» »ஆந்திராவிலுள்ள லேபக்ஷியில் அப்படி என்னங்க ஸ்பெஷல்? வாங்க போய் பார்க்கலாம்!!

ஆந்திராவிலுள்ள லேபக்ஷியில் அப்படி என்னங்க ஸ்பெஷல்? வாங்க போய் பார்க்கலாம்!!

By: BalaKarthik

தொல்லியல் முக்கியத்துவம்கொண்டு பிரசித்திப்பெற்று காணப்படும் இவ்விடமானது அதீத கலாச்சாரத்தையும் கொண்டிருக்க, மிகவும் புகழ்பெற்ற சுற்றுலா இலக்காகவும் நாட்டின் கடந்த காலத்து வரலாற்ற அழகை தாங்கிக்கொண்டு விளங்குகிறது இந்த லேபக்ஷி. இந்துப்பூரிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் ஆந்திரபிரதேசத்தில் காணப்படும் லேபக்ஷி, பெங்களூருவிலிருந்து அனந்தபூர் மாவட்டத்தில் 120 கிலோமீட்டர் தொலைவில் காணப்படுகிறது.

இந்த வரலாற்றை நாம் ஆராய, பழங்காலத்து ஆலயமான சிவ பெருமானையும், விஷ்ணு, வீரப்பத்திர சன்னதிகளையும் காண்கிறோம். இந்த ஆலயங்கள் 1336 - 1646 வரை விஜயநகர காலத்தில் கட்டப்பட்டிருக்கிறது. இந்த ஆலயங்கள் சுவரோவியங்களுக்கு பெயர்பெற்று சுவரை அழகுப்படுத்தி காணப்பட, கலையை கூக்குவிக்கும் ஆதரவாளர்களுடைய கண்களுக்கு இவை விருந்தாக அமையக்கூடும்.

 லேபக்ஷியை நாம் காண சிறந்த நேரங்கள்:

லேபக்ஷியை நாம் காண சிறந்த நேரங்கள்:

குளிர்காலமானது சிறந்து காணப்பட, ஈர்ப்புகளை நாம் ஆராய அருமையான கால நிலையாகவும் அமைகிறது. கோடைக்காலத்தின்போது, கதிரவன் தாக்கமானது கடுமையாக இருக்க, வெதுவெதுப்பான இரவுகளும் அசௌகரிய நிலையை நமக்கு தர, பருவமழைக்காலத்தின்போது, ஈரப்பதத்துடன் காணப்படுவதால் விடுமுறையும் சிறப்பாக செல்லக்கூடும்.

லேபக்ஷியை நாம் காண அக்டோபர் முதல் பிப்ரவரி வரையிலான காலங்களானது சிறப்பாக அமைய, வெளிப்புற செயல்களுக்கு அருமையான நேரமாகவும் இம்மாதங்கள் லேபக்ஷியில் அமைகிறது. கால நிலையும் இந்த நேரங்களில் சிறப்பாகவே அமையக்கூடும்.

நீங்கள் இந்த குளிர்காலத்து வெப்ப நிலையை காண 15 டிகிரியிலிருந்து 30 டிகிரி வரையிலே காணப்படவும்கூடும் என்பதால், சுற்றுலா பயணிகளுக்கு சிறப்பாக அமைகிறது. இரவு நேரமானது குளுமையுடனும், அழகையும் சேர்த்து தருவதோடு சவுகரியத்தையும் தர, பல்வேறு இடங்களின் ஈர்ப்பால் நம் மனமானது இதமானதோர் உணர்வையும் கொள்ளக்கூடும்.

PC: Perched

லேபக்ஷியை நாம் அடைவது எப்படி?

லேபக்ஷியை நாம் அடைவது எப்படி?

ஆகாய மார்க்கமாக அடைவது எப்படி:

லேபக்ஷியின் அருகாமையில் காணப்படும் ஓர் விமான நிலையமாக 43 கிலோமீட்டர் தொலைவில் காணப்படும் ஸ்ரீ சத்யசாய் விமான நிலையமானது காணப்படுகிறது. பெங்களூருவிலிருந்து ஸ்ரீ சத்யசாய் விமான நிலையத்துக்கு எண்ணற்ற விமானங்கள் பறந்துக்கொண்டிருக்கிறது. இங்கிருந்து, உங்களுடைய இலக்கை நோக்கி காரை பதிவு செய்து புறப்படலாம். பெங்களூருவிலிருந்து ஸ்ரீ சத்யசாய் விமான நிலையத்தை நாம் அடைய ஒரு மணி நேரமானது தேவைப்படக்கூடும்.

தண்டவாள மார்க்கமாக அடைவது எப்படி:

பெங்களூருவிலிருந்து லேபக்ஷிக்கு நேரடியாக இரயில் என்பது இல்லை. இருப்பினும், நீங்கள் பெங்களூருவிலிருந்து மலுகூர் வரை இரயிலில் வர, இந்த பயணமானது மூன்று மணி நேரங்கள் ஆகிறது. இதுதான் லேபக்ஷியின் அருகாமையில் இருக்கும் இரயில் நிலையமாகவும் அமைகிறது. நீங்கள் மலுகூரை முதலில் அடைய அங்கிருந்து கார் அல்லது பேருந்தின் உதவியுடன் இந்த பகுதியை தாமதமின்றி அடைந்திடலாம்.

சாலை மார்க்கமாக அடைவது எப்படி:

பெங்களூருவிலிருந்து லேபக்ஷிக்கான சிறப்பு பயணமாக சாலைப்பயணமானது அமைய, நீங்கள் கார் அல்லது பேருந்தின் மூலம் இலக்கை எட்டலாம். இந்த சாலைப்பயணமானது ஈர்க்கும் காட்சிகளால் சூழ்ந்து காணப்பட, அழகிய இடங்களையும் செல்லும் வழி முழுவதும் கொண்டிருக்கிறது. மேலும் இந்த வழியில் பல தனியார் மற்றும் அரசு பேருந்துகளும் காணப்படக்கூடும்.

இந்த வழியில் பேருந்து சேவைகள் தொடர்ந்து காணப்பட, பயணத்துக்கான செலவும் மலிவாகவே இருக்கிறது. இந்த வழியில் பல வகையான பேருந்துகளும் செல்கிறது. இந்த பேருந்துகளாக அரசு பேருந்துகள், வோல்வோ பேருந்துகள், படுக்கை வசதிக்கொண்ட பேருந்துகள், குளிர்சாதன வசதிக்கொண்ட பேருந்துகள், என அரசாங்கத்தினாலும், தனியாராலும் இயக்கப்பட்டு வருகிறது.

நீங்கள் உங்களுடைய பயண சீட்டை முன்பே பதிந்து இருக்கையையும் தேர்ந்தெடுத்து பயணத்துக்கு தயாராகலாமே.

நீங்கள் கார் அல்லது சொந்தக்காரை பயணத்துக்காக தேர்ந்தெடுக்கலாம். காரில் சென்றால் இரண்டு மணி நேரத்தை தாண்டி நமக்கு தேவைப்படுவதுமில்லை. அதோடு அழகிய மற்றும் ஆச்சரியமூட்டும் கிராமங்களின் வழியாகவும் நம் பயணமானது இனிமையாக செல்லக்கூடும்.

வழி 1: பெங்களூரு - ஹெப்பால் - எலங்கா - தொட்டாபேலாபூர் - கௌரிபிடானூர் - இந்துப்பூர் - லேபக்ஷி.

வழி 2: பெங்களூரு - எலங்கா - தேவனஹல்லி - சிக்பேலாபூர் - பகேப்பல்லி - லேபக்ஷி.

இருப்பினும், வழி 1 சிறப்பாக காணப்பட, அதீத அழகுடனும் காணப்படக்கூடும்.

வழி 1 ஆனது பெங்களூருவிலிருந்து ஹெப்பாலுக்கு செல்ல, சுமங்கலி சேவாசரமா பிரதான சாலை மற்றும் சேவை சாலை முதல் விநாயக நகரின் பெல்லரி சாலை வரை காணப்படுகிறது. இந்த தூரமானது 1.3 கிலோமீட்டர் காணப்பட, தோராயமாக 5 நிமிடங்களே ஆகிறது. 9.8 கிலோமீட்டர் (12 நிமிடங்களில்) கடக்க, நீங்கள் ஒரு தேசிய நெடுஞ்சாலை 44 வழியை காண அதன் வழியாக வெளியே செல்லவும் வேண்டும்.

இந்த சாலையில் தொடர்ந்து செல்ல 20 நிமிடங்கள் தேவைப்பட எலங்காவை நீங்கள் அடைவீர்கள். இரயில்வே நிலைய பிரதான சாலை வழியாக எடுத்து மாநில நெடுஞ்சாலை 9ஐ அடைய, அங்கிருந்து மாநில நெடுஞ்சாலை 9ஐ தொடர்ந்து K.G.கோவிந்தப்புராவையும் அடைவீர்கள். 25.6 கிலோமீட்டரை கடந்து தொட்டாபல்லாபுராவை நீங்கள் அடைவீர்கள்.

இங்கிருந்து, தொடர்ந்து நெலமங்கலா - சிக்பேலாபூர்/ துபாகேரா - தொட்டபேலாபூர் சாலை வழியாக தொடர்ந்து மாநில நெடுஞ்சாலை 9இன் வழியாக கௌரிபிடானூரையும் அடைகிறோம். 38.7 கிலோமீட்டர்கள் கரந்து இடப்புறத்தில் திரும்ப விநாயகா மொபைல் செர்வீஸை அடைய அங்கிருந்து தொடர்ந்து செல்லவும் வேண்டும். இறுதியாக நீங்கள் கௌரிபிடானூரையும் அடைவீர்கள்.

இங்கிருந்து, கிழக்கை நோக்கி நாம் செல்ல மாநில நெடுஞ்சாலை 9இன் வழியாக இடதுப்புறத்திலுள்ள ராஜேஷ்வரி மொபைல் மற்றும் பேன்ஸி கிப்ட் சென்டரையும் அடைய, அங்கிருந்து இடப்பக்கம் காணப்படும் இரயில் நிலையத்தை நோக்கியும் செல்கிறோம். 2 கிலோமீட்டரை கடந்து ஓம் ஸ்ரீதிசை காமன் பெட் சென்டரை நாம் கடக்கிறோம். அதன்பின்னர் 2.9 கிலோமீட்டரை கடந்து வலப்புறத்தில் திரும்ப, 41 நிமிடங்கள் கழித்து 24.7 கிலோமீட்டரில் காணப்படும் இந்துப்பூரையும் நாம் அடைகிறோம்.

இப்பொழுது 60 மீட்டர் வடக்கில் எடுக்க, அதன்பின்னர் 3ஆவது வழி வெளியாகவும் லேபக்ஷி சாலையை அடைய 19 நிமிடங்களுக்கு பிறகு லேபக்ஷியையும் நாம் அடைகிறோம்.

செல்லும் வழியில் நீங்கள் அழகிய, பெரும் ISKON ஆலயங்களுள் ஒன்றையும் ரசிக்கக்கூடும். இங்கே நீங்கள் நிறுத்த ஆசைக்கொண்டால், நிதானமாக நேரத்தை செலவிட்டு அதன்பின்னர் புறப்படலாம்.

நீங்கள் அதன்பின்னர் விஷ்வேஸ்வராய தொழிற்சாலையையும், நவீன அருங்காட்சியகத்தையும் அடைய, இதுவரை காணாத அதிசயத்தையும் நீங்கள் காணக்கூடும், அத்துடன் உங்கள் பயணத்தில் விளையாட்டு சேர்ந்திட, அவற்றால் நீங்கள் சில சமயங்களில் இங்கே நிறுத்தவும்படக்கூடும்.
அதன்பின்னர் நீங்கள் ஜெயப்பிரகாஷ் நாராயண பல்லுயிர் பூங்காவையும் அடைய, நாம் விரும்பத்தகும் உணர்வுடன் நிறுத்தும் இடம் இதுவென்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இயற்கை ஆர்வலர்களுக்கான, லும்பினி தோட்டமானது செல்லும் வழியில் காணப்பட, இங்கே நம்முடைய ஓய்வையும் எடுத்து, பிறகு., தேனீர் மற்றும் சிற்றுண்டிகளை உண்ணும் நோக்கத்துடனும் காரை நிறுத்தலாம். இங்கே செல்லும் வழியில் மூன்று பிரசித்திப்பெற்ற மற்றும் அழகிய சிறு ஆலயங்கள் காணப்பட, அவை நாம் பார்க்க வேண்டியவையாகவும் அமையக்கூடும். இந்த ஆலயங்களாக சனீஸ்வர சுவாமி ஆலயம், பசவனப்பள்ளி சிவபெருமான் ஆலயம், மற்றும் ஸ்ரீ வெங்கட்ரமணா ஆலயங்களாகவும் அமையக்கூடும்.

லேபக்ஷி உள் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் காணப்படும் இடங்கள்:

லேபக்ஷி உள் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் காணப்படும் இடங்கள்:

லேபக்ஷி ஆலயம்:

இவ்விடத்தின் ஈர்ப்புகளுள் ஒன்றாக லேபக்ஷி ஆலயமானது காணப்படுகிறது. இந்த ஆலயமானது பாறைக்கொண்டு செதுக்கப்பட்டு விஜய நகர கட்டிடக்கலை பாணியில் காணப்பட, தொங்கும் தூண்கள் இந்த இடத்தின் சிறப்பாக காணப்படவும்கூடும். இந்த தூண்களின் வேலைப்பாடானது அருமையான பொறியியல் திறனுடன் பதினாறாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது எனவும் தெரியவருகிறது.

இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆட்சிசெய்தபோது, இந்த தூண்களின் பின்னால் இருக்கும் இரகசியங்களை கண்டுபிடிக்க முயன்றதாகவும் தெரியவர, ஆனால் அது முடியாமல் போனதாகவும் சொல்லப்படுகிறது. நாட்டுப்புறவியல்படி, இராமயணத்தின் முக்கியமாக இந்த ஆலயமானது காணப்படுவதாகவும் தெரியவருகிறது.

இதன் கூற்றுப்படி, இவ்விடம் தான் ஜடாயூ பறவையானது விழுந்த இடமாக சொல்லப்படுகிறது. போராட்டத்தால் பறவையானது காயம் அடைய, அவரால் இராமனின் சீதையை மீட்க போராடிய இடமாகவும் சொல்லப்படுகிறது. கயம்பட்ட பறவையின் உடலில் இரத்தம் வழிய, கடவுளால் கருணைக்காட்டப்பட, ‘லே பக்ஷி' என்ற வார்த்தை அவர் வாயிலிருந்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. அப்படி என்றால், ‘எழுந்து போ பறவை' என உள்ளூர் பாசையில் அர்த்தமாகும்.

மற்றுமோர் தவிர்க்கக்கூடாத விஷயமாக பழங்காலத்து கலைப்பணிகள் கொண்ட நாட்டிய மற்றும் கல்யாண மண்டபங்களும் பெருமையுடன் காணப்படுகிறது. இந்த சுவரோவியங்கள் பிரசித்திப்பெற்ற விஜய நகர பேரரசரின் கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறது.

PC: Srihari Kulkarni

வீரப்பத்திர ஆலயம்:

வீரப்பத்திர ஆலயம்:

லேபக்ஷியானது வீரப்பத்திர ஆலயத்துக்கும் பெயர்பெற்று விளங்க, ஆந்திரபிரதேசத்தின் பிரசித்திப்பெற்ற ஆலயம் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த ஆலயத்தில், உள்ளூர் தெய்வமான வீரப்பத்திர சுவாமி காணப்பட, உள்ளூர்வாசிகளால் வழிபடவும்படுகிறது. கட்டிடக்கலை அழகு மற்றும் பழங்காலத்து நினைவுகளுக்கு பெயர் பெற்ற இவ்விடமானது உள்ளூர் வாசிகளால் பார்க்கப்பட, அவர்களால் பழங்காலத்து சிற்பங்களும் ரசிக்கவும்படுகிறது.

இந்த ஆலயமானது இராமாயணத்துடன் ஒன்றிணைந்து காணப்படுகிறது. இவ்விடமானது இராவணனால் ராமனின் சீதை அபகரிக்கப்பட்டதாகவும் அதன்பின்னர் அவரால் இலங்கைக்கு கொண்டுசெல்லப்பட்டதாகவும் நம்பப்பட, இராவணனிடமிருந்து சீதையை காப்பாற்ற ஜடாயு பறவையானது முயன்றதாகவும் சொல்லப்படுகிறது. இவ்விட கதைகளின்படி, இவ்விடத்தில் சீதையின் பாதச்சுவடுகள் காணப்பட, பல பக்தர்கள் இந்த மாபெரும் காட்சியை காண வந்து செல்வதாகவும் தெரியவருகிறது.

PC: Bhaswati Guha Majumder

நந்தி காளை:

நந்தி காளை:

வீரப்பத்திர ஆலயத்தின் அருகாமையில் காணப்படும் மற்றுமோர் ஈர்ப்பாக லேபக்ஷியின் இந்த நந்தி சிலையானது காணப்படுகிறது. மனதை மயக்கும் இந்த நந்தி காளை, க்ரானைட் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நந்தி சிலையின் வடிவமானது 4.5 மீட்டர் உயரமும், 8.23 மீட்டர் அகலமும் கொண்டிருக்க, இந்தியாவில் காணப்படும் மிகப்பெரிய சிலை இது என்பது குறிப்பிடத்தக்கது. சிறந்த கைவினைஞர்கள் மற்றும் அழகுக்கு அற்புதமான எடுத்துக்காட்டாக இந்த நந்தி சிலையானது காணப்படுவதோடு பார்ப்பவர்களை வியப்பிலும் தள்ளக்கூடும்.

PC: Hari Krishna