Search
  • Follow NativePlanet
Share
» »சிறந்த கடற்கரைச் சுற்றுலாத் தளங்கள் - தமிழகம் Vs கேரளம்!

சிறந்த கடற்கரைச் சுற்றுலாத் தளங்கள் - தமிழகம் Vs கேரளம்!

By Udhaya

தமிழகமும், கேரளமும் கொஞ்சமும் குன்றா இயற்கை வளங்களுடன் ஆண்டாண்டு காலமாக நன்கு வளர்ச்சியடைந்த இந்திய மாநிலங்களாக இருக்கின்றன. தமிழகத்தைப் பொறுத்த வரையில் நல்ல சமூக வளர்ச்சியும், இயற்கை வளர்ச்சியும் இருக்கிறது. அதே நேரத்தில் பொருளாத வகையில், தொழில் வளர்ச்சி மேம்பட்டு காணப்படுகிறது. அதே நேரத்தில் கேரளத்தில் தொழிற்சாலைகள், உற்பத்தி சாலைகள் போன்றவற்றைக்காட்டிலும் இயற்கையையே வளர்ச்சியாக நம்பி உயர்ந்துகொண்டிருக்கிறது. இப்படி ஒப்பிடும்போது சுற்றுலாவையும் நாம் ஒப்பிடலாம். அதிலும் கடற்கரைகளை எல்லைகளாக் கொண்ட நம் இரு மாநிலங்களையும் அவற்றில் சிறந்த கடற்கரைகளையும் நாம் இந்த பதிவில் ஒப்பிடலாம். நீங்க சொல்லுங்க... கடற்கரைகளில் சிறந்தது தமிழகமா, கேரளமா?

தமிழகம் Vs கேரளம்

தமிழகம் Vs கேரளம்

தமிழகம் மற்றும் கேரளத்தின் பல இடங்களை ஒப்பிட்டாலும், கடற்கரைகள் என்பது ஒரு மாநிலத்தின் முக்கிய சுற்றுலா அம்சங்களாக விளங்குகின்றன. அவற்றின் அருமை பெருமைகளைப் பார்த்தால் அவை மிக நீண்ட வரலாறு கொண்டவையாக இருக்கும்.

தமிழகத்தில் கடற்கரைகளில் இருக்கும் 5 முக்கிய தலங்கள்

சென்னை

மகாபலிபுரம்

ராமேஸ்வரம்

திருச்செந்தூர்

கன்னியாகுமரி

கேரளத்தில் கடற்கரைகளில் இருக்கும் 5 முக்கியமான தளங்கள்

திருவனந்தபுரம்

ஆலப்புழா

கொச்சி

கோழிக்கோடு

கண்ணூர்

சென்னை Vs திருவனந்தபுரம்

சென்னை Vs திருவனந்தபுரம்

சென்னை கடற்கரைகள்

சென்னையின் முக்கிய அடையாளம் இந்த மெரினா பீச்

உலகின் மிக நீண்ட இரண்டாவது பெரிய கடற்கரை இது. ஆசியாவின் முதல் கடற்கரை

அண்ணா, எம்ஜியார், ஜெயலலிதா ஆகியோரது நினைவகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், மெரினாவில் பல பொழுதுபோக்கு அம்சங்கள் இருக்கின்றன.

மெரினா பீச் அருகிலேயே, கோவளம் கடற்கரை, பெசன்ட்நகர் கடற்கரை, பழவேற்காடு ஏரி, சாந்தோம், மயிலாப்பூர் ஆகிய சுற்றுலாத் தளங்கள் இருக்கின்றன

திருவனந்தபுரம் கடற்கரைகள்

திருவனந்தபுரம் மாவட்டம் கேரளத்தின் தமிழ்நாட்டு பகுதிகளை ஒட்டியவாறு அமைந்துள்ளது. இவை மிகவும் சிறப்பான சுற்றுலாத் தளங்களாகும். கேரளத்தின் தெற்கு கடற்கரைகள் இங்கிருந்து தொடங்குகின்றன.

திருவனந்தபுரத்தின் முக்கிய கடற்கரைகள் கோவளம், பூவார், அதற்கு அருகில் வர்க்கலா போன்றவையாகும்.

Sathyaprakash01

wiki

மகாபலிபுரம்

மகாபலிபுரம்

கலை ரசிகர்கள் மற்றும் வரலாற்றுப்பிரியர்களை பிரமிக்க வைக்கும் ஏராளமான அம்சங்கள் மாமல்லபுரத்தில் நிறைந்துள்ளன. இங்குள்ள சின்னங்களை மண்டபங்கள், கோயில்கள், ரதக்கோயில்கள் என்று பல வகையாக பிரிக்கலாம். பஞ்ச பாண்டவ ரதங்கள், வராக மண்டபம் மற்றும் கடற்கரை கோயில் ஆகியவை இங்குள்ள குறிப்பிடத்தக்க அம்சங்களாகும்.

மாமல்லபுரத்திலிருந்து 30 கி.மீ தூரத்தில் சோழமண்டல் கலைக்கிராமம் அமைந்துள்ளது. இங்கு ஓவியங்கள், கைவினைப்பொருட்கள் மற்றும் சிற்பங்கள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. கடற்கரையை ஒட்டியே மாமல்லபுரம் கலை நகரம் பல்லவ மன்னர்களால் எழுப்பப்பட்டிருப்பது இதன் மற்றொரு விசேஷ அம்சமாகும்.

வெளிநாட்டுப்பயணிகள் பலர் இந்த கடற்கரையில் காலை முதல் மாலை வரை ஓய்வெடுப்பதையும், நகர் முழுதும் சுற்றித்திரிவதையும் பயணிகள் பார்க்க முடியும். நகரத்திலிருந்து 5 கி.மீ தூரத்தில் ஒரு துர்க்கையம்மன் கோயிலும் அமைந்துள்ளது. இங்கு பல அழகிய சிலைகளை பார்க்கலாம். புலிக்குகை மற்றும் முதலைப்பண்ணை போன்றவை பயணிகள் விரும்பக்கூடிய இதர சிற்றுலாத்தலங்களாக அமைந்துள்ளன.

J'ram DJ

ஆலப்புழா

ஆலப்புழா

எங்கு திரும்பினாலும் இயற்கை எழிலுடனும், இதமான சூழலுடனும் காட்சியளிக்கும் ‘ஆலெப்பி'யில் கால் வைத்தவுடனேயே உங்கள் மனம் லேசாகி, உடலாலும் புத்துணர்வடைவீர்கள் என்றாலும், மனதை மேலும் சுத்திகரிக்க ஆலய தரிசனங்களும் உங்களுக்கு வேண்டுமெனில், தெய்வீகம் தவழும் கோயில்களும் இங்கு அதிகம் உள்ளன. அம்பலப்புழா ஸ்ரீ கிருஷ்ணா கோயில், முல்லக்கல் ராஜேஷ்வரி கோயில், செட்டிகுளங்கரா பகவதி கோயில், மன்னாரசாலா ஸ்ரீ நாகராஜா கோயில் போன்ற பிரசித்தமான கோயில்கள் தவிர்த்து எடத்துவா சர்ச், செயிண்ட் ஆண்ட்ரூஸ் சர்ச், செயிண்ட் செபாஸ்டியன் சர்ச் ஆகிய கிறிஸ்துவ தேவாலயங்களும் இங்கு அமைந்துள்ளன. தென்னிந்தியாவில் கிறிஸ்துவத்தை பரப்புவதற்காக பயணம் மேற்கொண்ட செயிண்ட் தாமஸ் மதகுரு ஆலப்புழாவுக்கும் விஜயம் செய்ததாக கூறப்படுகிறது. புத்த மதமும் கேரளாவில் அக்காலத்தில் பின்பற்றப்பட்டிருக்கிறது. புத்தரின் காலத்திலேயே பௌத்தம் இங்கு அறிமுகமாகிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

Sudheesh S

 ராமேஸ்வரம்

ராமேஸ்வரம்

இராமேஸ்வரத்தின் முக்கியமான பார்வையிடங்களாக அங்கு கட்டப்பட்டுள்ள சிவபெருமான் மற்றும் விஷ்ணுவிற்கான கோவில்களும் மற்றும் இராமேஸ்வரத்தை சுற்றியுள்ள எண்ணற்ற புனித தீர்த்தங்களும் இருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் உலகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் இந்துக்கள் மோட்சம் பெறவும், சாப விமோச்சனம் பெறவும் இராமேஸ்வரத்திற்கு வந்து கொண்டிருக்கின்றனர். இந்த கோவிலுக்கு வந்திருந்து இங்கிருக்கும் தெய்வத்திற்கு மரியாதை செய்வது ஒவ்வொரு இந்துவிற்கும் வாழ்க்கையின் இன்றியமையாத கடமையாக நம்பப்படுகிறது.

இராமேஸ்வரத்தில் 64 புனித தீர்த்தங்கள் அல்லது புனித நீர்நிலைகள் உள்ளன. இவற்றில் முக்கியமானதாக கருதப்படும் 24 தீர்த்தங்களில் குளிப்பது நமது பாவத்தை களைந்து விடும் என்று நம்பப்படுகிறது. மோட்சத்தை அடைவதற்கு முதன்மையான வழியாக கருதப்படுவது பாவங்களை களைவது தான், அதற்கு இங்கிருக்கும் புனித தீர்த்தங்களில் நீராடுவதைத் தவிர வேறு வழிகளும் இல்லை என்று நம்பப்படுகிறது.

உண்மையில், இந்த 24 தீர்த்தங்களிலும் நீராடுவது மூலம் நமது பாவங்களை நேரடியாக நாமே தீர்த்துக் கொள்ளும் வழிமுறையாகும். இராமேஸ்வரத்தில் இந்துக்களுக்கான மதமுக்கியத்துவம் வாய்ந்த பல இடங்கள் உள்ளன. இவற்றில் ஸ்ரீ ராமநாதசுவாமி கோவில், 24 கோவில் தீர்த்தங்கள், கோதண்டராமர் கோவில், ஆதாம் பாலம் அல்லது ராம் சேது மற்றும் நம்பு நாயகி அம்மன் கோவில் ஆகியவை அவற்றில் சிலவாகும்.

wishvam

கொச்சி

கொச்சி

இயற்கை ரசிகர்களின் தேடுதலுக்கும் இங்கு கண்கவர் விருந்துகள் காத்திருக்கின்றன. காட்டுயிர் சரணாலயங்களும், பூங்காக்களும் பலவிதமான தாவரங்கள் மற்றும் உயிரினங்களுடன் கொச்சிக்கு அருகில் அமைந்துள்ளன. அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியின் கண்கொள்ளா அழகை பார்த்து ரசிப்பது முற்றிலும் ஒரு பரவச அனுபவம் என்றே சொல்லலாம்.

அரபிக்கடலை ஒட்டிய உப்பங்கழிப்பகுதியில் ஒரு மாலை நேரத்தை நேசத்துக்குரியவர்களுடன் கழிப்பது நமக்கு புத்துணர்சியூட்டும் அனுபவமாக இருக்கும். இந்த உப்பங்கழி ஆறானது கேரளாவின் மிகப்பெரிய ஏரியான வேம்பநாட் ஏரியின் தொடர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது. மரைன் டிரைவ் எனப்படும் கடற்கரை உல்லாச சாலை அரபிக்கடல் நீரை தொட்டுக்கொண்டிருப்பது போன்று அமைக்கப்பட்டுள்ளது. இது தம்பதியர்களுக்கான ஏகாந்த மாலை நேர உலாவலுக்கு மட்டுமல்லாமல் குடும்ப சகிதம் கடலின் பிரம்மாண்டத்தை ரசிக்கவும் ஏற்ற ஸ்தலமாகும்.

கடற்காற்றும், அன்புக்குரியவர்களின் அருகாமையும் உங்கள் மனதை லேசாக்கி புத்துணர்ச்சியூட்டும் என்பதை நீங்கள் இந்த இடத்திற்கு விஜயம் செய்யும்போது புரிந்துகொள்ளலாம். உங்களுக்கு பசியெடுக்கும்பட்சத்தில் அருகிலேயே உள்ள ‘பே பிரைட் மால்' க்கு சென்று உணவருந்தலாம். இங்குள்ள ‘ஃபிஷ் ஸ்பா' எனும் இடத்தில் மீன்களாலேயே ‘கால் சரும அழகுப்படுத்தல்' செய்யப்படுவது ஒரு சுவாரசியமான அம்சம். நகரத்தின் புராதன வரலாற்றுப்பின்னணி குறித்த அம்சங்களை பார்க்க விரும்பினால் கொச்சி கோட்டைக்கு விஜயம் செய்யலாம். இது மட்டஞ்சேரி தீபகற்ப வளைகுடாப்பகுதியில் உள்ளதால், எங்கும் எழில் நிறைந்த இயற்கைக் காட்சிகளை இந்த கோட்டை ஸ்தலத்திலும், செல்லும் வழியிலும் பார்த்து ரசிக்கலாம்.

www.david baxendale.com

திருச்செந்தூர்

திருச்செந்தூர்

தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டதில், மன்னார் வளைகுடாவில் அமைந்துள்ள ஒரு சிறிய அழகிய ஊர் , திருச்செந்தூர் . இவ்வூரில் உள்ள முருக பெருமான் கோவில் அறுபடை வீடுகளுள் ஒன்றாக விளங்குவதால் இந்த ஊர் முருக பக்தர்களின் மத்தியில் புகழ்பெற்ற புனித ஸ்தலமாக திகழ்ந்து வருகிறது.

திருச்செந்தூரில் முருக பெருமான் கோவில், வள்ளி குகை, தத்தாத்ரேயரின் குகை போன்ற சில அழகிய கோவில்கள் உள்ளன. அவை மட்டுமின்றி, பாஞ்சாலங்குறிச்சி கோட்டை, மேலப்புதுக்குடி, தூத்துகுடியில் உள்ள குதிரைமொழித்தேறி மற்றும் புன்னை நகரில் உள்ள வனத்திருப்பதி போன்ற இடங்களும் கண்டு களிக்கக் கூடியவை.

Aravind Sivaraj

கோழிக்கோடு

கோழிக்கோடு

கால்நடையாகவே ஊர்சுற்றிப்பார்க்க விரும்பும் பயணிகளுக்கு கோழிக்கோடு நகரம் ஒரு சொர்க்கபூமி என்றே சொல்லலாம். இங்குள்ள தேவாலயங்கள், கோயில்கள், தெருக்கள் மற்றும் வரலாற்றுச்சின்னங்கள் போன்றவை தங்கள் ஒப்பற்ற எழில் அம்சங்களின் மூலம் பயணிகளை வசீகரிக்கின்றன.

பேப்பூர் மற்றும் கப்பட் பீச் போன்றவற்றின் இயற்கை எழிலும், கடற்கரை உல்லாசமும் பயணிகளை பெரிதும் கவரும் வகையில் காட்சியளிக்கின்றன. அதிகமான பறவையினங்கள் காணப்படும் ‘கடலுண்டி பறவைகள் சரணாலயம்' பறவை ஆர்வலர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் பிடித்த இடமாகவும் திகழ்கிறது. துஷாகிரி நீர்வீழ்ச்சி மற்றும் பெருவண்ணாமுழி அணை போன்ற ஸ்தலங்கள் குடும்பத்துடன் ஒரு நாள் சிற்றுலா(பிக்னிக்) செல்வதற்கு உகந்த ஸ்தலங்களாக உள்ளன.

கோழிக்கோடு நகரத்தில் மிட்டாய் தெருவு அல்லது எஸ்.எம் ஸ்ட்ரீட் என்று அழைக்கப்படும் சாலை மிகப்பிரசித்தமான ஷாப்பிங் சென்டராக பெயர் பெற்றுள்ளது. பயணிகள் இங்கு தங்களுக்கு விருப்பமான உள்ளூர் ஞாபகார்த்த பொருட்கள் மற்றும் தேவையானவற்றை வாங்கிக்கொள்ளலாம். இவை தவிர திக்கொட்டி லைட் ஹவுஸ், மனச்சிரா ஸ்கொயர், பழசிராஜா மியூசியம், கலிபொயிக்கா, லயன்'ஸ் பார்க், தலி கோயில், கக்கயம், கிருஷ்ண்ட மேனன் மியூசியம் மற்றும் பிளானேட்டேரியம் போன்ற ஏராளமான சுற்றுலா அம்சங்கள் கோழிக்கோடு நகரத்தில் உள்ளன.

दीपक

கன்னியாகுமரி

கன்னியாகுமரி

கலை மற்றும் பண்பாடுகளில் நாட்டம் இல்லாதவர்களுக்கு நிச்சயம் கன்னியாகுமரி உகந்த இடம் அல்ல. ஆயினும் கன்னியாகுமரியிலுள்ள கோயில்களும் கடற்கரைகளும் பல சுற்றுலாப் பயணிகளையும் புனித பயணம் செல்பவர்களையும் கவரும் வண்ணம் உள்ளன. விவேகானந்தர் பாறை, விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை, வட்டகோட்டை, பத்மநாபபுரம் அரண்மனை, வாவத்துறை, உதயகிரி கோட்டை மற்றும் காந்தி அருங்காட்சியகம், ஆகியவைகள் தான் இங்குள்ள மிக முக்கியமான சுற்றுலாத் தலங்கள். இங்குள்ள முக்கிய புண்ணிய ஸ்தலங்களில் கன்னியாகுமரி கோயில், சித்தாறல் மலைக்கோயில் மற்றும் ஜெயின் நினைவுச் சின்னங்கள், நாகராஜ கோயில், சுப்பிரமணிய கோயில், திருநந்திக்கரை குகைக்கோயில் ஆகியவை அடங்கும். குடும்பம் மற்றும் நண்பர்களோடு வரும் சுற்றுலாப் பயணிகள் அதிகம் கவரப்படுவது இங்குள்ள கடற்கரைகளாலே. இதில் சங்குத்துறை, தேங்காப்பட்டினம் மற்றும் சொத்தவிளை கடற்கரைகள் மிகவும் பிரபலம்.

Mehul Antani

கண்ணூர்

கண்ணூர்

நெசவுத்தறிகளுக்கும், புராணக்கதைகளுக்கும் புகழ் பெற்ற இந்த கண்ணூர் நகரமானது ‘தறிகளையும் கதைகளையும் கொண்ட நாடு' எனும் பிரசித்தமான மலையாள வாக்கியத்தின் மூலம் அடையாளப் படுத்தப்படுகிறது. இங்குள்ள நெசவுத்தொழில் பாரம்பரியமும், புராணிகக்கதைகள் மற்றும் கூத்துக்கலை வடிவங்களும் சர்வதேச அளவில் அறியப்படுகின்றன.

தெய்யம் அல்லது தெய்யாட்டம் எனும் நாட்டுப்புற கூத்து வடிவம் இப்பகுதியின் முக்கிய ‘நிகழ்த்து கலை அம்ச'மாக பிரசித்தி பெற்றுள்ளது. மேலும், கண்ணூரில் சுந்தரேஸ்வர் கோயில், கொட்டியூர் சிவன் கோயில், ஊர்பழசிகாவு கோயில், ஸ்ரீ மாவிலைக்காவு கோயில், ஸ்ரீ ராகவபுரம் கோயில், ஸ்ரீ சுப்ரமண்ய ஸ்வாமி கோயில் மற்றும் கிழக்கேகரா ஸ்ரீ கிருஷ்ணா கோயில் போன்ற புகழ் பெற்ற கோயில்கள் அமைந்துள்ளன.

இவை மட்டுமல்லாமல் கண்ணூர் பிரதேசத்தில் நீண்டு பரந்து கிடக்கும் மணற்பாங்கான கடற்கரைகள் பயணிகளுக்கு உல்லாசத்தையும் பொழுதுபோக்கையும் அளிக்கும் முக்கிய இயற்கை எழில் ஸ்தலங்களாக காட்சியளிக்கின்றன. இவற்றில் பய்யம்பலம் பீச், மீன்குண்ணு பீச், கீழுண்ண எழரா பீச் மற்றும் முழுப்பிளாங்காட் பீச் போன்றவை குறிப்பிடத்தக்க கடற்கரைகளாகும்.

Manoj Karingamadathil

Read more about: travel beaches
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X