Search
  • Follow NativePlanet
Share
» »தலைகுனிந்து நிற்கும் பொள்ளாச்சியோட அதிர்ச்சியளிக்கும் உண்மை முகம்

தலைகுனிந்து நிற்கும் பொள்ளாச்சியோட அதிர்ச்சியளிக்கும் உண்மை முகம்

தலைகுனிந்து நிற்கும் பொள்ளாச்சியோட அதிர்ச்சியளிக்கும் உண்மை முகம்

ஏழு வருடங்களாக யாருக்கும் தெரியாமல் நடந்து வரும் அவலம். ஒரு வீடியோவால் வெளியில் தெரிந்த கொடூரம். பெரும்புள்ளிகள் சம்பந்தப்பட்டிருப்பதால் நடவடிக்கை எந்த அளவுக்கு உறுதியானதாக இருக்கும் இப்டி அப்டின்னு நம்மல சுத்தியும் பொள்ளாச்சி பத்தின நெகட்டிவ் இமேஜ்தான். யாரா ஒரு இருபது பேரு பண்ண தப்பு இப்ப பொள்ளாச்சினாலே அய்யோ பொள்ளாச்சியானு பதறியடிச்சி ஓடுற நிலைமைக்கு ஆய்டிச்சி பொள்ளாச்சி. ஆனா நாமெல்லாம் நினைக்குற மாதிரி இல்லிங்க பொள்ளாச்சியும் அங்க இருக்குற மக்களும். பொள்ளாச்சியின் உண்மை முகத்தை தெரிஞ்சிக்கணும்னா கொஞ்சம் உள்ளாற புகுந்து கவனிக்கனும்.. இந்த புகைப்படங்கள பாருங்க...

All Photos are taken from

Pollachi

மலையின்மேல் காதலில் வீழ்ந்த மேகங்கள்

மலையின்மேல் காதலில் வீழ்ந்த மேகங்கள்


இயற்கையின் ஒட்டுமொத்த பாசத்தையும் கொட்டியிருக்கும் பொள்ளாச்சியின் மலைகளும் ஏரியும் வானத்தின் பிரதிபலிப்பில் மேகங்களும் காட்சியளிக்கும் அற்புதமான புகைப்படம்.

மாலையில் ஒரு வேளையில்

மாலையில் ஒரு வேளையில்

ஒரு மாலை இள வெயில் நேரத்தில் பொள்ளாச்சியின் அழகிய தோற்றம்

வரவேற்பறையில்

வரவேற்பறையில்

பொள்ளாச்சிக்கு செல்பவர்களை நீண்ட நெடு வழியில் வரவேற்கும் தென்னை மரங்களும், அழகிய புற்பூண்டுச் செடிகளும்

பச்சை நீலம் சிவப்பு

பச்சை நீலம் சிவப்பு

உங்களை மகிழ்விக்கும் நிறங்களான பச்சை நிறத்தில் செடிகளும், மரங்களும், சிவப்பு நிற மலர்களும், நீல மலைகளின் பின்னணியில் மேகங்களாய் அலைபாய்கின்றன.

அழகை படம்பிடிக்கிறார்கள்

அழகை படம்பிடிக்கிறார்கள்

பொள்ளாச்சியின் அழகு நிறைந்த இயற்கை வனப்பை படம்பிடித்துக் கொண்டிருக்கிறார்கள் இயற்கை ஆர்வலர்கள்

தென்னங்குழிகள்

தென்னங்குழிகள்

இடப்பட்டு நடப்பட்ட தென்னைகளில் சற்று முன் பெய்த மழை நீர் தேங்கி தென்னையையும் நம்மையும் ஒரு சேர குளிர்விக்கிறது.

பாகனும் யானையும்

பாகனும் யானையும்

மங்கிய ஒளியில் மழைச் சாரலில் அழகிய யானை மீது அமர்ந்திருக்கும் பாகன்

அரசு மரங்கள்

அரசு மரங்கள்


அரசுடைமையாக்கப்பட்ட மரங்கள் நெடுஞ் சாலைகள் ஓரமாக அழகிய கிளைகளை பரப்பி நிற்கின்றன..

மழை பொழிந்திடும் நேரம்

மழை பொழிந்திடும் நேரம்


சாலை ஓரத்தில் பச்சை பசேலென்ற புல்வெளிகளின் அழகில் மெய் மறந்து ரசித்திட மழையும் சேர்ந்திடும் அந்த கண நேரம்.

 இயற்கை எழிலின் சொர்க்கம்

இயற்கை எழிலின் சொர்க்கம்

பொள்ளாச்சி, தென்னிந்திய மாநிலமான தமிழகத்தின் கோயம்புத்தூரில் அமைந்துள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தின் தென் பகுதியில் அமைந்துள்ள இவ்வூர், அம்மாவட்டத்தின் இரண்டாவது பெரிய நகரமாகும்.

பொள்ளாச்சி, மேற்குத் தொடர்ச்சி மலைக்கு அருகில் அமைந்துள்ளதால், இங்கு வருடந்தோறும் வானிலை ரம்மியமாக இருப்பதுடன், மனம் விட்டு ரசிக்கத்தக்க இயற்கை அழகுடனும் திகழ்கிறது.

திரைப்படங்களின் நகரம்

திரைப்படங்களின் நகரம்


இயற்கை எழில் கொஞ்சும் இந்த நகரம், சினிமாத்துறையினர் மிகவும் விரும்பும் ஒரு இடமாக உள்ளது. கடந்த சில வருடங்களில் மட்டும் சுமார் 1500 திரைப்படங்கள் இங்கே எடுக்கப்பட்டுள்ளன.

பொள்ளாச்சியின் இயல்பு

பொள்ளாச்சியின் இயல்பு


சுப்ரமண்யர் திருக்கோயில், பொள்ளாச்சியின் மிகப் பிரபலமான ஒரு சுற்றுலாத் தலமாகும். பொள்ளாச்சியின் வெல்லச் சந்தை தான் ஆசியாவிலேயே மிகப் பெரிய வெல்லச் சந்தையாகும். இங்கு உள்ள காய்கறிச் சந்தை, கேரளாவின் மத்தியப் பகுதிகளுக்கு, காய்கறி விநியோகம் செய்யும் பெரிய சந்தைகளுள் ஒன்றாக விளங்குகிறது. அதே போல், தென்னிந்தியாவின் மிகப்பெரும் இரும்பு மற்றும் கால்நடைச் சந்தைகள் இங்கு அமையப்பெற்றுள்ளன.

அணைக்கட்டுகள்

அணைக்கட்டுகள்

சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் பல அணைக்கட்டுகள் இங்கு உள்ளன. நீரார் அணை, ஆழியார் அணை, மீன்கார அணை, சோழியார் அணை, பெருவரிப்பள்ளம் அணை ஆகியன இங்குள்ள சில பிரபலமான அணைக்கட்டுகளாகும்.

ஆன்மீக சுற்றுலா

ஆன்மீக சுற்றுலா

ராமலிங்க சௌடேஷ்வரி அம்மன் கோயில், சுப்ரமண்யஸ்வாமி கோயில், மாசாணி அம்மன் திருக்கோயில், அழகுநாச்சி அம்மன் கோயில், திருமூர்த்தி கோயில், சூலக்கல் மாரியம்மன் திருக்கோயில், ஸ்ரீ வேலாயுதஸ்வாமி திருக்கோயில், ஈச்சநாரி விநாயகர் திருக்கோயில், அம்பரம்பாளையம் தர்க்கா மற்றும் அருள்மிகு பிரசாந்த விநாயகர் கோயில், போன்ற பல கோயில்களைக் காணலாம்.

அருகாமை சுற்றுலாத் தளங்கள்

அருகாமை சுற்றுலாத் தளங்கள்


பொள்ளாச்சி நகரம் ஆழியார் சித்தாஷ்ரமம், ஆனைமலை வனவிலங்கு சரணாலையம், டாப் ஸ்லிப், வால்பாறை, மாசாணியம்மன் கோயில், அமராவதி அணை மற்றும் முதலை பூங்கா ஆகிய பல இடங்களுக்கு அருகாமையில் அமைந்துள்ளது.

அழகிய பொள்ளாச்சி

அழகிய பொள்ளாச்சி


பொள்ளாச்சியின் அழகிய புகைப்படங்கள்

அழகிய பொள்ளாச்சி

அழகிய பொள்ளாச்சி


பொள்ளாச்சியின் அழகிய புகைப்படங்கள்

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+