Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியாவின் டாப் 10 பணக்கார கோவில்கள் இவைகள் தானாம்! அடேங்கப்பா இவ்வளவு சொத்து மதிப்பா?!

இந்தியாவின் டாப் 10 பணக்கார கோவில்கள் இவைகள் தானாம்! அடேங்கப்பா இவ்வளவு சொத்து மதிப்பா?!

இந்தியாவில் உள்ள 500,000 க்கும் மேற்பட்ட கோவில்கள் நாட்டின் வளமான மத பாரம்பரியத்தை பிரதிபலிக்கின்றன. இந்தியாவில் உள்ள பல்வேறு கோயில்களின் அழகைக் காணவும், கட்டிடக்கலையை ரசிக்கவும், இந்திய வரலாற்றில் அதன் முக்கியத்துவத்தைப் பற்றி அறிந்து கொள்ளவும் பல லட்சக்கணக்கான பயணிகள் ஆண்டு தோறும் இங்கு வருகை தருகின்றனர்.

நவீனத்துவத்தின் இந்த காலக்கட்டத்தில், நம் கலாச்சாரம், சடங்குகள் மற்றும் மதத்தை எவ்வாறு பாதுகாப்பது மற்றும் வணங்குவது என்பதை இந்தியர்களாகிய நாம் நிச்சயம் அறிந்து வைத்திருக்கிறோம்!

பழங்காலக் கோயில்கள் மனிதகுலத்தால் வணங்கப்படும் பண்டைய தெய்வங்களின் வழிபாட்டுத் தலங்களாக மட்டுமில்லாமல் தங்கம், வைரம், வைடூரியம் போன்ற அரிதான சொத்துக்களுக்கும், பல கோடி மதிப்பு உள்ள பொருட்களுக்கும், நிலங்களுக்கும் சொந்தமாகக் கொண்டிருப்பவை.

கோடிக்கணக்கான ரூபாய் நன்கொடைகள், தங்க மூட்டைகள், வைர நகைகள், அனைத்து விதமான செல்வங்களும் ஆயிரக்கணக்கான கோடி மதிப்புள்ள கோயில் பெட்டகங்களுக்குள் வெள்ளம் போல் நிரம்பி வழிகின்றன. அவற்றின் மதிப்பை அறிய ஆர்வமாக உள்ளது அல்லவா? ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டும் டாப் 10 பணக்கார கோவில்களின் லிஸ்ட் இங்கே உள்ளது!

 பூரி ஜெகநாதர் கோவில், ஒரிசா

பூரி ஜெகநாதர் கோவில், ஒரிசா

இந்த பணக்கார கோவில்களின் பட்டியலில் 10 ஆவது இடத்தைப் பிடித்து இருப்பது பூரியில் உள்ள ஜெகநாதர் கோவிலாகும்.இந்தியாவின் முக்கியமான யாத்திரை மையமான இந்தக் கோவில், சார் தாம் யாத்ராவின் புனிதத் தலங்களில் ஒன்றாகவும் இந்தியாவின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகவும் உள்ளது.

ஜெகநாதர் கோயிலின் வங்கி வைப்பு 50 கோடிக்கும் மேல் உள்ளது. சுனா பேஷா விழாவின் போது தெய்வங்கள் 209 கிலோ தங்கத்தால் அலங்கரிக்கப்படுவது என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயமே. ஜகந்நாதரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட சுமார் 30,000 ஏக்கர் நிலம் இதற்கு சொந்தமானது.

 மதுரை மீனாட்சி கோவில், தமிழ்நாடு

மதுரை மீனாட்சி கோவில், தமிழ்நாடு

வைகை ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள தமிழ்நாட்டின் மிக முக்கிய அடையாளமான மீனாட்சி அம்மன் கோவில் தினமும் சுமார் 20 முதல் 30 ஆயிரம் பக்தர்களை வரவேற்கிறது.

இந்த கோவிலுக்கு 60 கோடி ரூபாய்மதிப்புள்ள பணம், தங்கம் மற்றும் வைரம் ஆண்டுதோறும் காணிக்கையாக கிடைக்கிறது. இரண்டு தங்க விமானங்கள், கோயிலின் சுற்றுப்புறத்தில் சுமார் 33,000 சிற்பங்கள், கோவிலைச் சுற்றியுள்ள ஏராளமான நிலங்கள், கடைகள் ஆகியவை அனைத்தும் இக்கோவிலுக்கு சொந்தமாகும்.

சாய்பாபா கோவில், ஷீரடி

சாய்பாபா கோவில், ஷீரடி

1922 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த அழகிய ஆலயம் உலகின் தலைசிறந்த புனித யாத்திரை தலங்களில் ஒன்றாகும். மத வேறுபாடின்றி இந்தக் கோவில் அனைத்து மதத்தினரையும் வரவேற்பதால் ஆண்டு தோறும் கோடிக்கணக்கான யாத்ரீகர்கள் இங்கு வருகை தருகின்றனர்.

இந்த கோவிலில் தோராயமாக ரூ .32 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகளும், ரூ.6 லட்சத்துக்கும் அதிகமான வெள்ளி நாணயங்களும் உள்ளன. இந்த கோவிலுக்கு கிடைக்கிறது.

சித்திவிநாயகர் கோவில், மும்பை

சித்திவிநாயகர் கோவில், மும்பை

மும்பையில் அமைந்துள்ள சித்திவிநாயகர் கோவில், நாட்டின் மிகவும் பிரபலமான மற்றும் பணக்கார கோவில்களில் ஒன்றாகும். இங்கு தினமும் 25 ஆயிரம் முதல் 2 லட்சம் வரை பார்வையாளர்கள் குவிகின்றனர். விநாயகப் பெருமான் தங்கக் கூரையின் கீழ் அமர்ந்துள்ளார், மேலும் கோவிலில் இதுவரை 67 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள 158 கிலோ தங்கக் காணிக்கைகள் குவிந்துள்ளன.

ஆண்டுதோறும் 125 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் பணத்தை இக்கோவில் காணிக்கையாகப் பெறுகிறது. இங்குள்ள பலத்த பாதுகாப்பு பெட்டகங்கள் கணக்கற்ற வைர வைடூரிய நகைகளைக் கொண்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள பிரபலங்களும் இந்த கோவிலுக்கு அடிக்கடி வந்து செல்கின்றனர்.

 வைஷ்ணோ தேவி கோவில், ஜம்மு & காஷ்மீர்

வைஷ்ணோ தேவி கோவில், ஜம்மு & காஷ்மீர்

இந்தியாவின் பழமையான மற்றும் பணக்கார கோவில்களில் ஒன்றான மாதா வைஷ்ணோ தேவியின் சன்னதிக்கு உலகம் முழுவதிலுமிருந்து மில்லியன் கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். கடல் மட்டத்திலிருந்து 5300 அடி உயரத்தில் அமைந்துள்ள இக்கோயில் இந்திய புராணக் கதைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் சுமார் எட்டு மில்லியன் யாத்ரீகர்கள் இந்த கோவிலுக்கு வருகை தருகின்றனர், மேலும் இது திருப்பதிக்கு அடுத்தபடியாக இந்தியாவில் அதிகம் பார்வையிடப்படும் இரண்டாவது கோவிலாகும். இந்துக்களின் ஆழமான வேரூன்றிய மத நம்பிக்கைகளின் மையமான இந்த கோவில் ஆண்டு தோறும் சுமார் 500 கோடியை வருமானமாகப் பெறுகிறது. ஏற்கனவே 1.2 டன் தங்கம் சொத்தாக உள்ள நிலையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான கிலோ தங்கம்நன்கொடையாக வந்துக் குவிந்துள்ளது.

ஐயப்பன் கோவில், சபரிமலை

ஐயப்பன் கோவில், சபரிமலை

இந்தியாவின் பணக்காரக் கோயில்களில் ஒன்றான சபரிமலை ஆண்டுதோறும் சுமார் 100 மில்லியன் பக்தர்களை வரவேற்கிறது. பிரதான கடல் மட்டத்திலிருந்து 4,133 அடி உயரத்தில் மலை உச்சியில் அமைந்துள்ள மலைகள் மற்றும் அடர்ந்த காடுகளால் சூழப்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் 300 மில்லியனுக்கும் அதிகமான பக்தர்கள் வருகை தருகின்றனர். பல்லாயிரக் கோடி சொத்து மதிப்புக் கொண்ட இக்கோவில் ஆண்டுதோறும் ரூ.218 கோடியை வருமானமாகப் பெறுகிறது.

பொற்கோவில், அமிர்தசரஸ்

பொற்கோவில், அமிர்தசரஸ்

சீக்கிய சமூகத்தின் மிகவும் பிரபலமான மத மையமான ஹர்மந்திர் சாஹிப் என்றழைக்கப்படும் பொற்கோவில் அதன் தங்க நிறம் மற்றும் பிரத்தியேகமான கட்டிடக்கலை அழகு காரணமாக உலகப் பயணிகளை ஈர்க்கிறது. இந்த கண்கவர் தங்க சன்னதி தங்கம் மற்றும் வெள்ளி விவரங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது மற்றும் அதன் பிரகாசமான ஒளிரும் தங்க குவிமாடத்திற்காக இரவில் அழகாக இருக்கிறது.

கோயிலின் விதானம் தூய தங்கத்தால் ஆனது. குரு கிரந்த் சாஹிப்பின் புனித புத்தகம் வைக்கப்பட்டுள்ள பலிபீடத்தில் விலையுயர்ந்த வைரங்கள் மற்றும் விலையுயர்ந்த ரத்தினங்கள் பதிக்கப்பட்டுள்ளன. தினமும் சுமார் 40,000 பார்வையாளர்களை ஈர்க்கும் பொற்கோவில் ஆண்டுதோறும் ரூ.3௦௦ கோடியை வருமானமாகப் பெறுகிறது.

குருவாயூரப்பன் கோவில், குருவாயூர்

குருவாயூரப்பன் கோவில், குருவாயூர்

கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கப்பட்ட குருவாயூரப்பன் கோயில் தென்னிந்தியாவின் துவாரகை என்று அறியப்படுகிறது. இந்த கோவிலுக்கு ஆண்டுதோறும் 6-10 மில்லியன் பக்தர்கள் வருகை தருகின்றனர் மற்றும் தென்னிந்தியாவின் பணக்கார கோவில்களில் ஒன்றான இக்கோவிலுக்கு தினமும் சுமார் 40,000 முதல் 50,000 பேர் வந்து செல்கின்றனர்.

சுமார் 230 ஏக்கர் நிலத்தைசொத்தாகக் கொண்ட இக்கோவிலில் விலையுயர்ந்த தங்கமும் வெள்ளியும் வைர நகைகளும் உள்ளன. குருவாயூர் தேவசம் போர்டுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.2.5 கோடி உண்டியல் வசூலுடன் சுமார் ரூ.400 கோடி கார்பஸ் உள்ளது. இந்த கோவிலின் மொத்த சொத்து மதிப்பு 2500 கோடியாகும்.

 ஸ்ரீ பத்மநாபசுவாமி கோவில், திருவனந்தபுரம்

ஸ்ரீ பத்மநாபசுவாமி கோவில், திருவனந்தபுரம்

திருவிதாங்கூர் முன்னாள் அரச குடும்பத்தால் நிர்வகிக்கப்பட்ட இக்கோவில் பணக்கார கோவில்களின் பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்கிறது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை மிக சாதாரணமாக இருந்த இந்தக் கோவிளில் 2011 ஆம் ஆண்டு ஜூலை 7 ஆம் தேதி, கோவிலின் 5 ரகசிய பாதாள அறைகளில் சில அறைகள் திறக்கப்பட்டன.

திறக்கப்பட்ட அறைகளில் இருந்து ரூ. 1,00,000 லட்சம் கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பொக்கிஷங்கள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, இந்த கோயில் உலகப் புகழ் பெற்றதோடு, அந்த ஆண்டு இந்தியாவின் பணக்கார கோவிலான திருமலையான் வெங்கடேசனை பின்னுக்கு தள்ளிவிட்டார்.ரூ. 500 கோடி மதிப்புள்ள தங்க விஷ்ணு சிலை, விலைமதிப்பற்ற பழங்கால தங்க ஆபரணங்கள், தங்க கிரீடங்கள், விலையுயர்ந்த ஆபரணங்கள், வெள்ளி, வைரங்கள், வைடூரியங்கள், மாணிக்க மற்றும் மரகதங்கள் ஆகியவை அடங்கும். இதன் மூலம் இக்கோவில் இந்தியாவில் மட்டுமன்றி உலக அளவில் பணக்கார கோவில்களில் இடம் பிடித்துள்ளது.

திருமலை வெங்கடேசப் பெருமாள், ஆந்திரப் பிரதேசம்

திருமலை வெங்கடேசப் பெருமாள், ஆந்திரப் பிரதேசம்

ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் திருப்பதி வெங்கடேஸ்வரா சுவாமி கோயில், உலகின் மிகப்பெரிய மத யாத்திரை ஸ்தலங்களில் ஒன்றாகும்.தினசரி சராசரியாக 30,000 முதல் 2 லட்சம் பார்வையாளர்களைக் காணும் இக்கோவில் இந்தியாவிலேயே பணக்கார கோவிலாகும்.

3000 கிலோ தங்கம் இருப்பில் உள்ள நிலையில், தினமும் வெங்கடேசப் பெருமாள் 5௦௦ கிலோ தங்கத்தால் அலங்கரிக்கப்படுகிறார். லட்டு விற்பனை, நன்கொடை, உண்டியல், ஊதுபத்தி மற்றும் டெண்டர்கள் மூலம் ஆண்டுதோறும் ரூ. 2,௦௦௦ கோடியை வருமானமாகப் பெறும் இக்கோவிலின் நிகர சொத்து மதிப்பு 2 லட்சம் கோடியை தாண்டி நிற்கும் என்று கூறப்படுகிறது.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X