» » பாண்டிச்சேரியில் ஒரு நாளில் என்னெல்லாம் பண்ணலாம் தெரியுமா?

பாண்டிச்சேரியில் ஒரு நாளில் என்னெல்லாம் பண்ணலாம் தெரியுமா?

Posted By: Staff

வீக் எண்டு விடுமுறையை கொண்டாட சிறந்த இடமென்றால் அது சந்தேகமே இல்லாமல் பாண்டிச்சேரி தான். அற்புதமான கடற்கரைகள், கோயில்கள்,  ஆரோவில்லே போன்ற வித்தியாசமான மனதுக்கு புத்துணர்ச்சி தந்திடும் இடங்கள், குறைந்த விலையில் கிடைக்கும் சரக்கு, ஏதோ பிரஞ்சு நகரத்துக்கு வந்துவிட்டது போன்ற உணர்வு என பாண்டிச்சேரியில் நாம் அனுபவிக்க ஏராளமான விஷயங்கள் உண்டு.

வாருங்கள், பாண்டிச்சேரிக்கு ஒரு வீக்எண்டு விடுமுறைக்கு சென்றால் எந்தெந்த இடங்களை எல்லாம் தவற விடக்கூடாது என்பதை தெரிந்துகொள்ளலாம்.  

கடற்கரைகள்:

கடற்கரைகள்:

பாண்டிச்சேரியில் நிச்சயம் தவற விடக்கூடாத இரண்டு கடற்கரைகள் உள்ளன. பிராம்னேட் கடற்கரை எனப்படும் பாண்டிச்சேரி கடற்கரை இந்நகரின் முக்கிய பகுதியில் அமைந்திருக்கிறது. 1.2கி.மீ நீளமான இந்த கடற்கரை காந்தி சிலையில் துவங்கி துப்ளெக்ஸ் பூங்காவில் முடிவடைகிறது.

கடற்கரைகள்:

கடற்கரைகள்:

இந்த கடற்கரையை ஒட்டியே முதலாம் உலகப்போரில் மரணமடைந்த பிரஞ்சு வீரர்களின் போர் நினைவகம் அமைந்துள்ளது.

கடற்கரைகள்:

கடற்கரைகள்:

மேலும் பாண்டிச்சேரி அரசின் தலைமை செயலகமும், பிரபலமான மஞ்சள் நிற வர்ண சுவர் கொண்ட பிரஞ்சு தூதரகமும், லே கபே என்ற பிரஞ்சு பேக்கரியும் உள்ளன. மாலை நேரத்தில் நண்பர்களுடனோ, குடும்பத்தினருடனோ நேரத்தை செலவிட அற்புதமான இடமாகும் இது.

கடற்கரைகள்:

கடற்கரைகள்:

பிராம்னேட் கடற்கரையில் உள்ள காந்தி சிலை.

கடற்கரைகள்:

கடற்கரைகள்:

பேரடைஸ் பீச்:

பாண்டிச்சேரியில் இருக்கும் ஒரு குட்டி சொர்க்கம் என்றால் அது பேரடைஸ் பீச் தான். பாண்டிச்சேரி நகரில் இருந்து 7கி.மீ தொலைவில் இருக்கும் இந்த பேரடைஸ் பீச் ஒரு குட்டி தீவு ஆகும். 20 நிமிட படகு பயணத்தில் இந்த தீவினை நாம் சென்றடையலாம். காலை ஒன்பது மணி முதல் மாலை இந்து மணி வரை சுற்றுலாப்பயணிகள் இங்கே அனுமதிக்கப்படுகின்றனர்

கடற்கரைகள்:

கடற்கரைகள்:

இந்த குட்டி தீவு கடற்கரையிலே சிறிய உணவகம் ஒன்றும், ஆண்கள், பெண்கள் இருவருக்கும் தனித்தனியே உடை மாற்றும் இடம் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இரைச்சலே, மக்கள் நெரிசலோ இல்லாமல் மகிழ்ச்சியாக கடற்கரையில் விளையாட பேரடைஸ் பீசை விட சிறந்த இடம் கிடையாது.

ஆரோவில்லே:

ஆரோவில்லே:

பாண்டிச்சேரியின் தனித்துவமான அடையாளங்களில் முக்கியமானதும் வெளிநாட்டவரிடையே மிகவும் பிரபலமான ஆன்மீக ஸ்தலமுமாக திகழ்வது ஆரோவில்லே ஆகும். அரவிந்தர் ஆஷ்ரமத்திற்கு சொந்தமான ஆரோவில்லேவின் மத்தியில் இருக்கும் மாத்ரிமந்திர் போன்ற ஓரிடத்தை நம் வாழ்நாளில் பார்த்திருக்கவே முடியாது. இதனை கட்டிமுடிக்க மட்டுமே கிட்டத்தட்ட 38 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன.

ஆரோவில்லே:

ஆரோவில்லே:

இதனுள் பல சிறிய தியான அறைகளும், இதன் நடுவே முற்றிலும் கல்லினால் கட்டப்பட்ட சிறிய சப்தம் கூட புகமுடியாத தியான மண்டபம் ஒன்றும் இருக்கிறது. இங்கே பொதுமக்கள் 15 நிமிடம் வரை அமர்ந்து தியானத்தில் ஈடுபடலாம்.

ஆரோவில்லே:

ஆரோவில்லே:

இதற்கு அனுமதி இலவசம் என்றாலும் ஒரு நாள் முன்பாகவே வந்து இலவச அனுமதிச்சீட்டை பெற வேண்டியது அவசியமாகும்.

மணக்குள விநாயகர் கோயில்:

மணக்குள விநாயகர் கோயில்:

பாண்டிச்சேரியில் இருக்கும் பிரசித்திபெற்ற கோயிலென்றால் அது மணக்குள விநாயகர் கோயில் தான். வங்காள விரிகுடாவை நோக்கியபடி அமர்ந்திருக்கும் மணக்குள விநாயகருக்கு புவனேஸ்வர் கணபதி என்ற பெயரும் உண்டு. காலை 5.45 முதல் 12.30 வரையும், மாலையில் 4.00 முதல் 09.30 வரையும் கோயில் நடை திறந்திருக்கிறது

புகைப்படங்கள்:

புகைப்படங்கள்:

ப்ரோமநெட் கடற்கரையில் இருக்கும் புகழ்பெற்ற பிரஞ்சு பேக்கரியான 'லே கபே'. இது இருபத்திநான்கு மணிநேரமும் திறந்திருக்கிறது.

புகைப்படங்கள்:

புகைப்படங்கள்:

மணக்குள விநாயகர் கோயிலை போன்றே பாண்டிச்சேரியில் பிரபலமான மற்றொரு கோயில் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில். இந்தியாவில் உள்ள மிகப்பெரிய ஆஞ்சநேயர் சிலைகளுள் ஒன்றாகும் இது.

புகைப்படங்கள்:

புகைப்படங்கள்:

பிரஞ்சு வீதிகள் !!

புகைப்படங்கள்:

புகைப்படங்கள்:

பாண்டிச்சேரியில் மகாகவி பாரதியார் தங்கியிருந்த இல்லம்.