Search
  • Follow NativePlanet
Share
» »வண்ணமயமான துர்கா பூஜைகளை காண இந்தியாவின் இந்த நகரங்களுக்கு செல்லுங்கள்!

வண்ணமயமான துர்கா பூஜைகளை காண இந்தியாவின் இந்த நகரங்களுக்கு செல்லுங்கள்!

நவராத்திரி திருவிழாவின் மங்களகரமான ஒருங்கிணைந்த பகுதியான துர்கா பூஜையை கண்டு களிக்க கண் கோடி வேண்டும் என்று கூறுவார்கள். ஒன்பது நாள் நடைபெறும் நவராத்திரி திருவிழாவில் துர்க்கையின் ஒன்பது அவதாரங்கள் வழிபடப்படுகின்றன. இந்தியாவின் பல நகரங்களில் துர்கா பூஜை களைகட்டும், வண்ணமயமான நவராத்திரி கொண்டாட்டங்களை காண இந்தியாவின் இந்த நகரங்களுக்கு செல்ல வேண்டும்!

துர்கா பூஜை 2023

இந்த ஆண்டு, துர்கா பூஜை கொண்டாட்டங்கள் அக்டோபர் 14 ஆம் தேதி வரும் மஹாலயத்துடன் தொடங்கும். இதற்கிடையில், ஐந்து நாள் கொண்டாட்டங்கள் சுமார் ஒரு வாரம் கழித்து அக்டோபர் 20 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 24 ஆம் தேதி முடிவடைகிறது.

இந்தியாவின் பல்வேறு இடங்களிலும் களைகட்டும் துர்கா பூஜை

ஏராளமான பண்டிகைகள் மற்றும் மத கொண்டாட்டங்களின் தாயகமாக இருக்கும் இந்திய நாட்டின் மிக முக்கியமான விசேஷங்களில் ஒன்று - நவராத்திரி. துர்கா பூஜை இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டாலும், முக்கியமாக மேற்கு வங்காளம், அசாம், திரிபுரா, ஒடிசா மற்றும் பீகார் மாநிலங்களில் வெகு விமர்சியாக கொண்டாடப்படுகிறது. விழாவையொட்டி பல்வேறு நடனம் மற்றும் நாடக நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. மக்கள் புதிய ஆடைகளை அணிந்து துர்க்கையை வழிபட பந்தல்களுக்குச் செல்கிறார்கள். இந்த நேரத்தில் பந்தல்களில் சுவையான உணவுகளும் கிடைக்கின்றன, அவை பார்வையாளர்களால் பெரிதும் ரசிக்கப்படுகின்றன.

நவராத்திரி கொண்டாட்டங்களை காண நீங்கள் செல்ல வேண்டிய நகரங்கள்

kolkata1

கொல்கத்தா

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இன்று துர்கா பூஜை கொண்டாடப்படுவதற்கு பிள்ளையார் சுழி போடப்பட்ட இடம் கொல்கத்தா தான். துர்கா தேவி திருமணமான பெண்ணாக ஒன்பது நாட்களுக்குத் தன் தந்தை வீட்டிற்கு வருகிறாள் என்பது உள்ளூர் மக்களிடையே ஒரு பொதுவான நம்பிக்கை. பல பந்தல்கள் மூங்கில் குச்சிகளால் உருவாக்கப்பட்டு அழகான அலங்காரங்களால் அலங்கரிக்கப்படும். பந்தல்களில், துர்கா தேவியின் மிகப்பெரிய சிலையை நீங்கள் காணலாம். மக்கள் அனைவரும் புத்தாடை அணிந்து, வீடுகளை அலங்கரித்து, இனிப்புகள் பரிமாறி மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடுகின்றனர்.

மும்பை

மும்பை நகரில் துர்கா பூஜை அதன் உண்மையான சாராம்சத்தில் வேடிக்கை நிறைந்த விதத்தில் கொண்டாடப்படுகிறது. முதல் நாள் கங்கைக் கடலில் துர்க்கை, விநாயகர், கார்த்திகேயர் சிலைகள் கரைக்கப்படுவதைக் காணலாம். சிலைகள் கங்கையின் புனித நீரால் கழுவப்பட்டு ஒவ்வொரு மாலையும் வீட்டிற்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. பந்தல்கள் அழகாக அலங்கரிக்கப்பட்டுள்ளன, அங்கு பிரபலங்கள் துர்கா தேவியின் தெய்வத்தை தரிசிப்பதையும், சிலைகளுக்கு ஆடம்பரமான உணவுகளை வழங்குவதையும் நீங்கள் காணலாம்.

delhi

டெல்லி

எந்த அளவிற்கு டெல்லி ராம்லீலா கொண்டாட்டங்களுக்கு பிரபலமானதோ அதே போல நவராத்திரி திருவிழாவிற்கும் மிகவும் பிரபலம். துர்கா பூஜை விழாவை ராமரின் வெற்றியாக டெல்லி கொண்டாடுகிறது. ராமரின் வெற்றி குறித்து பல்வேறு நாடகங்கள் நடத்தப்படுகின்றன. கொண்டாட்டத்தின் போது சிறு குழந்தைகள் மதப் பாத்திரங்களாக உடையணிந்து வருகின்றனர். துர்கா தேவியின் சிலைகளை மக்கள் வணங்கும் கண்கவர் பூஜை பந்தல்களை நீங்கள் இங்கே காணலாம்.

ahemadabad1

அகமதாபாத்

ராவணனை அழித்த பகவான் ராமரின் நினைவாக இந்த விழா கொண்டாடப்படுகிறது. இரவு முழுவதும் பட்டாசு வெடிப்பதைக் காணலாம். ராமரின் வாழ்க்கை, சீதையின் போராட்டம் மற்றும் ராமரின் வெற்றியை நினைவுகூரும் வகையில் நாடகங்கள், நடனங்கள் மற்றும் பாடல்கள் நடத்தப்படும் பல மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. திருவிழா முழுவதும் பாரம்பரிய நடனமான டாண்டியா மற்றும் கர்பா நடனமாடப்படுகிறது. பல்வேறு கலாச்சாரங்களைச் சேர்ந்த மக்கள் இவ்விழாவில் பங்கேற்கின்றனர்.

hyderbad2

ஹைதராபாத்

சைபராபாத் பெங்காலி சங்கம் 2007 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் துர்கா பூஜையைத் தொடங்கியது. அந்த ஆண்டில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஹைதராபாத் மக்கள் துர்கா பூஜையை மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார்கள். நகரம் பந்தல்கள் மற்றும் பல உணவு விழாக்கள் மற்றும் கண்காட்சிகளால் அழகாக அலங்கரிக்கப்படும். பல்வேறு இடங்களில் துர்க்கை ஊர்வலம் கோலாகரமாக நடைபெறுகிறது.

More News

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+