Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள்» சக்லேஷ்பூர்

சக்லேஷ்பூர்  - அதிகம் அறியப்படாத சுற்றுலாத்தலம்

32

மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இந்த சிறு மலைநகரம் ஒரு புத்துணர்ச்சியூட்டும் சுற்றுலாத்தலமாக உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 949 மீட்டர் உயரத்தில் கர்நாடக மாநிலத்தின் ஹாசன் மாவட்டத்தில் உள்ள சக்லேஷ்பூர் நகரம் காபி உற்பத்தி மற்றும் ஏலக்காய் விளைச்சலுக்கு புகழ் பெற்றுள்ளது.

மலையேறிகளின் சொர்க்கம்

சக்லேஷ்பூர் நகரம் மைசூர் ராஜாக்களின் ஆட்சியின் கீழ் இருந்து வந்துள்ளது. அதற்கு முன்னர் இந்த நகரம் ஹொய்சளர்கள் மற்றும் சாளுக்கியர்களின் ஆட்சியில் இருந்துள்ளது. ஹொய்சளர்கள் ஆட்சியின்போது இந்த நகரம் சக்லேஷ்பூர் என்ற பெயரை பெற்றுள்ளதாக அறியப்படுகிறது.

உள்ளூர் கதைகளின்படி ஹொய்சள வம்சத்தினர் இந்த சிறு நகரத்தில் ஒரு உடைந்த சிவலிங்கத்தை கண்டெடுத்ததாகவும் அதன் பின்னரே சக்லேஷ்பூர் என்று இந்த நகருக்கு பெயரிட்டதாகவும் சொல்லப்படுகிறது. இருப்பினும் மற்றொரு கதைப்படி இந்த நகரம் விவசாய உற்பத்தியில் செழிப்புடன் விளங்கியதாலேயே இப்பெயரை பெற்றது என்றும் சொல்லப்படுகிறது.

சக்லேஷ்பூர் இதன் உயிரியல் பன்முகத்தன்மை கொண்ட சூழலுக்காகவும் இங்குள்ள மலையேற்ற வசதிகளுக்காகவும் பிரபலமாக அறியப்பட்டுள்ளது. பிஸ்லே வனப்பாதுகாப்பு சரகம் மற்றும் குமார பர்வத மலையேற்றப்பாதை போன்றவை இந்த சக்லேஷ்பூர் ஸ்தலத்தின் இயற்கை அம்சங்களை பிரதிபலிக்கும் இடங்களாகும்.

மலையேற்றத்தில் அவ்வளவாக விருப்பமில்லாத பயணியாக இருந்தாலும் இந்த எழில் நிறைந்த நகரத்தை சும்மா சுற்றிவருவதே உங்கள் கண்களையும் மனதையும் நிறைய வைக்கும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு உண்மையாகும்.

சக்லேஷ்பூரை அடைவதற்கு இந்த நகரத்திலிருந்து 35 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள ஹாசன் நகருக்கு பயணிகள் செல்ல வேண்டியுள்ளது. அருகாமையிலுள்ள விமான நிலையமாக மங்களூர் விமான நிலையம் அமைந்துள்ளது.

சக்லேஷ்பூர் சிறப்பு

சக்லேஷ்பூர் வானிலை

சிறந்த காலநிலை சக்லேஷ்பூர்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது சக்லேஷ்பூர்

  • சாலை வழியாக
    சக்லேஷ்பூர் நகரம் மிக எளிதாக பேருந்துகள் மூலம் செல்லும் வகையில் அமைந்துள்ளது. பெங்களூர் மற்றும் மைசூர் நகரங்களிலிருந்து சக்லேஷ்பூருக்கு அரசு மற்றும் தனியார் போக்குவரத்து பேருந்து வசதிகள் உள்ளன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    சக்லேஷ்பூர் நகரில் ரயில் நிலையம் உள்ளது. இது நகர மையத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இங்கிருந்து பல முக்கிய நகரங்களான பெங்களூர், மங்களூர் போன்ற நகரங்களுக்கு ரயில் சேவைகள் உள்ளன. ரயில் நிலையத்திலிருந்து பயணிகள் ஆட்டோரிக்‌ஷா மூலமாக உள்ளூர் சுற்றுலாத்தலங்களை விஜயம் செய்யலாம்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    சக்லேஷ்பூருக்கு அருகிலுள்ள விமான நிலையமாக மங்களூர் விமான நிலையம் அமைந்துள்ளது. முன்னர் பாஜ்பே என்று அழைக்கப்பட்ட இந்த விமான நிலையம் சக்லேஷ்பூர் நகரிலிருந்து 133 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. மங்களூர் விமான நிலையம் மத்திய கிழக்கு நாடுகளான துபாய், அபுதாப்பி, மஸ்கட், தோஹா, குவைத் போன்றவற்றுக்கும் இந்திய நகரங்களான மும்பை, பெங்களூர், கோவா, கொச்சி, போன்ற நகரங்களுக்கும் விமான சேவைகளை பெற்றுள்ளது.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue