Search
  • Follow NativePlanet
Share

பிலானி - சான்றோர்களை உருவாக்கும் நகரம்

7

இந்தியாவின் முதன்மையான கல்வி நிறுவனங்களை தன்னகத்தே கொண்ட பெருமை வாய்ந்த பிலானி நகரம், ராஜஸ்தானின் சேக்காவதி பகுதிகளில் அமைந்திருக்கிறது. இந்த நகரம் பிலானிய கோத்ரத்தை சேர்ந்த ஜட் மாவீரர்களின் நினைவாக பிலானி என்று பெயர் பெற்றது.

இங்கு முன்பொரு காலத்தில் நடந்த கடும் போரில் கோட்டையை எதிரிகளிடமிருந்து காப்பாற்றும் பொருட்டு ஜட் மாவீரர்கள் தங்கள் இன்னுயரை கொடுத்தனர். அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவே இந்த நகரம் பிலானி என்று அழைகப்பட்டு வருகிறது.

பிலானி நகரம் தலைநகர் டெல்லியிலிருந்து 203 கிலோமீட்டர் தொலைவிலும், ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரிலிருந்து 205 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது. மேலும் இந்த நகரம் ராஜஸ்தானின் ஜூன்ஜூனு மாவட்டத்தின் நிர்வாகத்தின் கீழ் இருந்து வருகிறது.

பிலானி நகரில் நாட்டின் முக்கிய கல்வி நிறுவனங்கள் ஏராளமாக இருக்கின்றான். அதிலும் கடந்த ஐம்பது ஆண்டுகளில் இந்தியாவின் மிகச் சிறந்த பொறியியல் வல்லுனர்களை பெற்றுத்தந்த பெருமை வாய்ந்த பி.ஐ.டி.ஸ் பிலானி கல்வி நிறுவனம் பிலானி நகரில்தான் உள்ளது.

இதுதவிர பி.கே பிர்லா இன்ஸ்டிட்யூட் ஆப் இஞ்சினியரிங் அண்ட் டெக்னாலஜி, ஜி.டி பிர்லா மெமோரியல் பாலிடெக்னிக் இன்ஸ்டிட்யூட், ஷாதிலால் கட்டாரியா ஆசிரியர்கள் பயிற்சி கல்லூரி போன்றைவையும் பிலானி நகரில் உள்ள பிரபலமான கல்வி நிறுவனங்களாகும். மேலும் இந்தியாவின் புகழ்பெற்ற தொழிலபதிபர் பிர்லா அவர்களின் சொந்த ஊராகவும் பிலானி நகரம் பிரபலமாக அறியப்படுகிறது.  

பிலானி நகருக்கு வெகு அருகாமையில் 17 கிலோமீட்டர் தொலைவில் சிராவா ரயில் நிலையம் அமைந்திருக்கிறது. இந்த நகரை அதன் பனிக் காலமான டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் சுற்றிப்பார்க்கும் அனுபவம் மிகவும் சிறப்பானது.

பிலானி சிறப்பு

பிலானி வானிலை

சிறந்த காலநிலை பிலானி

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது பிலானி

  • சாலை வழியாக
    பிலானி நகரை சாலை மூலமாக அடைவதுதான் சுலபமான வழி. பிலானி நகருக்கு தலைநகர் டெல்லியிலிருந்து தினத்தோறும் ஏராளமான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதோடு டெல்லி விமான நிலையத்தை அடையும் பயணிகள் சிராவா நகருக்கு பேருந்துமூலம் சென்று அதன் பிறகு சுலபமாக பிலானி நகரை அடைந்து விடலாம். இதுதவிர ஜெய்ப்பூர் நகரின் சிந்தி முகாம் பகுதியிலிருந்தும் பிலானி நகருக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    பிலானி நகரிலிருந்து 16 மற்றும் 25 கிலோமீட்டர் தொலைவில் முறையே சிராவா மற்றும் லோஹாறு ரயில் நிலையங்கள் அமைந்திருக்கின்றன. மேலும் இந்த இரண்டு நகரங்களிலிருந்தும் பிலானி நகருக்கு வாடகை கார்களும், பேருந்துகளும் அதிக எண்ணிகையில் இயக்கப்படுகின்றன.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    பிலானி நகரிலிருந்து 203 கிலோமீட்டர் தொலைவில் டெல்லி விமான நிலையமும், 205 கிலோமீட்டரில் ஜெய்ப்பூர் விமான நிலையமும் அமைந்திருக்கின்றன. எனவே பயணிகள் இந்த விமான நிலையங்களில் ஏதேனும் ஒன்றை அடைந்த பிறகு பேருந்துகள் அல்லது வாடகை கார்கள் மூலம் சுலபமாக பிலானி நகரை அடைந்து விடலாம்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue