Search
  • Follow NativePlanet
Share

சீர்காழி- ஆன்மீகம், ஆலயங்கள், நம்பிக்கையின் நகரம்!

13

தமிழ்நாடு மாநிலத்திலுள்ள நாகப்பட்டினம் மாவட்டத்தில் வங்காளவிரிகுடா கடற்கரை ஓரத்திலிருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள இந்துக்களின் புகழ்பெற்ற புனித  ஆன்மீகத்தலம் சீர்காழி. வரலாற்றுத் தொன்மை வாய்ந்த அமைதியான நகரம் சீர்காழி.

தென்னிந்தியப் பாரம்பரியம், சடங்குகள், சம்பிரதாயம், மற்றும் கலாச்சாரத்தினைப் பறைசாற்றி நவீன உலகத்தின் மாற்றத்தினையும் ஏற்றுக்கொண்டு வளர்ந்துவரும் ஒரு கிராமமாகவும் சீர்காழி விளங்குகிறது.

புராணங்களின் படி பெரு வெள்ளத்தினால் இப்பூமி அழிந்து போக இருந்த வேளையில் பிரம்மனின் வேண்டுதலை ஏற்று சிவபெருமான் சிவன் 64 கலைகளை உடையாக அணிந்து பிரணவத்தை தோணியாக அமைத்து உயிர்களை காப்பாற்றினாராம்.

அப்படி பிரம்மன் வேண்டிய இடம் சீர்காழியாகும். பிரம்மன் வேண்டியதால், இங்குள்ள சிவபெருமான் பிரம்மபுரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். சிவபெருமான் தோணியிலேற்றி உயிர்களை காப்பாற்றியதால், சிவபெருமானின் அனைத்துவடிவங்களும் இங்குள்ள கோவில்களில் பூஜிக்கப்படுகின்றன.

சிவபெருமான் ஒரு தோணியில் (படகு) அனைத்து உயிர்களையும் ஏற்றிக்கொண்டு சென்று காப்பாற்றியதால் இங்குள்ள சிவபெருமான் "தோணியப்பர்" என அழைக்கப்படுகின்றார். சீர்காழி "தோணிபுரம்" என்ற பெயராலும் அறியப்படுகிறது.

தமிழ்நாட்டிலிருந்து மட்டுமல்ல, நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் இங்கு வந்து வழிபடும் அளவுக்கு சீர்காழி மிகவும் புகழ்பெற்ற ஆன்மீகத் ஸ்தலமாக திகழ்கிறது. ஜனவரி மாதத்தில் கொண்டாடப்படும் தைப் பொங்கல் அல்லது மகர சங்கராந்தியானது இங்குள்ள கோவில்களில் 3 தினங்கள் கொண்டாடப்படும்.

எண்ணற்ற சிவாலயங்கள் அமைந்துள்ளதால் பிப்ரவரி மாதத்தில் கொண்டாடப்படும் மகாசிவராத்திரி திருவிழாவில் கலந்துகொண்டு சிவபெருமானை பூஜிக்க எண்ணற்ற யாத்திரீகர்கள் சீர்காழிக்கு வருகைபுரிகிறார்கள்.

அக்டோபர்/நவம்பர் மாதங்களில் கொண்டாடப்படும் ஒளிமயமான தீபாவளித் திருநாளில் சீர்காழி முழுதும் கோலாகலமான கொண்டாட்டங்களைக் காணமுடியும். நாட்டின் முக்கிய நகரங்களுடன் சிறந்த தொடர்பினை இந்நகரம் பெற்றுள்ளது. கோடைகாலங்களில் ஈரப்பதத்துடன் கூடிய காலநிலை இங்கு நிலவுகிறது.

சீர்காழி சிறப்பு

சீர்காழி வானிலை

சிறந்த காலநிலை சீர்காழி

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது சீர்காழி

  • சாலை வழியாக
    தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து நிறுவனம் மற்றும் தனியார்கள் இயக்கும் ஏராளமான பேருந்துகள், சீர்காழியை மாநிலத்தின் பிற நகரங்களுடன் இணைக்கின்றன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    இரயில் வழியும் வான் போக்குவரத்தைப்போலவே மிகவசதியானதாகும். சீர்காழியிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மயிலாடுதுறை இரயில் நிலையம் அருகிலுள்ள ரயில் நிலையமாகும். அங்கிருந்து சென்னை, ராமேஸ்வரம், விழுப்புரம் மற்றும் கோயம்புத்தூர் போன்ற முக்கிய நகரங்களுக்கு ரயில்கள் உள்ளன. ரயில் நிலையத்திலிருந்து வாடகைக்காரோ, ஆட்டோ ரிக் ஷாவோ அமர்த்திக்கொள்ளலாம். அங்கிருந்து அரசு மற்று தனியார் பேருந்துகள் உள்ளன.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    சீர்காழியிலிருந்து 125 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள திருச்சி விமான நிலையமே சீர்காழிக்கு அருகிலுள்ள உள்நாட்டு விமான நிலையமாகும். 235 கிலோமீட்டர் தொலைவிலுள்ள சென்னை விமான நிலையம் அருகிலுள்ள பன்னாட்டு விமான நிலையம்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
29 Mar,Fri
Return On
30 Mar,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
29 Mar,Fri
Check Out
30 Mar,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
29 Mar,Fri
Return On
30 Mar,Sat