» »இந்த பிரசித்தி பெற்ற சர்ச்சுகளில் என்ன ஸ்பெஷாலிட்டி இருக்கு?

இந்த பிரசித்தி பெற்ற சர்ச்சுகளில் என்ன ஸ்பெஷாலிட்டி இருக்கு?

Written By: Udhaya

கிறிஸ்துமஸ் வந்தாச்சி.. எல்லாரும் சிறப்பாக கொண்டாட தயாராகிட்டீங்களா. விடுமுறைக்கு சுற்றுலா செல்லும் திட்டம்கூட வைத்திருக்கலாம். அதேநேரத்தில் கிறிஸ்துமஸ் விழாவை வெகுவா சிறப்பிக்கனும்னு வீடு முழுமைக்கு அலங்காரம் செஞ்சிட்டீங்களா.. இந்த நேரத்தில் கிறிஸ்துமஸ் எங்கெல்லாம் வெகு சிறப்பாக கொண்டாடப்படும்னு தெரிஞ்சிக்கலாமா?

இந்தியாவில் கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பா கொண்டாடப்படும் தேவாலயங்கள பத்தி பாக்கலாம்...

அன்னை வேளாங்கண்ணி ஆலயம் :

அன்னை வேளாங்கண்ணி ஆலயம் :

தமிழ்நாட்டின் கோரமண்டல கடற்கரையோரம் அமைந்திருக்கும் வேளாங்கன்னி, அனைத்து மதத்தை சேர்ந்த மக்களுக்கும் ஆன்மீகத் ஸ்தலமாக விளங்கி வருகிறது. தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருக்கும் இந்த வேளாங்கன்னியில் அன்னை மரியாவிற்கு ஒரு மகத்தான பேராலயம் எழுப்பப்பட்டிருக்கிறது.

இங்கு கிறிஸ்துமஸ் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்படும். நாகப்பட்டினம், தஞ்சாவூர், சென்னை முதலிய பல இடங்களிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.

PC: tj_jenson

சாந்தோம் ஆலயம்

சாந்தோம் ஆலயம்

16ம் நூற்றாண்டில் சென்னைக்கடற்கரைக்கு வந்திறங்கிய போர்த்துக்கீசிய ஆக்கிரமிப்பாளர்களால் இந்த கிறித்துவ தேவாலயம் கட்டப்பட்டிருக்கிறது. துவக்கத்தில் சிறியதாக உருவாக்கப்பட்ட இந்த ஆலயம் பின்னர் 1893ம் ஆண்டில் ஆங்கிலேயர்களால் மறு உருவாக்கம் செய்யப்பட்டு கதீட்ரல் அந்தஸ்தும் அளிக்கப்பட்டிருக்கிறது.

கிறித்துவ ஆன்மீக நம்பிக்கைகளின்படி ஏசு கிறித்துவின் 12 சீடர்களில் ஒருவரான செயிண்ட் தாமஸ் கி.பி 52ம் ஆண்டில் கேரளாவுக்கு வந்திறங்கி பின் சென்னையில் உள்ள பரங்கிமலைக்கு வந்து மதப்பிரச்சாரத்தில் ஈடுபட்டு மரித்ததாக நம்பப்படுகிறது. சென்னை, திருச்சி, விழுப்புரம் உள்ளிட்ட பல இடங்களிலிருந்து இந்த ஆலயத்துக்கு பேருந்து வசதிகள் உள்ளன.

PC: Etienne LALLEMENT

லேடி ஆப் ரேன்சம் சர்ச், கன்னியாகுமரி :

லேடி ஆப் ரேன்சம் சர்ச், கன்னியாகுமரி :

கன்னியாகுமரி வந்த புனித பிரான்சிஸ் சேவியர், குமரி முட்டம் அருகே அவர் லேடி ஆப் டெலைட் கிரேட்டோவைக் கண்டார். அதே இடத்தில் அவர் ஒரு ஆலயத்தை அமைத்து, அதற்கு லேடி ஆப் ரேன்சம் சர்ச் என்று பெயரிட்டதாக வரலாறு கூறுகிறது. இந்த புனித தலத்துக்கு உலகெங்கிலுமிருந்து பலர் வருகை தருகிறார்கள். அருகிலுள்ள ரயில் நிலையம் கன்னியாகுமரி, நாகர்கோவில். விமான நிலையம் திருவனந்தபுரம், தூத்துக்குடி.

PC: John McCabe

புனித இருதய இயேசு பசிலிக்கா

புனித இருதய இயேசு பசிலிக்கா

கோத்திக் முறையில் கட்டப்பட்டுள்ள இந்த பசிலிக்கா புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது. அங்குள்ள தேவாலங்களிலேயே இது பிரபலமானதாக கருதப்படுகிறது.

PC: Aravindaraja

புனித பிலோமினா ஆலயம்

புனித பிலோமினா ஆலயம்

புனித ஜார்ஜ் ஆலயம் அல்லது புனித பிலோமினா ஆலயம் கர்நாடக மாநிலம் மைசூருவில் அமைந்துள்ளது. இந்தியாவிலுள்ள தேவாலங்களிலே மிக உயர்ந்த ஆலயமாக பார்க்கப்படும். இது 80 வருடங்கள் பழமையானது.

PC: Rahul Zota

லேடி ஆப் ரேன்சம் சர்ச்

லேடி ஆப் ரேன்சம் சர்ச்

கேரளாவில் எர்ணாகுளம் மாவட்டத்தில் அமைந்துள்ள வல்லர்பாடம் கிறிஸ்தவர்களுக்கு மிகவும் பிரபலமான ஊராகும். காரணம் அங்கு அமைந்துள்ள லேடி ஆப் ரேன்சம் சர்ச். உள்ளூர் மக்கள் இந்த ஆலயத்தை வல்லர்பாடம் ஆலயம் என்று அழைக்கின்றனர்.

PC: Captain

விண்ணைத் தாண்டி வருவாயா ஆலயம்

விண்ணைத் தாண்டி வருவாயா ஆலயம்

இப்படியெல்லாமா பேரு வச்சிருக்காங்கனு நினைக்கவேண்டாம். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் வருமே அதே சர்ச்தான். இந்த படத்துக்கு அப்பறம் தமிழகத்தில் இந்த ஆலயம் பிரபலமாகியுள்ளது. ஆலப்புழையை அடுத்த புலிக்குன்னு பகுதியில் அமைந்துள்ள இந்த சர்ச்க்கு நீர் வழியாக செல்லலாம். கேரளாவிலுள்ள தேவாலயங்களில் சிறந்த ஒன்றாக இது விளங்குகிறது.

 புனித மேரி பசிலிக்கா:

புனித மேரி பசிலிக்கா:

கோத்திக் முறையில் கட்டப்பட்ட ரோமன் கத்தோலிக்க திருச்சபை இதுவாகும். பெங்களூருவில் கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படும் இடங்களில் இதுவும் ஒன்றாகும்.

PC: Johnchacks

பாம் ஜீஸஸ் பசிலிக்கா:

பாம் ஜீஸஸ் பசிலிக்கா:

உலகின் பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோவினால் அறிவிக்கப்பட்டுள்ள இந்த பசிலிக்கா,பழைய கோவாவில் அமைந்துள்ளது. கோவாவின் முக்கிய சுற்றுலாத் தளங்களுள் இது ஒன்றாகும்.

PC: P.S.SUJAY

அனைத்து புனித கதீட்ரல் திருச்சபை :

அனைத்து புனித கதீட்ரல் திருச்சபை :

அலகாபாத்தில் அமைந்துள்ள இந்த ஆலயம் ஐரோப்பிய முறையில் கட்டப்பட்டுள்ளது. கோத்திக் முறையில் கட்டப்பட்டுள்ள இந்த ஆலயம் வட இந்தியாவில் மிகப்பிரபலம்.

PC: Dhirendram

புனித பால் கதீட்ரல்:

புனித பால் கதீட்ரல்:

இந்தியாவின் யூனியன் பிரதேசங்களில் ஒன்றான டையூவில் இந்த கதீட்ரல் அமைந்துள்ளது. புனித பால் அவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த சபை, டையூவில் மிகச்சிறந்த சுற்றுலாத்தளமாகும்.

PC:Shakti

புனித பால் கதீட்ரல்

புனித பால் கதீட்ரல்

மேற்கு வங்கத்தின் தலைநகர் கொல்கத்தாவில் அமைந்துள்ள இந்த திருச்சபை, இந்திய - கோத்திக் முறையில் கட்டப்பட்டதாகும். கொல்கத்தாவின் சிறந்த சுற்றுலாத்தளமான இங்கு கிறிஸ்துமஸ் பண்டிகை வெகு கோலாகலமாகக் கொண்டாடப்படும்.

PC: Ankitesh Jha

புனித தாமஸ் கதீட்ரல்

புனித தாமஸ் கதீட்ரல்

இந்தியாவின் பழைமையான திருச்சபைகளுள் ஒன்றான இந்த கதீட்ரல் மும்பையில் அமைந்துள்ளது. பிரிட்டிஷ் முறையில் கட்டப்பட்ட இந்த ஆலயம் இந்தியாவின் வரலாற்றுச்சின்னங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.

PC: Aw1805

அட கிறிஸ்துமஸுக்கு ஃபேமஸான சர்ச் எதல்லாம் தெரியுமா?