Search
  • Follow NativePlanet
Share
» »எந்தெந்த மாதங்களில் எந்த இடங்களுக்கு சுற்றுலா செல்வது சிறந்தது என்பது பற்றி தெரியுமா உங்களுக்கு ?

எந்தெந்த மாதங்களில் எந்த இடங்களுக்கு சுற்றுலா செல்வது சிறந்தது என்பது பற்றி தெரியுமா உங்களுக்கு ?

எந்த ஒரு இடத்திற்கும் சுற்றுலா செல்வதற்கு முன்பாக முறையாக திட்டமிடவேண்டியது மிகவும் அவசியமாகும். முறையான திட்டமிடலோ, முன்னேற்பாடுகளோ இல்லாமல் முன்பின் தெரியாத இடத்திற்கு சுற்றுலா சென்றால் அங்கே சுற்றிப்பார்க்க இருக்கும் இடங்கள் என்னென்ன?, தங்குவதற்கு சிறந்த ஹோட்டல்கள் என்னென்ன? என்பது போன்ற விவரங்கள் தெரியாமல் அவதிப்பட வேண்டியிருக்கும்.

அந்தக்குறையை போக்குவதற்காக உருவாக்கப்பட்டது தான் தமிழில் இருக்கும் ஒரே பயண இணையதளமான 'தமிழ் நேடிவ் பிளானட்' ஆகும். இங்கே இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு சுற்றுலாத்தலத்தை பற்றிய மிக விரிவான தகவல்கள் இருக்கின்றன. சுற்றுலா செல்ல விரும்புகிறவர்களுக்கு இந்த இணையதளம் ஒரு வரப்பிராசாதம் ஆகும்.

சரி, வாருங்கள் இந்தியாவில் ஜனவரி முதல் மே வரையிலான மாதங்களில் எந்த இடங்களுக்கு சுற்றுலா செல்வது சிறந்தது என்பது பற்றிய தகவல்களை தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

ஜனவரி - கோகர்ணா :

ஜனவரி - கோகர்ணா :

இந்தியாவில் மிக வேகமாக பிரபலமாகி வரும் அருமையான கடற்கரை சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக திகழ்கிறது கோகர்ணா.

இந்தியாவில் கடற்கரைகளுக்கு புகழ்பெற்ற கோவாவிற்கு 143கி.மீ முன்பாகவே கர்நாடக மாநிலத்தில் உத்தர கன்னடா மாவட்டத்தில் அரபிக்கடல் ஓரத்தில் அமைந்திருக்கும் கோகர்ணா சில காலம் முன்பு வரை புகழ்பெற்ற ஆன்மீக ஸ்தலமாக மட்டுமே இருந்து வந்திருக்கிறது.

ஜனவரி - கோகர்ணா :

ஜனவரி - கோகர்ணா :

இந்தியாவில் இருக்கும் மிகவும் பிரசித்தி பெற்ற சிவன் கோயில்களில் ஒன்றான மகாபலேஷ்வர் கோயில் இந்த நகரின் மிகமுக்கிய சுற்றுலா ஈர்ப்பாக இருக்கிறது. இக்கோயிலில் சிவபெருமான் 'ஆத்மலிங்க' ரூபமாக காட்சி தருகிறார்.

மகாபலேஷ்வர் கோயில் தவிர இங்கே மஹா கணபதி கோயில, உமா மகேஸ்வர் கோயில், பத்ரகாளி கோயில், வெங்கட ரமணர் கோயில், தாமரை கௌரி கோயில் ஆகியனவும் பிரபலமான கோயில்களாக திகழ்கின்றன.

ஜனவரி - கோகர்ணா :

ஜனவரி - கோகர்ணா :

கடற்கரைகள் :

கோவாவில் டிசம்பர், ஜனவரி மாதங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட நிறைய பேர் வருவார்கள் என்பதால் அங்கிருக்கும் கடற்கரைகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும். அதுமட்டுமல்லாமல் அங்கிருக்கும் ஹோட்டல்களில் அறைகள் கிடைப்பதும் மிகக்கடினமாக இருக்கும்.

எனவே அதற்கு மாற்றாக மக்கள் கூட்டம் அதிகம் இல்லாத, அழகான கடற்கரையாக இருக்கும் கோகர்ணா சுற்றுலாப் பயணிகளிடையே சமீப காலமாக மிகவும் பிரபலமாகி வருகிறது.

கோகர்ணாவில் இந்தியன் பீச், மெயின் பீச், ஓம் பீச், பிறை நிலா கடற்கரை, நிர்வாணா கடற்கரை ஆகியன முக்கிய கடற்கரைகளாக இருக்கின்றன.

ஜனவரி - கோகர்ணா :

ஜனவரி - கோகர்ணா :

எப்படி அடைவது ?

கோகர்ணா கர்நாடக மாநில தலைநகரமான பெங்களுருவில் இருந்து 583கி.மீ தொலைவிலும், மங்களூரில் இருந்து 238கி.மீ தொலைவிலும் அமைந்திருக்கிறது. இந்த இரண்டு நகரங்களில் இருந்து ஏராளமான அரசு மற்றும் தனியார் சொகுசு பேருந்துகள் கோகர்ணாவை நோக்கி இயக்கப்படுகின்றன.

மங்களூரில் இருந்து மும்பை வரை இயக்கப்படும் கொங்கன் ரயிலானது கோகர்ணாவில் நின்று செல்கிறது.


கோகர்ணா பற்றிய மேலும் பல விரிவான தகவல்களை தமிழ் பயண வழிகாட்டியில் தெரிந்துகொள்ளுங்கள்.

பிப்ரவரி - ஹம்பி :

பிப்ரவரி - ஹம்பி :

ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்பு உலகின் மிகவும் செல்வச்செழிப்பு மிகுந்த நகரமாக திகழ்ந்து இன்று கைவிடப்பட்ட நிலையில் சிதைந்து போய் காட்சியளிக்கிறது கர்நாடகாவில் இருக்கும் ஹம்பி நகரம்.

இந்தியாவில் தோன்றிய மிகப்பெரிய ஹிந்து சாம்ராஜ்யமான விஜயநகர பேரரசின் தலைநகரான விஜயநகரினுள் இருக்கும் ஹம்பியை வரலாற்று இடங்களுக்கு செல்வதில் ஆர்வமுடைய அனைவரும் கட்டாயம் சென்று பார்க்க வேண்டும்.

பிப்ரவரி - ஹம்பி :

பிப்ரவரி - ஹம்பி :

1500களில் இந்த ஹம்பி நகரில் மட்டும் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இருந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். ஐநூறு ஆண்டுகளுக்கு முந்தைய மக்கள் தொகை அடிப்படையில் பார்க்கும்போது ஹம்பி உலகின் இரண்டாவது மிகப்பெரிய நகரமாக திகழ்ந்திருக்கிறது.

வரலாற்று பொக்கிஷங்கள் நிறைந்திருக்கும் ஹம்பி நகரின் முக்கிய சுற்றுலா ஈர்ப்பாக இருப்பது விட்டலா கோயில் வளாகமாகும். இங்கே கற்களால் செய்யப்பட்ட தேர் ஒன்றும், தட்டினால் இசைஎழுப்பும் இசைத்தூண்களும் இருக்கின்றன.

பிப்ரவரி - ஹம்பி :

பிப்ரவரி - ஹம்பி :

அதே போல இங்கே இருக்கும் பதாவி லிங்கம், சந்திர மௌலீஸ்வரர் கோயில், மல்யவந்த ரகுநாத சுவாமி கோயில், கிருஷ்ணா கோயில் வளாகம், விருபாக்ஷா கோயில் ஆகியனவும் நாம் நிச்சயம் சென்று பார்க்க வேண்டிய இடங்களாகும்.

ஹம்பி நகருக்கு சென்றால் நாமே ஏதோ காலச்சக்கரத்தினுள் புகுந்து வரலாற்று காலத்துக்கு சென்றுவிட்டது போன்ற உணர்வு ஏற்ப்படும்.

பிப்ரவரி - ஹம்பி :

பிப்ரவரி - ஹம்பி :

கால ஓட்டத்தில் அழிந்து போன இந்திய நாகரீகத்தின் உச்சம் தொட்ட இந்த ஹம்பி நகரை பற்றிய சுவாரஸ்யம் மிக்க தகவல்களையும், எப்படி சென்றடைவது?, அருகில் இருக்கும் தங்கும் விடுதிகள் ஆகியவை பற்றிய விவரங்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

மார்ச் - மூணார் :

மார்ச் - மூணார் :

குளிர் காலம் முடிந்து இதமான வெப்பநிலை நிலவும் மார்ச் மாதத்தில் செல்ல சிறந்த சுற்றுலாத்தலம் என்றால் அது 'காதலர்களின் சொர்க்கம்' என்று அழைக்கப்படும் மூணார் தான்.

இயற்கை பேரழகு ததும்பும் இந்த மலை வாசஸ்தலத்தை முழுமையாக சுற்றிப்பார்க்க குறைந்தது மூன்று நாட்களேனும் ஆகும். தேனிலவு கொண்டாட சிறந்த இடமாக திகழும் மூணாறில் எங்கு காணினும் பசுமை போர்வை போர்த்தியது போன்றிருக்கிறது.

மார்ச் - மூணார் :

மார்ச் - மூணார் :

கேரள மாநிலத்தில் இடுக்கி மாவட்டத்தில் இருக்கும் மூணாரில் சுற்றிப்பார்க்க ஏராளமான இடங்கள் இருக்கின்றன. இங்குள்ள மேட்டுப்பட்டி அணை, படகு இல்லம், ஆனைமுடி சிகரம், இரவிக்குளம் தேசிய பூங்கா, யானை சவாரி செய்யுமிடம், டாப் ஸ்டேஷன் ஆகியன நாம் கட்டாயம் செல்லவேண்டிய இடங்களாகும்.

மார்ச் - மூணார் :

மார்ச் - மூணார் :

இயற்கை எழில் கொஞ்சும் மூணாரை எப்படி சென்றடைவது?, அங்கிருக்கும் தங்கும் விடுதிகள் என்னென்ன? என்பது போன்ற விவரங்களை தமிழ் பயண வழிகாட்டியில் தெரிந்துகொள்ளுங்கள்.

ஏப்ரல் - குல்மார்க் :

ஏப்ரல் - குல்மார்க் :

குல்மார்க் காஷ்மீர் மாநிலத்திலுள்ள பாரமுல்லா மாவட்டத்தில் அமைந்திருக்கிறது. பூக்களின் பூமி என்று பொருள்படும் இந்த குல்மார்க் நகரமானது ஒரு நல்ல சுற்றுலாத்தலத்துக்கு என்னென்ன அம்சங்கள் இருக்கவேண்டுமோ அவை அனைத்தையும் கொண்டிருகிறது.

Basharat Alam Shah

ஏப்ரல் - குல்மார்க் :

ஏப்ரல் - குல்மார்க் :

கடல்மட்டத்தில் இருந்து 8,000 அடி உயரத்தில் இருப்பதால் குளிர் காலங்களில் இங்கே மிகவும் கடுமையான பனிப்பொழிவு நீடிக்கிறது. இதனை கருத்தில் கொண்டே ஆங்கிலேயே அரசால் 1927ஆம் ஆண்டு 'ஸ்கியிங்' எனப்படும் பனிச்சறுக்கு விளையாட்டு ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.

அன்றிலிருந்து இன்று வரை இந்தியாவின் குளிர்கால சாகச விளையாட்டுகளின் தலைநகரமாக குல்மார்க் திகழ்கிறது.

batschmidt

ஏப்ரல் - குல்மார்க் :

ஏப்ரல் - குல்மார்க் :

சாகச விரும்பிகள் எப்படி குளிர் காலத்தில் குல்மார்கிற்கு செல்வது சிறந்ததோ அதேபோல இயற்கை விரும்பிகள் கோடை காலமான ஏப்ரல் மாதத்தில் குல்மார்க்செல்வது நல்லது.

கோடை காலத்தில் குல்மார்க் பள்ளத்தாக்கு முழுவதும் பூக்கள் பூத்துக்குலுங்கும். அதிகம் மாசுபடாத இயற்கை அழகை கண்டு ரசிக்கவும், மலையேற்றம் செய்யவும் சிறந்த இடமாகும் இந்த குல்மார்க்.

sandeepachetan.com travel

ஏப்ரல் - குல்மார்க் :

ஏப்ரல் - குல்மார்க் :

குல்மார்கில் இருக்கும் கோண்டோலா தான் உலகில் கேபிள் கார் போக்குவரத்து நடைபெறும் மிக உயரமான இடமாகும். கோண்டாலாவில் இருந்து நான்கு கி.மீ தொலைவில் இருக்கும் அபர்வத் மலை என்ற இடம் வரை கடல்மட்டத்தில் இருந்து 4,200 உயரத்தில் கேபிள் கார் போக்குவரத்து நடக்கிறது.

Vineet Radhakrishnan

ஏப்ரல் - குல்மார்க் :

ஏப்ரல் - குல்மார்க் :

குல்மார்கில் இருக்கும் சிவன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இது முன்னொரு காலத்தில் காஷ்மீரை ஆண்ட டோக்ரா மன்னர்களின் ராஜ கோயிலாக திகழ்ந்திருக்கிறது.

draskd

மே - வயநாடு :

மே - வயநாடு :

தகிக்கும் கோடை வெய்யிலில் இருந்து தப்பிக்க ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் குழந்தைகளுடன் சுற்றுலா செல்வதை வழக்கமாக கொண்டிருக்கிறீர்களா நீங்கள்?. அப்படியென்றால் கேரளாவில் இருக்கும் அற்புதமான கோடை வாசஸ்தலமான வயநாடுக்கு ஒருமுறையேனும் கட்டாயம் செல்ல வேண்டும்.

மே - வயநாடு :

மே - வயநாடு :

பசுமை நிறைந்திருக்கும் வயநாட்டின் முக்கிய சுற்றுலாத்தலமாக இருப்பது செம்பரா சிகரமாகும். கடல் மட்டத்தில் இருந்து 2,100 அடி உயரத்தில் இருக்கும் இந்த சிகரத்தில் இதமான தட்பவெட்பம் நிலவும் மே மாதத்தில் டிரெக்கிங் பயணம் போவது சுவாரஸ்யம் நிறைந்த ஒரு அனுபவமாக இருக்கும்.

மே - வயநாடு :

மே - வயநாடு :

செம்பரா சிகரத்தில் காதல் இதயத்தின் வடிவில் இயற்கையாகவே ஏரி ஒன்று இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

மே - வயநாடு :

மே - வயநாடு :

மேலும் வயநாட்டில் மூன்று லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் வாழ்ந்ததாக சொல்லப்படும் எடக்கல் குகைகள் இருக்கின்றன. வயநாட்டின் தலைநகராக சொல்லப்படும் கல்பெட்டாவில் இருந்து 25கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் இந்த குகைகளினுள் அக்கால மனிதர்களால் வரையப்பட்ட சுவரோவியங்களை நாம் காண முடியும்.

மே - வயநாடு :

மே - வயநாடு :

வயநாட்டை பற்றிய மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களை தமிழ் பயண வழிகாட்டியில் தெரிந்துகொள்ளுங்கள்.

வயநாட்டில் இருக்கும் சொச்சிப்பாறை அருவி.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X