கடல் மட்டத்தில் இருந்து 380மீ உயரத்தில் இருக்கும் கெளடியாலா, ரிஷிகேஷ்-பத்ரிநாத் நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் புகழ்பெற்ற சுற்றுலாதளமாகும். கங்கைக் கரையில் இருக்கும் கெளடியாலாவைச் சுற்றி அடர்ந்த காடுகள் காணப்படுகின்றன.
ஏராளமான காட்டு விலங்குகளுக்கு கெளடியாலா சரணாலயமாகத் திகழ்கிறது. இவ்விலங்குகளை அங்கு செல்லும் பயணிகள் கண்டுகளிக்கலாம். சாகசப் பிரியர்கள் இந்த இடத்தில் கூடாரம் அமைத்து தங்கி, அனுபவமிக்கவர்களின் உதவியுடன் வெள்ளைநீர் சவாரியிலும் ஈடுபடலாம்.



Click it and Unblock the Notifications