» »இந்தியாவில் இனிமையான 5 வழி சாலைப் பயணங்கள்!! நீங்க போக நாங்க வழி சொல்றோம்!!

இந்தியாவில் இனிமையான 5 வழி சாலைப் பயணங்கள்!! நீங்க போக நாங்க வழி சொல்றோம்!!

By: Bala Karthik

சாலை வழிப்பயணத்தின் அருமையானதை பைக்கின் மூலம் பயணம் செய்ய ஆவல் கொள்ளும் ஆர்வலர்களே மனதார உணரக்கூடும். நாம் பைக்கில் செல்லும்போது வீசப்படும் குளிர்ந்த காற்றானது நம் முகத்தினை அழகாக தீண்டி செல்ல, பல்வேறு அமைப்புகளால் ஆன பின்புல புவியியலும் மாறுதலுடன் காணப்பட, அவற்றுள் ஒரு சிலவற்றை நம்மால் வார்த்தைகளால் விவரிக்க முடிவதுமில்லை.

நம் நாட்டின் ஒரு அங்கமாக அழகிய வழிகளானது அமைந்திருக்க, பைக் சமூகத்தினரை அவ்வழிகள் பெரிதும் ஈர்த்திடுகிறது. ஒரு சில வழிகள் சவாலாக அமைய, அதீதமான கால நிலையும் அன்னையான அவள் (இயற்கை) மடியில் கிடைப்பதோடு பயண ஆர்வலர்களையும் தூண்ட செய்கிறது.

அவ்வாறு காணப்படும் ஐந்து சிறந்த சாலைகள் வழிகளை நம் நாட்டில் இருப்பதை பார்ப்பதோடு, இவ்விடங்களுக்கு நம்மால் தனிமையிலோ அல்லது மனம் விரும்பிய ஒரு நபருடனோ செல்வதும் இனிமையானதாக அமையக்கூடும். உங்களுடைய பைக் இந்த பரவசமூட்டும் பயணத்திற்கு தயாராக இருக்கிறதா?

தில்லி முதல் லேஹ் வரை:

தில்லி முதல் லேஹ் வரை:


நாட்டின் பெயர்பெற்ற பயணங்களுள் ஒன்றாக, தில்லியிலிருந்து லேஹ் வழி பயணமானது அமைய, தொழில்முறையாளர்களுக்கு இப்பயணம் கடும் சவாலாக அமையும். இப்பயணமானது 15 நாட்கள் பயணமாக அமைய, எண்ணற்ற சாகசங்களும், கண்கொள்ளா காட்சியுமென நம் மனதை பெருமூச்செறிந்து பார்க்கவும் செய்கிறது.

இதன் நிலப்பரப்பானது படிப்படியாக மாறுதலை சந்திக்க நவீன நகரம் முதல் இமாலய கிராமம் நோக்கியும் மாறிட, பனி மூடிய மலையுமென பாறைகளும், லேஹ்வின் பாலைவன நிலப்பரப்புகளுமெனவும் காட்சியளிக்கிறது.

இவ்வழியானது பாதுகாப்பாக நாம் கடக்க உதவ, இவ்விடமானது கண்டுபிடிக்க முடியாத நிலையில் காணப்படுவதோடு, மூலை முடுக்குகளில் அபாயத்தையும் கொண்டிருக்கிறது.

இவ்வழியானது நம்மை ஒரு சில சவால் தரக்கூடிய நாட்டின் சாலை வழியாக அழைத்துசெல்ல, கர்துங்க்லாவின் வழியாகவும் அது அமையக்கூடும் என்பதால், உலகத்திலேயே பைக் செல்ல காணப்படும் உயரமான இடங்களுள் ஒன்றாகவும் காணப்படுகிறது.

PC: Simon Matzinger

பெங்களூரு முதல் கன்னூரு வரை:

பெங்களூரு முதல் கன்னூரு வரை:

பெங்களூருவாசியான நீங்கள் ஒரு பைக் பிரியராக இருந்தால், இங்கே காணப்படும் சிறந்த வழியாகவும் சென்றிடலாம். இவ்வழியானது பெங்களூருவின் கான்கிரீட் காடுகள் வழியாக செல்ல, அது நம்மை பசுமையான காடுகளைக்கொண்ட கூர்க் மற்றும் கன்னூர் வழியாக அழைத்தும் செல்கிறது.

இந்த வழியில் நாம் பயணிக்க பாறைகளையும், ஹேர்பின் வளைவுகளையும், பசுமையான பள்ளத்தாக்கையுமென வளைத்துப்போட்டு நம்மை ரசிக்கவும் செய்கிறது. இதனை கடந்து, இவ்வழியில் காணப்படும் இயற்கை ஏரியானது, உள்ளூர் உணவுகளையும் கொண்டு இவ்விடத்தில் விளங்குகிறது.

சிலிக்குரி முதல் யுக்சோம் வரை:

சிலிக்குரி முதல் யுக்சோம் வரை:

அதீத ஆழ்ந்த இயற்கை விரும்பிகளுக்கு ஒருமனதான கிழக்கத்திய அங்கத்தை நாடாக கொண்டிட, நாட்டில் ஒரு சில அழகிய மலைகளையும் நாம் பார்க்கிறோம்.

ஒரு சிறந்த பைக் அனுபவமானது சாலை வழியாக கிடைத்திட, டார்ஜிலிங்கையும், சிக்கிமையும் இணைந்தும் கொண்டிருக்கிறது. ஒரு கையில், கஞ்சங்ஜுங்காவின் கண்கொள்ளா காட்சி படர, மற்றுமோர் பகுதியில் பசுமையை கடந்த கம்பீரமான இமய மலையும் காணப்பட, மாயாஜாலம் கொண்டு அது நம்மை வெகுவாக கவர்கிறது.

PC: Spattadar

பளுக்போங்க் முதல் தவாங்க் வரை:

பளுக்போங்க் முதல் தவாங்க் வரை:


வடக்கிழக்கு மாநிலத்தின் இயற்கை அழகை ரசிக்க விரும்பும் ஒருவராக நீங்கள் இருந்தால்? பளுக்போங்கிலிருந்து தவாங்கிற்கு சாலைப்பயணம் செல்வதன் மூலம் புதுவித அனுபவத்தை மனதில் கொள்ளலாம்.

இவ்வழியானது சிறந்த காடுகளையும், தாவரங்களையும், விலங்குகளையும் கொண்டிருக்க, ஒரு சில கடினமான திருப்பத்தினால் பலவித இடங்களில் சவால்களை சந்திப்பதோடு, உயரமான இடங்களையும், நிலச்சரிவுகளுமென பலவற்றையும் கொண்டிருக்கிறது. இந்த சாலையானது பனி மூடி வழக்கமாக வருடத்தின் முடிவில் காணப்பட, த்ரில்லான பயணமாகவும் அமையக்கூடும்.

PC: Yathin S Krishnappa

மும்பை முதல் திருவனந்தபுரம் வரை:

மும்பை முதல் திருவனந்தபுரம் வரை:

இந்த பைக் பயணத்தின் குறைவாக எடுத்துக்கொள்ளப்படும் வழியாக மும்பை முதல் திருவனந்தபுரம் வரையிலான வழி இருக்க, இது கடல் மற்றும் மலையின் ஒருங்கிணைப்பாகவும் காணப்படுகிறது. இந்த கடற்கரை பகுதியானது எண்ணற்ற கடற்கரை வழியாக நம்மை அழைத்து செல்ல, அதோடு இணைந்து மேற்கு தொடர்ச்சியின் பசுமை மலையும் காணப்படுகிறது.

இப்பயணத்தில், நம்மால் மனம் விரும்பும் கடற்பகுதி இலக்கை எட்டமுடிய, கோவா நம்மை வரவேற்பதோடு அதோடு இணைந்த கொச்சி கடற்கரையும், கேரளாவின் உப்பங்கழியும், என பலவும் காணப்படுகிறது.

PC: Unknown