Search
  • Follow NativePlanet
Share
» » இந்த சரணாலயத்திற்கு போயிருக்கீங்களா? மிஸ் பண்ணக் கூடாத இடங்களில் ஒன்று

இந்த சரணாலயத்திற்கு போயிருக்கீங்களா? மிஸ் பண்ணக் கூடாத இடங்களில் ஒன்று

கூர்க் பகுதியில் மனதை மயக்கும் இந்த சரணாலயம் நீங்கள் மிஸ் பண்ணக் கூடாத இடங்களில் ஒன்று!!

By Balakarthik Balasubramanian

கர்நாடகாவின் கூர்க் மாவட்டத்தில் உள்ள இந்த புஷ்பகிரி வனவிலங்கு சரணாலயம், மனதை மயக்கும் முக்கியமான சரணாலயங்களுள் ஒன்றாக விளங்கி நம் மனதை இதமாக்குகிறது. இந்த சரணாலயம், ஒரு பக்கத்தில் பிஸ்லே ரிசர்வ் வனம் கொண்டும், மற்றுமொரு பக்கத்தில் குக்கே துணைவுடனும் இணைக்கப்பட்டுள்ளது.

நான் கூறியதுபோல் கர்நாடகாவின் கூர்க் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த புஷ்பகிரி வனவிலங்கு சரணாலயம், மிகவும் பிரசித்திபெற்ற சரணாலயங்களுள் ஒன்றாக நம் கண்களை குளிரூட்டுகிறது. ஆம், பறவைகளின் பிறப்பிடம் என்னும் பெருமையுடன் விளங்கும் இந்த சரணாலயத்திற்கு வந்து செல்வோர்கள், அந்த அழகான பறவைகளையும் அவற்றின் வாழ்வாதாரங்களையும் கண்டு மெய் சிலிர்த்து நிற்கிறார்கள் என்று கூறுவதே உசிதமானதொரு (உண்மையானதொரு) வார்த்தையாகும்.
பெங்களூரிலிருந்து 290 கிலோமீட்டர்கள் தொலைவில் காணப்படும் இந்த சரணாலயம், 102 கிலோமீட்டர் பரந்து விரிந்து காணப்படுகிறது. நீங்கள் பறவைகளை கண்டு வானில் மகிழ்ச்சியுடன் மனதை பறக்க விடுபவர்களா? அப்படி என்றால்...இந்த வன விலங்கு சரணாலயம் முன்னால் நீங்கள் சரணடைவது உறுதி என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. 1987 ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் நிறுவப்பட்ட இந்த சரணாலயம், உலக பாரம்பரிய தளங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது.

அதேபோல் இந்த சரணாலயத்தின் ஒரு பக்கத்தில் பிஸ்லே ரிசர்வ் வனமும் மற்றுமொரு பக்கத்தில் குக்கே சுப்பிரமணிய வனமும் தொடர்ச்சிகளாக இணைந்து நம் மனதை இயற்கை அழகால் பின்னி பிணைந்து நம் மனதை காட்சிகளால் வருடுகிறது. இந்த சரணாலயம் அடர்த்தி நீங்கா பசுமை தன்மை கொண்டதாகவும், அரை பசுமையுடனும், சோலா புல்வெளிகளாலும் சூழ்ந்து நம் மனதை நெகிழ்ச்சி அடைய செய்கிறது. மேலும், மேற்கு மலைத்தொடர்ச்சிகளின் பொதுவாக அமைந்து, நம்மை இயற்கை அன்னையின் மடியில் தூங்கவைக்கும் தன்மை கொண்ட இந்த இடம், கடல் மட்டத்திலிருந்து 160 முதல் 1700 மீட்டர் உயரம் வரை மாறுபட்டு நம் மனதை அமைதியை கொண்டு ஆள்கிறது. இந்த சரணாலயத்தின் வரம்பில் காணப்படும் குமரப்பர்வதா, மிகவும் பிரசித்திப் பெற்ற ஒரு பயண ஸ்தலமாக விளங்குகிறது என்பது நம் மனதை உற்சாகமடைய செய்கிறது.

 இந்த சரணாலயத்திற்கு போயிருக்கீங்களா? மிஸ் பண்ணக் கூடாத இடங்களில் ஒன்று

Kalidas Pavithran

பயணத்திற்கு ஏதுவானாதொரு கால நிலைகள்!!

நவம்பர் முதல் மார்ச் வரையிலான காலங்களில், இந்த புஷ்பகிரி பார்ப்பதற்கு ஏதுவாக அமைந்து நம் கண்களுக்கு பரவசமூட்டுகிறது என்று நாம் கூறலாம். இந்த மாதங்களில், இங்கு வந்து செல்லும் விருந்தினரை போன்ற பறவைகள் பலவும் (தற்காலிக இடமாற்ற பறவைகள்), நம் மனதை அதன் சிறகுகளால் வருடுகிறது. அதனால், ஆர்வத்துடன் இந்த மாதங்களை நாம் பயணத்தின் வாயிலாக செலவிட்டு நம் நேரத்தை இனிமை நீங்கா தன்மையுடனும், புதியதோர் பறவைகளின் வருகைகளையும் ரசித்துக்கொண்டு செலவிட்டு மகிழலாம்.

பயணத்திற்கு தேவையான அத்தியவாசிய பொருட்கள் யாவை?

குடைகள், சிற்றுண்டிகள், வாட்டர் பாட்டில்கள், நடப்பதற்கு உகந்த காலணிகள், புகைப்படக்கருவி, தொலைநோக்கிகள் ஆகியவை நாம் பயணத்திற்கு தேவையான அத்தியவாசிய பொருட்களாக அமைந்து நம் பயணத்தின் கடினத் தன்மையை போக்க பெரிதும் உதவுகிறது.
புஷ்பகிரி வன விலங்கு சரணாலயத்திற்கு நாம் செல்வது எப்படி:
ஆகாய மார்க்கமாக செல்வது எப்படி?
135 கிலோமீட்டர் தொலைவில் காணப்படும் மங்களூர் விமான நிலையம் தான், மிக அருகில் அமைந்திருக்கும் ஒரு விமான நிலையமாகும். மேலும், 260 கிலோமீட்டர் தொலைவில் பெங்களூரு விமான நிலையமும் அமைந்திருக்கிறது. இங்கிருந்து நாம் தனியார் கார் சேவையின் மூலமாகவோ இல்லையென்றால் பேருந்தின் மூலமாகவோ பயணப் புள்ளியை விரைவில் நாம் அடையலாம்.

தண்டவாள மார்க்கமாக அடைவது எப்படி?

புஷ்பகிரி வன விலங்கு சரணாலயத்திற்கு மிக அருகில் காணப்படும் ஒரு இரயில் நிலையம், 146 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மைசூர் இரயில் நிலையமாகும்.

சாலை மார்க்கமாக நாம் அடைவது எப்படி?

 இந்த சரணாலயத்திற்கு போயிருக்கீங்களா? மிஸ் பண்ணக் கூடாத இடங்களில் ஒன்று

Kalidas Pavithran

வழித்தடம் 1:

பெங்களூரு - குனிகல் - சன்னாராயபட்னா - ஆர்கல்குட் - குண்டல்லி - புஷ்பகிரி வனவிலங்கு சரணாலயம்.

நெடுஞ்சாலை வழி:

தேசிய நெடுஞ்சாலை 75 மற்றும் மாநில நெடுஞ்சாலை 8 இன் வழியாக
கால அவகாசம்:

இந்த 256 கிலோமீட்டர்களை கடக்க, நமக்கு சுமார் 5 மணி நேரம் தேவைப்படுகிறது.

வழித்தடம் 2:

பெங்களூரு - ராம்நகரா - சன்னாபட்னா - மாண்டியா - சோம்வார்பேட்டை - குண்டல்லி - புஷ்பகிரி வனவிலங்கு சரணாலயம்.
நெடுஞ்சாலை வழி:
தேசிய நெடுஞ்சாலை 275 இன் வழியாக
கால அவகாசம்:
இந்த 275 கிலோமீட்டர்களை கடக்க நமக்கு சுமார் 5 மணி நேரம் 50 நிமிடங்கள் ஆகிறது.

வழித்தடம் 3:

பெங்களூரு - ராம்நகரா - சன்னாபட்னா - சன்னாராயபட்னா - ஹோலிநர்சிபுரா - சனிவரசந்தி - குண்டல்லி - புஷ்பகிரி

கால அவகாசம்:
இந்த 310 கிலோமீட்டர்களை கடக்க நமக்கு சுமார் 6 மணி நேரம் தேவைப்படுகிறது.

 இந்த சரணாலயத்திற்கு போயிருக்கீங்களா? மிஸ் பண்ணக் கூடாத இடங்களில் ஒன்று

UAjith

இந்த மூன்று வழிகளை பொருத்தமட்டில், முதல் வழியே நேரத்தையும், காலத்தையும் நாம் கணக்கிடுகையில் எளிதான ஒன்றாக தெரிகிறது. அதேபோல், மூன்றாம் வழித்தடம் சற்று தூரமானதாக தெரிய, அதனை ஒப்பிடுகையில் இரண்டாம் வழித்தடத்தின் சாலைகள் நல்லதொரு முறையில் அமைந்து நம்மை அன்புடன் வரவேற்கிறது.

எங்களுடைய காலை உணவை தர்சினியில் மனதார நிரப்பிக்கொண்டு, நாங்கள் பெங்களூரிலிருந்து புறப்பட்டோம். அதன்பிறகு ராம்நகராவில் நின்ற நாங்கள், எங்கள் பயணத்தின் முதல் அடியை ராம்தேவரா பேட்டாவின் மூலம் இனிதே தொடங்கினோம். ஒரு நிமிடம் நில்லுங்க...., ஆமாம்ங்க.. மிகவும் பேசப்பட்ட ஹிந்தியில் வெளிவந்த ஷோலே திரைப்படத்தை அதிக சதவிகிதம் பேர் கண்டிருப்போம். இவன் ஏன் சம்பந்தம் இல்லாமல் அந்த திரைப்படத்தின் நினைவை இதழ்களால் இப்பொழுது உதிர்க்கிறான்? என நீங்கள் யோசிக்கலாம். அதையும் நானே கூறிவிடுகிறேனே! ஆம், அந்த திரைப்படத்தில் நாம் கண்ட கப்பர் சிங்கின் இல்லறம், இந்த சிகரத்தில் தான் இருந்தது என்பது நம்முள் பலருக்கும் தெரியாதல்லவா....அதான் ஒரு சின்ன ப்ளாஷ்பேக் உங்களுக்காக தந்தேன்...வாருங்கள் மீண்டும் பயணத்திற்கு செல்லலாம்...

இந்த சிகரத்தின் மேல் அமைந்திருக்கும் ஒரு ஆலயம் நம் பயணத்தை இனிமையுணர்வுடன் கூடிய பக்தியை நமக்கு தந்து, நம்மை அமைதியை நோக்கி இழுத்து சென்று வழிபட வைக்கிறது. மேலும் இங்கிருக்கும் சன்னாபட்னா உலகத்திலிருக்கும் எல்லா மரப்பொம்மைகளை அணிதிரளாக கொண்டு நம் மனதை துள்ளி குதிக்க வைக்கிறது. அதனால் இந்த நகரத்தை, 'பொம்மை நகரம்' என்றும் அன்போடு அழைப்பர்.

மேலும் பெர்சிய கைவினைஞர்களை வரவேற்று அவர்களை ஊக்கத்தில் தள்ளிய திப்பு சுல்தான், அங்குள்ள உள்ளூர்வாசிகளுக்கும் அதனை கற்றுக்கொடுக்க கூறியதாகவும் ஒரு கதை பொம்மை வடிவமைப்பை பற்றின வரலாறாக அனைவராலும் நம்பப்படுகிறது. இந்த பொம்மைகளில் காணப்படும் ஜி.எல் குறீயீடுகள்... இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ஒன்று என்பதனை நாம் தெரிந்துக்கொள்ளும் போது நம் மனம், அந்த கைவினைஞர்களின் அழகினை வருணிக்க வார்த்தையற்று ஊமையாகி நிற்கிறது என்றே கூற வேண்டும். இங்குள்ள ஒரு சில பொம்மைகள், குழந்தைகளை வெகுவாக கவர்வதுடன், உள்ளூர் கைவினைஞர்களின் ஊக்கமாகவும் அமைந்து அவர்களை உற்சாகத்தை நோக்கி புதியதோர் படைப்பிற்கு அவர்களை வரவேற்கிறது.

நாங்கள் நெடுஞ்சாலையில் சென்றபொழுது, பயணத்திற்கு ஒரு முட்டுக்கட்டை போட்டு, உணவகத்திற்கு சென்று மத்தூர் வடாவை பற்றி விசாரித்தோம். என்ன யோசிக்கிறீங்க? அட ஆமாம்ங்க...அது தான் இங்க ரொம்ப ஸ்பெசலாம்...ஓஹோ! அது ஏதோ ஊர் பேருனு நீங்க நெனச்சிங்களா? அது தான் இல்லைங்க...இந்த வடா, மத்தூர் பகுதியில் கிடைக்கும் மிகவும் பிரசித்திப் பெற்ற ஒன்றாம். அப்படி இருக்க, அதனை சுவைக்க நம் மனம் தயங்குமா என்ன? கண்டிப்பாக இல்லை அல்லவா...அடுத்து சர்க்கரை ஆலைக்கு பெயர் பெற்ற மாண்டியா பகுதியில் எங்கள் பயணத்திற்கு அணைக்கட்டி தடுத்து நின்றோம்.

 இந்த சரணாலயத்திற்கு போயிருக்கீங்களா? மிஸ் பண்ணக் கூடாத இடங்களில் ஒன்று

psubhashish

அதன் பிறகு, திப்பு சுல்தானின் கோடை அரண்மனை என்றழைக்கப்படும் 'தரியா தௌலத் பாக்' மிகவும் பிரசித்திப் பெற்ற ஒன்றாக விளங்கும் அரண்மனைக்கு சென்றோம். இந்திய தொல்லியல் சங்கமாக விளங்கும் இந்த இடம், திப்புக்காலத்தின் சிறந்ததோர் இடமாக பேசப்பட்டு வரும் ஒன்றாகும், என்பதனை அங்குள்ள நம்பமுடியாத கலைகளின் வெளிப்பாட்டின் மூலம் நாம் தெரிந்து கொள்கிறோம். இந்த இடத்தின் அழகை ரசித்த என் கண்கள், புகைப்படக்கருவியைக் கொண்டு நினைவை தேக்க ஆசைக்கொள்ள, "ஹலோ! எக்ஸ்கூயூஸ் மீ" என ஒருவர் என்னை தடுத்தார். அதன் பிறகு தான் எனக்கு தெரிந்தது, புகைப்படம் எடுக்க இங்கு அனுமதி இல்லையென்றதொரு உண்மையை......இருப்பினும் என் மனம் ஏக்கம் நீங்காமல் மெல்ல அவ்விடத்தை விட்டு நகர்ந்தது.

கக்கனாசுக்கி மற்றும் பராச்சுக்கி மிகவும் பிரசித்திபெற்ற இங்குள்ள அழகிய நீர்வீழ்ச்சியாகும். அந்த நீர் வீழ்ச்சியிலிருந்து விழுந்த நீரில் தொலைந்த எங்கள் மனதினை தேடிக்கொண்டே நாங்கள் செல்ல, 'அட! இது என்ன அழகிய சரணாலயம்..' என நம்மை வியப்புடன் நோக்க வைக்கிறது கொக்கேரிபெல்லூர் பறவைகள் சரணாலயம். நாம் அனைவரும் புஷ்பகிரியை நோக்கி படை எடுப்போமாயின், அதன் அழகு நம்மை கவரும் முன்பே, இந்த கொக்கேரிபெல்லூர் பறவைகள் சரணாலயம் முன்பு நாம் சரணடைவது உறுதி என்று தான் அதன் அழகை பற்றிய வார்த்தைகளை நாம் கூறவேண்டும்.

அதே நேரத்தில் நாங்கள் புஷ்பகிரி சரணாலயத்தின் உள்ளே நுழையும் முன்பே, அங்கு இடம்பெயர்ந்து வரும் பறவைகளின் அணிவகுப்பை கண்டு ஒரு நிமிடம் பிரமித்து தான் போனோம். சோம்வார்பேட்டையிலிருந்து சிறிய மாற்றுப்பாதையின் மூலம் நாம் செல்ல, மல்லால்லி நீர்வீழ்ச்சியின் அழகில் நம் மனதை பறிகொடுத்து சரணாகதி அடைகிறோம். ஆம், புஷ்பகிரி அடிவாரத்தின் வீதியிலிருந்து நாம் புறப்பட, சோம்வார்ப்பேட்டையிலிருந்து சுமார் 27 கிலோமீட்டர் தொலைவில் காணப்படுகிறது

 இந்த சரணாலயத்திற்கு போயிருக்கீங்களா? மிஸ் பண்ணக் கூடாத இடங்களில் ஒன்று

Prasadhs75

புஷ்பகிரி சரணாலயம்.

நீங்கள் விலங்குகளின் வாழ்க்கையையும், பறவைகளின் வாழ்க்கையையும் ரசிக்கும் ஒருவராயின்... உங்கள் மனதிற்கு விருந்து படைக்க காத்துக்கொண்டிருக்கிறது இந்த புஷ்பகிரி வனவிலங்கு சரணாலயம் என்பதில் எந்த ஒரு ஐயப்பாடும் இல்லை. பல ஏக்கர் பரப்பில் பரந்து விரிந்து காணப்படும் இந்த இடம், அடர்ந்த காடுகளால் சூழ்ந்து நம்மை ஆச்சரியத்திலும் நெகிழ்ச்சியிலும் ஆழ்த்தி மனதை காட்சிகளால் கவர்கிறது. இங்கு காணும் வன விலங்களுள் சில, நம் மனதை வசீகரிப்பதுடன் கண்களை கொள்ளை அழகால் கவர்கிறது. இங்கே காணும் காட்டு பன்றிகளும், இந்தியாவிலேயே பெரிய தோற்றம் கொண்ட அணில்களும், இந்தியாவின் வனத்தில் வாழும் நாய்களும், புள்ளிமான்களும், இந்திய முயல்களும், குட்டி மான்களும், பட்டை கழுத்துள்ள கீரிப்பிள்ளை என இங்குள்ள விலங்குகளின் வாழ்க்கை பட்டியல் நீள, நீள நம் மனமும் காட்சிகளால் இதமானதொரு உணர்வினை அடைகிறது.

'என்ன இவன்... பாதியில் நிறுத்திவிட்டான் பட்டியலை....' என உங்கள் மனதில் எழும் ஏக்கம் எனக்கு புரிகிறது. இதோ தொடர்கிறேன்...ஆம், மேலும் நீண்ட வால் உடைய குரங்குகளும், சிங்கம் வால் குரங்குகளும், பொன்னிற குரங்குகளும் (குல்லாய் குரங்கு) ஆகியவை இந்த சரணாலயத்தில் காணப்படும் உயரிய விலங்குகளாகவும் நம் மனதை அதன் வாழி(ளி)டம் கொண்டு வருடுகிறது. இந்த சரணாலயத்தில் மேலும், ஊர்ந்து செல்லும் விலங்குகளும் நிறையவே காணப்படுகிறது. ஆம், இந்தியாவின் பாறைகளின் இடுக்குகளில் வாழும் மலைப்பாம்புகளும், நாகப்பாம்புகளும், எலி பாம்புகளும், மூங்கில் குழி விரியன் பாம்புகளும், ராஜ நாக பாம்புகளும் இங்கு அதிகளவில் காணப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளும் நம் கண்கள், கொஞ்சம் பயத்துடனே அதிசய பயணத்தை தொடர்கிறது. இந்த சரணாலயம் யாருக்கு பிடிக்கிறதோ இல்லையோ....கண்டிப்பாக பறவைப் பிரியர்களுக்கு கண் கொள்ளா காட்சியாக அமைந்து, மனம் பறந்து வானில் உலாவும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

 இந்த சரணாலயத்திற்கு போயிருக்கீங்களா? மிஸ் பண்ணக் கூடாத இடங்களில் ஒன்று

சில பறவைகளின் வீடாக விளங்கும் இந்த சரணாலயம் எந்நேரமும் அழகிய கூக்குரலுடன் காணப்படுகிறது. ஆசிய சொர்க்க பறவை பிடிப்பான், இந்திய நீல ராபின், டாலர் பறவை, மலபார் சாம்பல் நிற அழகிய பறவை, நீலகிரி பறவை பிடிப்பான், நீலகிரி மரங்கொத்தி புறாக்கள், சம்பல் நிறத்தலையை கொண்ட ஒருவித குருவி, வெள்ளை வயிற்றுப்பகுதியுடனும், நீல நிறத்துடனும் காணும் பறவை பிடிப்பான்கள், இலங்கை தவளைவாய் குருவிகள், பெரிய சுடர் கொண்ட மரங்கொத்தி பறவை, வெள்ளை முகமூடி அணிந்த தோற்றம் கொண்ட பறவை, மலபார் தவளை, தெற்கு மலைகளில் காணப்படும் மைனாப் பறவை, என இன்னும் வண்ணமயமான காட்சிகளை அதன் இறக்கைகளை கொண்டும், வாள்பகுதியை கொண்டும் நம் கண்களை இதமாக்கி இனிமையானதோர் உணர்வினை தந்து மனதினை வருடுகிறது.

இங்குள்ள பறவைகளின் அழகினால் மட்டுமே நம் மனம் கவரும் என நினைத்தால், அதன் வாழிடங்களாலும் நம்மை காட்சியால் கவர்ந்து கொள்ளை அழகை கண் முன் சமர்ப்பிக்கிறது. பறவை மட்டும் தான் இங்கு பொழுதுபோக்கா? என நீங்கள் ஏங்குவது எனக்கு புரிகிறது. கண்டிப்பாக அதுமட்டுமல்ல....இந்த காடுகளின் உள் நுழையும் நாம், எண்ணற்ற இயற்கை காட்சிகளை கொண்டு மனதினை இதமாக்கிவிட, காட்டையே சுற்றி சுற்றி வருகிறோம் என்று தான் கூறவேண்டும். அதுமட்டுமல்லாமல், இங்கு உலாவும் நம்மை... வருடும் தூயகாற்று, அந்த இடத்தை விட்டு செல்ல விடாமல், அங்கேயே சுற்றிதிரிய வைத்து நம் மனதை காட்சிகளால் கட்டிப்போட்டு அசையவிடாமல் தடுத்து... இயற்கை அழகை, எண்ணி வியப்புடன் பார்க்க வைக்கிறது.

Read more about: travel nature
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X