பங்கஜா மற்றும் மதுமதி நதிகள் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ள நீல்கந்த் மகாதேவ் கோவில் ரிஷிகேஷின் புகழ்பெற்ற மத ஸ்தலமாகும். கடல் மட்டத்தில் இருந்து 1330மீ உயரத்தில் அமைந்திருக்கும் இந்த கோவிலில் இருந்து விஷ்ணுகூத், பிரம்மகூத் மற்றும் மணிகூத் ஆகிய குன்றுகளின் இயற்கை எழிலை கண்டு ரசிக்கலாம்.
இந்துக்களின் அழிக்கும் கடவுளான சிவனுக்கு இந்தக் கோவில் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. தேவர்கள் பாற்கடலை கடைந்த போது வெளிப்பட்ட விசத்தை சிவன் அருந்தியதால் அவரது தொண்ட நீல நிறத்தில் மாறியதாக நம்பப்படுகிறது.
அதனால் சிவனை நீலகண்டன் என்றும் அழைக்கிறார்கள். சிவன் விசத்தை விழுங்கியது இக்கோவிலில் நடந்ததாக நம்பப்படுவதால் இக்கோவில் நீல்கந்த் மகாதேவ் என்று வழங்கப்படுகிறது.
சிவனுக்கு உகந்த மாதமாக கருதப்படுவதால் நூற்றுக்கணக்கான பக்தர்கள் இக்கோவிலுக்கு ஜூலை முதல் ஆகஸ்ட் வரையில் வருகை தருகிறார்கள். மேலும் சிவராத்திரி விழாவின் போதும் இங்கு ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள்.



Click it and Unblock the Notifications