Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ரோஹ்தக் » ஈர்க்கும் இடங்கள் » கொக்கார் கோட்டை

கொக்கார் கோட்டை, ரோஹ்தக்

17

கொக்கார் அல்லது கொக்கால் எனப்படும் வம்சத்தினர் ஜாட் இனத்தாரின் ஒரு பிரிவினர் ஆவர். ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில் இந்த பிரிவினர் வசிக்கின்றனர்.

இந்த கொல்க்கார் இனத்தார் முஸ்லிம் சமூகத்திலும் ஒரு அங்கமாக இடம் பெற்றுள்ளனர். பக்ஷி, மாலிக், ஜுனேஜா, கக்கார் மற்றும் பண்டிட் வகுப்பினரைப்போல் இவர்களும் முஸ்லிம் சமூகத்தின் ஒரு பிரிவினராக இந்தியா மற்றும் பாகிஸ்தானில் வாழ்ந்து வருகின்றனர்.

கொக்கார் இனத்தாரை பொறுத்தவரை பாகிஸ்தான் மட்டுமல்லாமல் ஆப்கானிஸ்தானிலும் வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொக்கார் ஜாட் வம்சத்தாரின் ஆதி தலைமுறையானது நாகவன்ஷி கார்கோடகா என்பவரிலிருந்து துவங்கியதாக சொல்லப்படுகிறது. இந்த கொக்கார் இனத்தார் ரயா, மதுரா மற்றும் சிந்து பகுதியை ஆண்டு வந்துள்ளனர்.

சீக்கிய குரு ஹர்ஹோபிந்த் சிங் அவர்களின் தீவிர சிஷ்யரான பாய் ரூப் சந்த் இந்த கொக்கார் இனத்தை சேர்ந்தவராவார்.

இந்த கொக்கார் இனத்தாரால் கட்டப்பட்ட கொக்கார் கோட்டை ஹரியானா மாவட்டத்தில் ரோஹ்தக் நகரத்தில் அமைந்துள்ளது. ஒரு காலத்தில் கம்பீரமான தோற்றத்துடன் உறுதியாக அமைந்திருந்த இது தற்போது சிதிலமடைந்து காணப்படுகிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
10 Mar,Tue
Check Out
11 Mar,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed