Search
  • Follow NativePlanet
Share
» »‘பிங்க் சிட்டியாக’ மாறிய பெங்களூர் நகரம் - இளஞ்சிவப்பு பூக்கள் நிரம்பிய பெங்களூர் சாலைகள்!

‘பிங்க் சிட்டியாக’ மாறிய பெங்களூர் நகரம் - இளஞ்சிவப்பு பூக்கள் நிரம்பிய பெங்களூர் சாலைகள்!

பெங்களூரில் இந்த ஆண்டுக்கான மாயாஜால நேரம் நெருங்கிவிட்டது! பெங்களூரு என்றாலே முதலில் உங்கள் நினைவுக்கு வருவது என்ன? அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு, பதில் போக்குவரத்து நெரிசல் என்று தான் கூறுகிறார்கள். ஆனால் சாலைகளில் ஹாரன் அடிக்கும் அனைத்து வாகனங்களிலிருந்தும் நம் கவனத்தை சற்று மாற்றி, தெருக்களில் வரிசையாக நிற்கும் செர்ரி பூக்கள் போன்ற பூக்களின் அழகை ரசிக்க வேண்டிய நேரம் இது. பெங்களூரில் உள்ள மரங்களில் எல்லாம் 'பிங்க் நிற' பூக்கள் பூத்து குலுங்குவதை பெங்களூர் மக்கள் பார்த்து மகிழ்ந்து, போட்டோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்!

பிங்க் சிட்டியாக மாறிய பெங்களூரு

பூத்துக் குலுங்கும் இளஞ்சிவப்பு மரங்கள் நிறைந்த சாலை வழியாக வாகனம் ஓட்டுவதை கற்பனை செய்து பாருங்கள். ஜப்பானில் இருப்பது போன்று இளஞ்சிவப்பு பூக்கள் நிறைந்த மரங்கள் நிறைந்த பூங்காவிற்குள் உலா வருவதை கற்பனை செய்து பாருங்கள். ஆம், பெங்களூரு தற்போது அப்படித்தான் இருக்கிறது. பெங்களூரின் தெருக்கள் செர்ரி ப்ளாசம் பூக்களால் நிரம்பியுள்ளன. இணையத்தில் வைரலாகி வரும் இந்த இளஞ்சிவப்பு பூக்களின் சில படங்களை கர்நாடக சுற்றுலாத்துறை சமீபத்தில் பகிர்ந்துள்ளது.

bengaluruturnspink

குளிர்காலத்தில் பிங்க் மலர்களால் மூடப்படும் பெங்களூரு சாலைகள்

செர்ரி பூக்கள் பூத்துக் குலுங்கும் வண்ணம் பெங்களூரு தெருக்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் மாறியுள்ளன. இந்த செர்ரி பூக்கள் Tabibuea Rosea எனப்படும் நியோட்ரோபிகல் மரத்தில் இருந்து வருகின்றன. டிசம்பர் முதல் மார்ச் வரையிலான நேரம் பூக்களின் வளர்ச்சி பருவமாக இருப்பதால், பெங்களூர் நகரம் முழுக்க பிங்க் போர்வை போற்றியது போல இருக்கிறது. பெங்களூர் மக்கள், சாலையோரம் நின்று பல விதமான அழகிய போட்டோக்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

பிரமாண்ட அழகை வழங்கிய குளிர் காலம்

பெங்களூரு சமீபத்திய ஆண்டுகளில் குளிர் காலத்தில் அதிக இளஞ்சிவப்பு அதிசயமாக மாறி வருகிறது. அதே போல இந்த ஆண்டு குளிர்காலமும் ஒரு பிரமாண்டமான அலங்காரத்தை நகரத்திற்கு வழங்கியுள்ளது. செர்ரி மலரைப் போன்ற பூக்களின் இயற்கை அதிசயங்களால் நகரம் மெதுவாக அலங்கரிக்கப்பட்டு அனைவரையும் ஈர்த்து வருகிறது.

bengaluruturnspink1

ஜப்பானை பிரதிபலிக்கும் பெங்களூரு நகரம்

ஜப்பானுக்குப் பயணம் செய்து, சகுராவின் ஒளியைக் காண்பது அடுத்த சில ஆண்டுகளில் ஒரு கனவாகத் தோன்றினால், பெங்களூருவில் அதன் சாரத்தை நாம் உடனடியாக அனுபவிக்க முடியும், ஏனெனில் நகரம் இளஞ்சிவப்பு நிறத்தில் மூழ்கி வருகிறது. இந்த கண்கவர் செர்ரி மலரைப் போன்ற மலர்களின் வருகை பெங்களூரு நகரத்திற்கு புது அழகை கொண்டு வந்துள்ளது.

பிங்க் சிட்டியை காண குவியும் மக்கள்

இளஞ்சிவப்பு காட்சிகளை ரசிக்க கர்நாடக தலைநகரில் உள்ள பிரபலமான இடங்களுக்கு மக்கள் விரைந்து வருகின்றனர். பென்னிகனஹள்ளி ஏரி, கப்பன் பார்க் மற்றும் ஜெயநகர் 4வது பிளாக் ஆகியவை இளஞ்சிவப்பு நிறத்தில் பிரகாசிக்கும் இந்த மலர்களைக் காண பெங்களூரில் உள்ள மிகவும் பிரபலமான இடங்களாகும். Tabibuea Rosea மலர்கள் மற்றும் மக்கள் முன் போஸ் கொடுக்கும் புகைப்படங்கள் மற்றும் கிளிப்புகள் மூலம் சமூக ஊடகங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

More News

    Read more about: bengaluru
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+