Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » தலச்சேரி » ஈர்க்கும் இடங்கள் » உதயா களரி சங்கம்

உதயா களரி சங்கம், தலச்சேரி

28

உதயா களரி சங்கம் எனப்படும் இந்த அமைப்பானது, கேரள பிரதேசத்தின் பண்டையகால தற்பாதுகாப்பு சண்டைக்கலை வடிவமான ‘களரிப்பயட்டு’ எனும் அற்புத கலை வடிவத்துக்காக உருவாக்கப்பட்டுள்ள சங்கமாகும்.

கேரள மண்ணிற்கே உரிய இந்த பிரத்யேக சண்டைக்கலை வடிவமானது பரம்பரை பரம்பரையாக சந்ததி மாற்றம் செய்யப்பட்ட கலை நுட்பங்களை உள்ளடக்கியதாகும். 2000 வருட பாரம்பரியத்துடன், அபார உடல்திறன் மற்றும் மின்னல் போன்ற உடல் அசைவுகள் போன்ற அம்சங்களை உள்ளடக்கிய இந்த ‘களரி’ சண்டைக்கலை வடிவம் குறித்த பல தகவல்களை இந்த உதயா களரி சங்கத்திற்கு விஜயம் செய்வதன் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

சொம்பல் கடற்கரைப்பகுதியில் அமைந்துள்ள இந்த உதயா களரி சங்கம் ‘மாஹே’ நகரத்திலிருந்து சில நிமிட பயண தூரத்தில் உள்ளது. இந்த சங்க வளாகத்தில் ஒரு பிரம்மாண் மண்டப அமைப்பு உயரமான தூண்களுடன் அமைக்கப்பட்டுள்ளது.

பாரம்பரிய களரி ஆயுதங்கள் இந்த மண்டபத்தின் சுவர்களில் காட்சிக்கும் வைக்கப்பட்டுள்ளன. காலனிய ஆட்சியின்போது ‘களரி சண்டைக்கலை’ தடை செய்யப்பட்டிருந்ததாகவும் ரகசிய ஆர்வலர்களை உள்ளடக்கிய பிரத்யேக குழுக்கள் இந்தக் கலையை திரைமறைவில் பேணி வளர்த்ததாகவும் வரலாற்று கால தகவல்கள் கூறுகின்றன.

தென்னிந்தியாவின் பாரம்பரிய கலை பொக்கிஷமான ‘களரி’யை வளர்ப்பதிலும் காப்பதிலும் இந்த உதயா களரி சங்கத்தின் பங்கு போற்றுதற்குரியதாக அறியப்படுகிறது. ஒரு மாலை நேரத்தை இங்கு நடைபெறும் ‘களரிப்பயட்டு’பயிற்சியை பார்த்தபடி கழிப்பது பிரமிப்பூட்டும் அனுபவமாக இருக்கும்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
09 Sep,Wed
Return On
10 Sep,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
09 Sep,Wed
Check Out
10 Sep,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
09 Sep,Wed
Return On
10 Sep,Thu