக்கள் விவசாயம் மற்றும் சுற்றுலா சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு ஈ-பாஸ் முறை அமல்படுத்தப்படும் போது, உள்ளூர் மக்களின் அன்றாட போக்குவரத்தும் பாதிக்கப்படலாம். தொழில், கல்வி, மருத்துவம் போன்ற துறைகளில் பயணிகள் அனுமதியை பதிவு செய்வது ஒரு சிரமமான செயல்முறையாக மாறும்.

4. சுற்றுலா வருமானம் மீது தாக்கம்

கூர்க்கின் பெரும்பான்மையான வருவாய் சுற்றுலாவிலிருந்து வருகின்றது. ஒரு கட்டுப்பாடான இ-பாஸ் முறை, பயணிகளின் எண்ணிக்கையை குறைத்து, சிறிய ஹோட்டல்கள், ஹோம்ஸ்டேஸ்கள் மற்றும் உள்ளூர் வணிகங்களை பாதிக்கும் அபாயம் உள்ளது. வணிகர்கள் இதற்கெதிராகக் குரல் கொடுக்கிறார்கள்.

5. சுற்றுச்சூழல் கட்டுப்பாடுகள்

கூர்க்கில் ஏற்கனவே சில சுற்றுச்சூழல் விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றன. உதாரணத்திற்கு, பல பகுதிகளில் பிளாஸ்டிக் தடை, வன பகுதிகளில் கட்டுப்பாடுகள் மற்றும் அகழ்வாராய்ச்சி அனுமதி சட்டங்கள் உள்ளன.

இ பாஸ் முறை, ஒழுங்கமைக்கப்பட்ட சுற்றுலாவிற்காக ஒரு நல்ல முயற்சி எனினும், ஒரே மாதிரியான திட்டங்களை அனைத்து இடங்களிலும் அமல்படுத்த முடியாது. குடகு என்பது தனித்துவமிக்க பண்பாட்டு, புவியியல் அமைப்பைக் கொண்டது. இங்கு இ-பாஸ் முறை அமைக்கப்பட வேண்டுமா அல்லது இல்லை என்ற தீர்மானம், பல தரப்புகளின் ஆலோசனையின் பிறகு மட்டுமே எடுக்கப்பட வேண்டும்.

More News

    Read more about: coorg bangalore karnataka
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+