Search
  • Follow NativePlanet
Share
» »வசந்த கால சுகத்தை அனுபவிக்க மார்ச் மாதத்தில் டூர் போவதற்கு ஏற்ற இந்தியாவின் சூப்பரான 6 இடங்கள் இது தான்

வசந்த கால சுகத்தை அனுபவிக்க மார்ச் மாதத்தில் டூர் போவதற்கு ஏற்ற இந்தியாவின் சூப்பரான 6 இடங்கள் இது தான்

மார்ச் மாதம் என்பது வசந்த காலத்தின் இதத்தையும், கோடை காலத்தின் கதகதப்பையும் தரும் மாதமாகும். நாட்டின் சில பகுதிகளில் வானிலை மென்மையாக இருக்கம். பூத்துக் குலுங்கும் வண்ணமயமான வசந்த காலத்தின் அழகுடன் இதமான வானிலையையும் அனுபவித்து மகிழ இந்த மார்ச் மாதத்தில் இந்தியாவில் சுற்றி பார்க்க சிறந்த 6 இடங்கள் எவை என்பதை தெரிந்து கொண்டு, நீங்களும் இந்த மார்ச் மாதத்தில் டூர் பிளான் போட்டு ஒரு ஸ்பெஷலான அனுபவித்தை ரசித்து விட்டு வாருங்கள்.

Vrindavan

பிருந்தாவன்

மார்ச் மாதம் ஹோலியின் வருகையை குறிக்கிறது. பிருந்தாவனில் ஹோலி என்பது ஒரு நாள் கொண்டாட்டமாக மட்டுமல்லாமல் ஒரு மாதத்திற்கு முன்பே தொடங்கி விடும். ஹோலிக்கு முந்தைய ஒரு வழக்கமான சடங்கான பூலோன் வாலி ஹோலி, ஆரஞ்சு மஞ்சள் மற்றும் சிவப்பு நிறங்களின் மனமிக்க வசந்த மலர்களால் நகரத்தை அழகு படுத்துகிறது. ஹோலி பண்டிகையை தாண்டி அங்கே பார்க்க வேண்டிய முக்கியமான இடங்களான நிதிவன் புனித துளசி காடு மற்றும் புனிதமான ஏழு கோஸ்வாமி கோயில்கள் உள்ளன. சாலையோர உணவகங்கள் இங்கே மிகப் பிரபலம். பிரேம் மந்திரில் நடைபெறும் ஒளி நிகழ்ச்சியும் வண்ணமயமாக இருக்கும்.

அவுலி

இமயமலை பயணத்திற்கு உத்தரகாண்ட் மாநிலத்தின் சாமோலி மாவட்டத்தில் உள்ள அவுலி ஒரு சரியான இடமாகும். கடல் மட்டத்திலிருந்து 3050 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த அழகான இடம் பள்ளத்தாக்குகள் மற்றும் பனி மூடிய சிகரங்களின் பரந்த காட்சிகளை அளிக்கிறது. மார்ச் மாதம் பார்வையிட ஏற்ற நேரம். வெப்பநிலை சுமார் 16 டிகிரி செல்சியஸ்க்கு குறைவாக இருப்பதால் ரம்மியமான சூழலில் இயற்கையின் அழகை ரசிக்க முடியும். இந்தப் பனிக்காலம் டிரெக்கிங் செய்வதற்கு ஏற்ற காலமாக அமைகிறது. மார்ச் மாதத்தில் பூக்களின் பள்ளத்தாக்கு, தேசிய பூங்கா மற்றும் இமயமலை ஸ்லிப்பர் ஆர்கிட்கள் போன்ற சில அரிய வகை பூக்களுடன் சிறப்பானதாக இருக்கும். அவுலி இந்தியாவின் சிறந்த ஸ்கை ரிசார்ட்களில் ஒன்றாகும். அவுலியில் உள்ள ஸ்கை மற்றும் ஸ்னோபோர்டு பள்ளி ஆரம்ப நிலை மற்றும் அனுபவம் வாய்ந்த ஸ்கைகளுக்கு சிறப்பான அனுபவத்தை வழங்குகிறது.

Kaziranga

காசிரங்கா தேசிய பூங்கா

அசாமின் காசிரங்கா வனவிலங்கு பூங்கா விலங்குகளுக்கும் அடர்ந்த வனப்பகுதிகளுக்கும் பெயர் பெற்றது. பிரம்மபுத்திரா நதியின் அருகே அமைந்துள்ள இந்த தேசிய பூங்கா யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்களில் ஒன்றாகும். ஒற்றைக்கொம்பு காண்டாமிருகம், புலிகள் மற்றும் யானைகள் உட்பட அதிக அளவிலான விலங்குகளின் தாயகமாக இது உள்ளது. மார்ச் மாதம் வானிலை குளிர்ச்சியாக இருப்பதால் சுற்றுலா செல்வோர் வனவிலங்கு சவாரி செய்வதற்கு ஏற்ற மாதமாக உள்ளது. மேலும் தெளிவான வானம் வனவிலங்குகளை கண்டறிவதற்கும், புகைப்படம் எடுப்பதற்கும் ஏதுவாக இருக்கும். இந்த மார்ச் மாதத்தில் ஸ்பாட்-பில்டு பெலிகன்கள் மற்றும் கருப்பு கழுத்து கிரேன்கள் போன்ற புலம்பெயர்ந்த பறவைகள் பூங்காவிற்கு திரும்புவதால் பறவை ஆர்வலர்கள் ரசிக்க சிறந்த மாதமாகும்.இந்த மாதத்தில் பிரம்மபுத்திராவில் படகு சவாரி செய்து கங்கை டால்பின்களை இடம்பெயரும் முன் காணலாம்.

கூர்க்

மூடுபனி நிறைந்த மலைகள் மற்றும் காபி மணம் வீசும் காற்றுடன் கர்நாடகாவின் கூர்க், மார்ச் மாதத்தில் கூடுதல் அழகுடன் இருக்கும். இங்கே காபி தோட்டங்களில் பூக்கும் வெண்மையான காபி பூக்கள் காபி செடிகளுக்கு வெள்ளை போர்வை போர்த்தியது போன்று ரம்மியமாக காட்சி அளிக்கும். கூர்க் மாவட்டத்தில் பறவைகள் சரணாலயங்கள், டிரெக்கிங், துபாரே யானை முகாம் போன்ற பல இடங்கள் உள்ளன. இங்கு மார்ச் மாதத்தில் நடைபெறும் ஹாக்கி கார்னிவலின் கொடவா ஹாக்கி விழா ஒரு முக்கியமான விழாவாகும். கின்னஸ் உலக சாதனை படைத்த இந்தப் போட்டியில் பல குடும்பங்கள் அணிகளாக கலந்து கொண்டு போட்டியில் கலந்து கொள்கின்றன.

ரிஷிகேஷ்

கங்கை நதிக்கரையில் இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த நகரம் தியானம் மற்றும் யோகா மூலம் அமைதியை நாடுபவர்களுக்கு சிறந்த இடங்களில் ஒன்றாகும். மார்ச் மாதம் உள்ள லேசான வானிலை மற்றும் தெளிவான வானம் ராஃப்டிங், டிரெக்கிங் மற்றும் கேம்ப் போன்ற வெளிப்புற செயல்பாடுகளுக்கு உகந்ததாகும். ஒவ்வொரு மார்ச் மாதம் நடைபெறும் சர்வதேச யோகா விழா உலகெங்கிலும் உள்ள யோகா ஆர்வலர்களை ஈர்க்கிறது. இங்கே நடைபெறும் யோகா விழாவில் கலந்து கொள்வதால் அங்கு நடைபெறும் யோகா வகுப்புகள் மற்றும் ஆன்மீக தலைவர்களின் பேச்சுக்கள் ஒரு சிறந்த அனுபவத்தை தரும்.

சிக்கிம்

மார்ச் முதல் மே வரை இந்த பகுதியில் செழிப்பான பூக்கள், தெளிவான வானம் மற்றும் கஞ்சன் ஜங்கா மலையின் பிரம்மாண்டத்தால் அழகால் நிரம்பி இருக்கும். ஷிங்பா ரோடோடென்ட்ரான் சரணாலயத்தின் தாயகமான சிக்கிமின் மலர் பள்ளத்தாக்கான யும்தாங் உள்ளது. இங்கு மார்ச் மாதத்தில் பூக்கும் சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு பூக்கள் இந்த நகரம் முழுவதும் நிறைந்துள்ளன. மேலும் வெப்ப நீரூற்றுக்கள் நிறைந்த மேய்ச்சல் நிலங்கள் பார்த்து ரசிக்க சிறந்த இடமாகும்.

More News

Read more about: coorg
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+