» »பேய் உலாவும் சாலைகள்! இந்த பக்கம் போனா கொஞ்சம் பாத்து சூதானமா போங்க!

பேய் உலாவும் சாலைகள்! இந்த பக்கம் போனா கொஞ்சம் பாத்து சூதானமா போங்க!

Posted By: Udhaya

சுற்றுலா செல்வதற்கும் புதிய இடங்களை கண்டுபிடிப்பதற்கும் நம்மை வழிகோல்வது சாலைகளே. அப்படிப்பட்ட சாலைகள் பேய் வசம் ஒப்படைக்கப்பட்டிருந்தால் என்ன செய்வது?

உண்மையில் இந்த சாலைகள் அனைத்தும் மிகவும் அழகானவை. மிகச்சிறந்த சுற்றுலாத் தளங்களுக்கு இட்டுச் செல்பவை. ஆனால் பிரச்சனை பேய்களிடம்தான். பேயை நேரில் காணாதவரை இந்தியாவின் மற்ற அழகிய சாலைகளில் ஒன்றாகத்தான் இவை இருக்கும். ஆனால்... அந்த பொழுதில்... திக் திக்.. சுற்றுலா செல்லும் வழியில் பேயைப் பார்த்தால்...

கசாரா காட் சாலை

கசாரா காட் சாலை

சுற்றிலும் பசுமையான, இரண்டு புறங்களிலும் புற்கள் நிறைந்த மின்னல் வேகத்தில் வண்டிகள் பறக்கும் ஒரு சாலை இது.

Animeshcmc

 எங்குள்ளது

எங்குள்ளது

மும்பை - நாசிக் இடையேயான இந்த சாலை மராட்டிய மாநில நெடுஞ்சாலைகளுள் அசாதாரணமான ஒன்று. அன்றிரவு பேய்களின் ராஜ்ஜியம் தொடங்கும் வரை.

Animeshcmc

 அமானுஷ்யம்

அமானுஷ்யம்


எச்சரிக்கை காசாரா காட் சாலையில் நீட்சியில் தொடர்ந்து முன்னேறிக்கொண்டிருக்கும்போது, உங்களை பேய் பயமுறுத்தலாம். இதனால் விபத்துக்களும் நிகழலாம். தலையில்லா பெண் ஒருவர் மரத்தடியில் இருப்பது போன்று பலர் கண்டிருப்பதாக கூறியிருக்கின்றனர்.

Vssun

சத்தியமங்கலம் காட்டுவழிப்பாதை

சத்தியமங்கலம் காட்டுவழிப்பாதை

தேசிய நெடுஞ்சாலை எண் 209ல் சத்தியமங்கலம் காடுகள் வழியாக பயணம் சென்றிருக்கிறீர்களா? இலைகள் உதிர்ந்த பெரும்பாலான மரங்கள் இருபுறங்களிலும் நின்றுகொண்டிருக்க, நாம் வாகனத்தில் இளையராஜா இன்னிசை ராகங்களைக் கேட்டுக்கொண்டே செல்லலாம்.

காட்டு வழிப்பயணம்

காட்டு வழிப்பயணம்

பொதுவாக காட்டு வழிப் பயணம் என்பது மனதுக்கு ஒரு புத்துணர்ச்சியாகவும். ஒருவித சாகச உணர்வை தருவதாகவும் இருக்கும். ஆனால் இந்த சத்தியமங்கலம் காட்டு பாதை???

தமிழகத்தின் நெம்பர் 1

தமிழகத்தின் நெம்பர் 1

எது எதுக்கெல்லாமோ நெம்பர் 1 என்று குறிப்பிடுவோம். இந்த காட்டு நெடுஞ்சாலை தமிழகத்தின் மிக அதிக அமானுஷ்யம் பாதிக்கப்பட்ட பகுதியாக கூறுகின்றனர் மக்கள். அதாவது இதன் வழியாக பயணித்து அதிகம் விபத்துக்குள்ளாகி இருப்பவர்கள் அளிக்கும் தகவல் இது.

டெல்லி - ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலை

டெல்லி - ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலை

நீங்கள் ஆல்வார் வழியாக ஜெய்ப்பூருக்கு செல்ல திட்டமிட்டீர்கள் என்றால் எச்சரிக்கை நீங்கள் தே நெ எ 11 வழியாக செல்லுங்கள். அல்லது நீங்கள் ஆல்வார் வழியாகத்தான் செல்வீர்களென்றால் பேயுடன் பயணிக்கவேண்டியிருக்கும்.

Pratapkagitha

பங்கார்க் கோட்டை

பங்கார்க் கோட்டை


பங்கார்க் கோட்டையானது அமானுஷ்ய சக்திகள் நிறைந்ததாக நம்பப்படுகிறது. இந்த சாலையில் செல்வதால் உங்கள் பயணம் பாதுகாப்பாக இருக்கவேண்டும். அல்லது பேய் உங்கள் வாகனத்தில் லிப்ட் கேட்டு ஏறும் என்பது இந்த சாலையில் பயணித்தவர்கள் கூறும் தகவல்.

PC: Nativeplanet

கெசாடி காட்

கெசாடி காட்


கோவாவிலிருந்து மும்பை செல்லும்போது கெசாடி காட் நெடுஞ்சாலை வழியே செல்லவேண்டியிருக்கும். முடிந்தால் இரவு நேரத்தில் செல்வதை தவிருங்கள். அதேசமயம், வழியில் வாகனங்களை நிறுத்துவது அறிவுரைக்கத்தக்கதல்ல.

Animeshcmc

வாகன விபத்துக்கள்

வாகன விபத்துக்கள்

இந்த சாலையில் அதிக அளவில் வாகனவிபத்துக்கள் நிகழ்கின்றனவாம். இதனால் இங்கு அமானுஷ்ய சக்திகள் அதிகம் இருக்கின்றன என்றும் கூறப்படுகிறது. ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத இந்த பகுதி பார்ப்பதற்கு மிகப் பயங்கரமானதாக இருக்கும்.

Nirvanareborn

கிழக்கு கடற்கரைச் சாலை

கிழக்கு கடற்கரைச் சாலை

சென்னையிலிருந்து பாண்டிச்சேரி செல்லும்போது கிழக்கு கடற்கரைச் சாலையில் பல்லாயிரம்பேர் பயணிக்கிறார்கள். அப்படி என்ன பேய் வந்துவிடப் போகிறது என்று உங்களுக்கு தோன்றலாம்.

 எச்சரிக்கை

எச்சரிக்கை

பேயோ எதுவோ தெரியவில்லை. ஆனால் தமிழகத்தில் அதிக அளவில் விபத்து நடக்கும் பகுதி என்று எடுத்துக்கொண்டால், அதில் இந்த சாலை முதலிடத்தில் வந்து உட்கார்ந்துவிடும். பழைய தமிழ்திரைப்படங்களில் வரும் பேய்களைப் போலவே வெள்ளை நிறப் புடவையில் நிலவொளியில் நம்மை அச்சுறுத்த வரும் பேய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் இந்த பகுதியில் அதிகரித்து வருவதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.