ரிஷிகேஷ் செல்லும் மக்களால் பெரிதும் விரும்பப்படும் சாகச விளையாட்டாக வெள்ளை நீர் சவாரி விளங்குகிறது. கங்கை நதியில் வேகமான மற்றும் மிதமான நீர் வரத்துகளும் ஒருங்கே அமைந்திருப்பதால் அனுபவமுள்ளவர்களும், இல்லாதவர்களும் கூட இந்த விளையாட்டில் ஈடுபடலாம்.
இங்கேயே கிடைக்கும் தேவையான உபகரணங்களையும், அனுபவமுள்ளவர்களின் உதவியையும் சுற்றுல்லாபயணிகள் உபயோகித்துக்கொள்ளலாம். உள்நாட்டில் இருந்தும் வெளிநாட்டில் இருந்தும் இவ்விளையாட்டில் இருக்கும் சாகசத்தை அனுபவிக்க ஏராளமான பயணிகள் இங்கே குவிகிறார்கள்.
செப்டம்பர் முதல் நவம்பர் வரையிலும், மார்ச் முதல் மே வரையிலும் இவ்விளையாட்டை விளையாட சிறந்த மாதங்களாக கருதப்படுகிறது.



Click it and Unblock the Notifications