Search
  • Follow NativePlanet
Share
» »அமெரிக்காவில் திறக்கப்படும் உலகின் 2 ஆவது மிகப்பெரிய இந்து கோவில் – 183 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டம்!

அமெரிக்காவில் திறக்கப்படும் உலகின் 2 ஆவது மிகப்பெரிய இந்து கோவில் – 183 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டம்!

அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள டைம்ஸ் சதுக்கத்திற்கு தெற்கே 60 மைல் தொலைவில் நியூ ஜெர்சியின் சிறிய ராபின்ஸ்வில்லி டவுன்ஷிப்பில் 183 ஏக்கர் பரப்பளவில், புது டெல்லியில் இருப்பதை போன்ற மிகப்பெரிய பிரமாண்டமான அக்ஷர்தாம் கோவில் கட்டப்பட்டுள்ளது. பரப்பளவில் கம்போடியாவின் அங்கோர்வாட் கோயிலுக்கு அடுத்தப்படியாக உள்ளதால் அமெரிக்காவின் அக்ஷர்தாம் உலகின் 2 ஆவது மிகப்பெரிய இந்து கோயில் என்ற பெருமையைப் பெற்றுள்ளது!

அற்புத கட்டமைப்பை கொண்டுள்ள அக்ஷர்தாம்

அக்ஷர்தாம் எனப்படும் அற்புதமான மகாமந்திர் அல்லது பிரமாண்ட கோவில், 19 ஆம் நூற்றாண்டிலிருந்து மதிக்கப்படும் இந்து ஆன்மீகத் தலைவரான பகவான் சுவாமிநாராயணனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த கோவில் ஏற்கனவே புது டெல்லியில் 100 ஏக்கர் பரப்பளவில் மிக பிரமாண்டமாக அமைந்துள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது. இது அவரது 5 வது ஆன்மீக வாரிசான மதிப்பிற்குரிய துறவி பிரமுக் சுவாமி மஹாராஜின் உத்வேகத்தால் கட்டப்பட்டதுள்ளது. இப்போது இந்த கோவில் அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் கட்டப்பட்டுள்ளது.

1

183 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டம்

ராபின்ஸ்வில்லியில் அமைக்கப்பட்டுள்ள BAPS சுவாமிநாராயண் அக்ஷர்தாம், 183 ஏக்கர் பரப்பளவில், வட அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த 12,500க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களால் கட்டப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் ஆயிரமாண்டுக்கும் மேலாக நிலைத்து நிற்கும் வகையில் ஒரு இணையற்ற அடையாளத்தை உருவாக்கியுள்ளனர்.

நுணுக்கமாக வேலைப்பாடுகள் செய்த தன்னார்வலர்கள்

ஐரோப்பாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து கற்கள் பெறப்பட்டு இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டு, சோதனை செய்யப்பட்டன. பின்னர், கல் துண்டுகள் அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டன, அங்கு இந்தியாவைச் சேர்ந்த தன்னார்வ கைவினைஞர்களின் வழிகாட்டுதலின் கீழ் பல்வேறு தன்னார்வத் தொண்டர்கள் ஒன்று கூடி கோயிலில் வேலைப்பாடுகள் செய்தனர்.

இந்திய பாரம்பரியத்தை எடுத்துக்காட்டும் சிற்பங்கள்

அமெரிக்காவின் அக்ஷர்தாமின் உள்ளே அமைக்கப்பட்டுள்ள நுணுக்கமான கல் சிற்பங்கள் மற்றும் சிலைகள் இந்திய இசை, நடனம் மற்றும் கலை நிகழ்ச்சிகளின் நீடித்த பாரம்பரியத்தை கலை ரீதியாக சித்தரிக்கின்றன. கூடுதலாக, அவை இந்தியாவிற்கும் இந்து மதத்திற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்த மதிப்பிற்குரிய முனிவர்கள், துறவிகள் மற்றும் ஆன்மீக பிரமுகர்களுக்கு மரியாதை செலுத்துகின்றன.

2

உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட கற்கள்

சுண்ணாம்பு, கிரானைட், இளஞ்சிவப்பு மணற்கல் மற்றும் பளிங்கு உட்பட கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் கன அடி கல் அதன் கட்டுமானத்திற்காக பயன்படுத்தப்பட்டது. அவை இந்தியா, துருக்கி, கிரீஸ், இத்தாலி மற்றும் சீனா உட்பட உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து பெறப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் 2 ஆவது மிகப்பெரிய இந்து கோவில்

நியூ ஜெர்சியின் ராபின்ஸ்வில்லி டவுன்ஷிப்பில் அமைந்துள்ள இந்த கோவில், 500 ஏக்கர் பரப்பளவில் உள்ள யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமான கம்போடியாவில் உள்ள அங்கோர் வாட்டிற்கு அடுத்ததாக இரண்டாவது பெரிய கோவில் என்ற கூறப்படுகிறது. ஏனெனில் அங்கோர் வாட் கோயிலின் பரப்பளவு 400 ஏக்கர், அதற்கு அடுத்ததாக 183 ஏக்கரில் இந்த அக்ஷர்தாம் கோயில் அமைக்கப்பட்டுள்ளது.

மொத்தமாக 13 சன்னதிகள்

இந்த கோயிலில் முக்கிய சன்னதி தவிர, 12 துணை கோவில்கள், ஒன்பது ஷிகர்கள் (கோபுரம் போன்ற கட்டமைப்புகள்) மற்றும் ஒன்பது பிரமிடு ஷிகர்கள் உள்ளன. இது பாரம்பரிய கல் கட்டிடக்கலையின் மிகப்பெரிய நீள்வட்ட குவிமாடத்தையும் கொண்டுள்ளது.

அக்டோபர் 8 ஆம் தேதி திறக்கப்படும் அக்ஷர்தாம்

கோவிலில், 'பிரம்ம குண்ட்' எனப்படும் பாரம்பரிய இந்திய படிக்கட்டுக்கிணறு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. அதில் உலகம் முழுவதும் உள்ள 300 நீர்நிலைகளில் இருந்து கொண்டுவரப்பட்ட நீர் ஊற்றப்பட்டுள்ளது. நியூ ஜெர்சியில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் இருந்து தெற்கே 90 கிமீ தொலைவில் அமைந்துள்ள BAPS சுவாமிநாராயண் அக்ஷர்தாம் அக்டோபர் 8 ஆம் தேதி முறையாகத் திறக்கப்படும். நீங்கள் அமெரிக்காவில் இருந்தால் இந்த கோவிலுக்கு சென்று வாருங்கள்!

More News

    Read more about: travel news
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+