Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள்» புட்டப்பர்த்தி

புட்டப்பர்த்தி - சத்ய சாய் பாபா வாழ்ந்த புண்ணிய பூமி!

26

சீமாந்திராவின் அனந்தபுரா மாவட்டத்தில் சித்ராவதி ஆற்றங்கரையோரம் அமைந்திருக்கும் சிறிய நகரமான புட்டப்பர்த்தி, ஸ்ரீ சத்ய சாய் பாபா வாழ்ந்த இடமாதலால் மிகவும் புகழ்பெற்ற யாத்ரீக மையமாக திகழ்ந்து வருகிறது.

புட்டப்பர்த்தி நகரின் வரலாறு சத்ய சாய்பாபாவின் பிறப்பு மற்றும் வாழ்கையோடு ஒன்றாக பின்னிப் பிணைந்திருக்கிறது. அதாவது 'இடையர்களின் பூமி' என்ற பொருளில் கொல்லப்பல்லி என்று அறியப்பட்டு வந்த புட்டப்பர்த்தி நகரம் முன்பு ஒரு சிறிய விவசாய கிராமமாக இருந்து வந்தது.

அப்போதுதான் சத்யநாராயன் ராஜு என்ற பெயரில் நவம்பர் 23, 1926-ஆம் ஆண்டு ஸ்ரீ பெட்டி வெங்கப்பா மற்றும் ஸ்ரீமதி ஈஸ்வரம்மா தம்பதிகளின் அருட்குழந்தையாய் அவதரித்தார் ஸ்ரீ சத்ய சாய் பாபா.

அதன் பிறகு சத்யநாராயன் ராஜுவின் வியக்கத்தக்க ஆற்றலையும், அதீத ஆன்மீக சக்தியையும் கண்டுணர்ந்த மக்கள் அவரை சீரடி சாய் பாபாவின் மறுபிறப்பாகவே ஏற்றுக் கொண்டனர்.

இதற்கு பின்பு சத்ய சாய் பாபா அகிம்சை, அமைதி, அன்பு, நேர்மை, உண்மை உள்ளிட்ட தன்னுடைய கொள்கைகளை பின்பற்றி பக்தர்களுக்கு அளித்த போதனைகள் அனைத்தையும் உலகமே உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தது.

ஸ்ரீ சத்ய சாய் பாபாவால் 1950-ஆம் ஆண்டு பிரஷாந்தி நிலையம் என்ற ஆஸ்ரமம் நிறுவப்பட்ட பின்பு புட்டப்பர்த்தி நகரம் உலகத் தரம் மிக்கதாக மாற்றமடைந்தது. இதற்கு பிறகு விமான நிலையம், ரயில் நிலையம், மருத்துவமனை, கல்வி நிறுவனங்கள் என்று அனைத்தும் சேர்ந்து புட்டப்பர்த்தி நகரை இந்தியாவின் எந்த ஒரு நவீன நகரத்துக்கும் இணையாக விளங்கச் செய்து கொண்டிருக்கின்றன.

புட்டப்பர்த்தி நகரின் முக்கிய சுற்றுலாப் பகுதிகளாக ஹனுமான் கோயில், வில்லேஜ் மசூதி மற்றும் சாய் பாபாவின் தாத்தா கொண்டம ராஜுவால் கட்டப்பட்ட சத்யபாமா கோயில் ஆகியவை அறியப்படுகின்றன.

அதோடு மற்றுமொரு சத்யபாமா கோயில் புட்டப்பர்த்தியிலிருந்து பெங்களூர் செல்லும் வழியில் சாய் பாபாவின் அண்ணன் சேஷம ராஜுவால் கட்டப்பட்டுள்ளது. இவைதவிர நீங்கள் புட்டப்பர்த்தி வரும் போது சத்ய சாய் பாபா பிறந்த இடத்தில் கட்டப்பட்டுள்ள சிவன் கோயிலை கண்டிப்பாக தவற விட்டுவிடக் கூடாது.

மேலும் சித்ராவதி நதிக்கரையோரம் அமைந்திருக்கும் வரம் கொடுக்கும் மரம் பயணிகள் மற்றும் சாய் பாபாவின் பக்தர்கள் மத்தியில் வெகுப்பிரபலம்.

புட்டப்பர்த்தியின் பிரஷாந்தி நிலையத்திலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் ஸ்ரீ சத்ய சாய் உள்நாட்டு விமான நிலையம் அமைந்திருக்கிறது. இந்த விமான நிலையம் மும்பை, சென்னை உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களுடன் நன்றாக இணைக்கப்பட்டிருக்கிறது.

இதுதவிர புட்டட்பர்த்தியிலிருந்து 131 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள பெங்களூர் பன்னாட்டு விமான நிலையத்தையும் பயணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் செப்டம்பரிலிருந்து, பிப்ரவரி வரையிலான காலங்கள் புட்டப்பர்த்தி நகருக்கு சுற்றுலா வருவதற்கு மிகவும் உகந்த பருவங்களாகும்.

புட்டப்பர்த்தி சிறப்பு

புட்டப்பர்த்தி வானிலை

சிறந்த காலநிலை புட்டப்பர்த்தி

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது புட்டப்பர்த்தி

  • சாலை வழியாக
    சீமாந்திராவின் அனைத்து பகுதிகளிலிருந்தும் புட்டப்பர்த்தி நகருக்கு எண்ணற்ற அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதோடு பெங்களூர், ஹைதராபாத், சென்னை போன்ற நகரங்களிலிருந்து தினமும் சூப்பர் டீலக்ஸ் பேருந்துகள் புட்டப்பர்த்தி நகருக்கு இயக்கப்பட்டு வருகின்றன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    புட்டப்பர்த்தி நகருக்கு வெகு அருகிலேயே 8 கிலோமீட்டர் தொலைவில் ஸ்ரீ சத்ய சாய் பிரஷாந்தி நிலையம் ரயில் நிலையம் அமைந்திருக்கிறது. இந்த ரயில் நிலையம் மும்பை பெங்களூர், விசாகப்பட்டணம், ஹைதராபாத், புவனேஸ்வர், புது டெல்லி உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களுடன் நன்றாக இணைக்கப்பட்டிருக்கிறது.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    புட்டப்பர்த்தியின் பிரஷாந்தி நிலையத்திலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் ஸ்ரீ சத்ய சாய் உள்நாட்டு விமான நிலையம் அமைந்திருக்கிறது. இந்த விமான நிலையம் மும்பை, சென்னை உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களுடன் நன்றாக இணைக்கப்பட்டிருக்கிறது. இதுதவிர புட்டட்பர்த்தியிலிருந்து 131 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள பெங்களூர் பன்னாட்டு விமான நிலையத்தையும் பயணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
11 Mar,Wed
Return On
12 Mar,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
11 Mar,Wed
Check Out
12 Mar,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
11 Mar,Wed
Return On
12 Mar,Thu