Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள்» சின்குவேரிம் பீச்

சின்குவேரிம் பீச் - அமைதியில் இளைப்பாறுவோம்!

11

சின்குவேரிம் பீச் பரபரப்பு மிகுந்த பகுதியாக இருந்தாலும் கோவாவின் மற்ற கேளிக்கை பகுதிகளோடு ஒப்பிடுகையில் மிகவும் புராதனமும், பேரமைதியும் வாய்க்கப்பெற்றது. இந்த கடற்கரை பனாஜியிலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருப்பதோடு, வடக்கு கோவாவில் உள்ள கேண்டலிம் கடற்கரையிலிருந்து கல்லெறியும் தூரத்திலேயே அமைந்திருக்கிறது.

சின்குவேரிம் கடற்கரையில் குறைந்த அளவிலான நீர் விளையாட்டுகளில்தான் நீங்கள் ஈடுபட முடியும். அதனால் உங்களுக்கு முகவர்களின் தொந்தரவு ஏதும் இந்தக் கடற்கரையில் இருக்காது.

இந்தக் கடற்கரையிலிருந்து 50 அடி உயர அர்வேலம் நீர்வீழ்ச்சியை நீங்கள் சுலபமாக அடைந்து விடலாம். அதோடு அர்வேலம் அருவியை அடைந்த பின்பு நேரம் இருந்தால் நீங்கள் அதன் அருகிலுள்ள ருத்ரேஷ்வர் கோயிலுக்கும் சென்று வரலாம்.

சின்குவேரிம் கடற்கரையில் இருக்கக்கூடிய குடில்களில் குறைந்த விலையில் கிடைக்கும் மதுவோடு நீங்கள் அருமையான கோவான் உணவையும் சுவைத்து மகிழலாம். இந்தக் கடற்கரையை கேண்டலிம் பீச்சிலிருந்து வாடகை கார்கள் அல்லது ரிக்ஷா மூலமாக சுலபமாக அடைந்து விடலாம்.

அதோடு பனாஜி நகரிலிருந்து சின்குவேரிம் வருபவர்கள் பேருந்து அல்லது வாடகை கார்களை பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் பனாஜியிலிருந்து பைக் ஒன்றை வாடகைக்கு எடுத்துக் கொண்டால் நீங்கள் சின்குவேரிம் பீச்சை சுற்றிப் பார்ப்பதுடன் கேண்டலிம், அஞ்சுனா, பாகா மற்றும் கலங்கூட் கடற்கரைகளுக்கும் சென்று வரலாம்.

சின்குவேரிம் பீச் சிறப்பு

சின்குவேரிம் பீச் வானிலை

சிறந்த காலநிலை சின்குவேரிம் பீச்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது சின்குவேரிம் பீச்

  • சாலை வழியாக
    கோவாவை மும்பையிலிருந்து தேசிய நெடுஞ்சாலை 17 அல்லது மும்பை-கோவா நெடுஞ்சாலை மூலமாக அடையலாம். ஆனால் இந்த வழி உங்களை நீண்ட பயணத்துக்கு இட்டுச் செல்வதோடு, கொஞ்சம் ஆபத்தானதும் கூட. எனினும் மும்பையிலிருந்து புனே செல்லும் எக்ஸ்பிரஸ் வழியை பயன்படுத்தி, சதாரா நெடுஞ்சாலையை அடைந்து, அதன் பின்னர் சாவந்த்வாடியை அடைந்து விடலாம். அப்படி சாவந்த்வாடியை நீங்கள் அடைந்து விட்டால் அங்கிருந்து கோவா வருவதற்கு ஒரு சில நிமிடங்கள்தான் ஆகும். மேலும் மும்பை, புனே மற்றும் மற்ற மகாராஷ்டிர நகரங்களிலிருந்து ஏராளமான பேருந்துகள் கோவாவுக்கு இயக்கப்படுகின்றன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    இந்தியாவின் தெற்கு, வடக்கு, கிழக்கு, மேற்கு என்று அனைத்து பகுதிகளிலிருந்தும் கோவாவுக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் மும்பை மற்றும் கோவாவுக்கு இடையில் இயக்கப்பட்டு வரும் ரயில்களில் பயணம் செய்வதற்கு பயணிகள் அதிகம் விரும்புகின்றனர். இதற்கு இரவு நேரத்தில் பயணம் செய்வது பலருக்கு சௌகரியமாக இருப்பதே காரணம்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    மும்பை, டெல்லி, பெங்களூர் உள்ளிட்ட இந்தியாவின் பெருநகரங்களிலிருந்து தெற்கு கோவாவின் தபோலிம் விமான நிலையத்துக்கு எண்ணற்ற விமானங்கள் இயக்கப்படுகின்றன. எனினும் கோவாவில் பன்னாட்டு விமான நிலையம் இல்லாத காரணத்தால், வெளிநாட்டு பயணிகள் மும்பை அல்லது டெல்லி போன்ற நகரங்களுக்கு வந்த பின்புதான் கோவாவை அடைய முடியும்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
31 Mar,Tue
Check Out
01 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed