» »பெங்களூர்க்கு தெற்கில் இருக்கிற உடுப்பில என்னதான் ஸ்பெஷல் இருக்கு? வாங்க பாத்துடலாம்!!

பெங்களூர்க்கு தெற்கில் இருக்கிற உடுப்பில என்னதான் ஸ்பெஷல் இருக்கு? வாங்க பாத்துடலாம்!!

By: Bala Karthik

கர்நாடகாவின் பெயர்பெற்ற ஓர் இடம் தான் உடுப்பி. இந்த கடற்கரை நகரமானது அழகிய கலையுணர்வுடன் கூடிய ஆலயங்களை கொண்டிருக்க, ஆராய்ந்திடாத கடற்கரைகளும், பசுமையான காடுகளெனவும் நம் மனதை வெகுவாக கவரக்கூடும். சுவையூட்டும் உணவுகளுக்கு பிரத்திப்பெற்ற உடுப்பி, இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் ஹோட்டல்களை கொண்டிருக்கிறது.

உடுப்பியானது ஒருப்பக்கம் அரபிக்கடலாலும், மற்றுமோர் பக்கம் மேற்கு தொடர்ச்சியாலும் சூழ்ந்திருக்கிறது. இந்துக்களுக்கான முக்கிய புனித நகரமாகவும் விளங்குகிறது. ஸ்ரீ கிருஷ்ணா ஆலயம் மற்றும் அஷ்தமத்தாவிற்கும் பெயர் பெற்று உடுப்பி காணப்படுகிறது. இது இந்தியாவின் பழமையான மதக்கல்வி கூட்டங்களுள் ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது.

உடுப்பி என்னும் பெயரானது துளு பெயரான - 'ஒடிப்பு' என்பதில் கிடைப்பதாக நம்பப்படுகிறது. தக்ஷினா கன்னடா மாவட்டத்தின் ஒரு அங்கமாகவும் உடுப்பி காணப்படுகிறது. 1997ஆம் ஆண்டில், உடுப்பி, குண்டாப்பூர், கர்காலா ஆகியவை தக்ஷினா கன்னடா மாவட்டத்திலிருந்து பிரிந்து உடுப்பி என ஆனதாகவும் தெரியவருகிறது.

உடுப்பியை காண சிறந்த நேரங்கள்:

உடுப்பியை காண சிறந்த நேரங்கள்:

கோடைக்காலத்தில் மிகவும் சூடாக மார்ச் முதல் மே வரையிலான மாதங்களில் காணப்படுகிறது. இதனால் அதிகளவிலான ஈரப்பதமானது சேர்ந்துவிடுகிறது. பருவமழைக்காலமான ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான மாதங்கள், மழைப்பொழிவானது 4000 மீட்டரை கடந்து காணப்படக்கூடும். இதனால் பெருமளவிலான காற்று சேர்கிறது. இதனால் இணக்கமற்ற ஒரு சூழ்நிலையானது உங்கள் பயணத்தில் உருவாகக்கூடும்.

குளிர்காலமான டிசம்பர் முதல் பிப்ரவரி வரையிலான மாதங்களில் குறைவான வெப்ப நிலையே காணப்பட அதன் அளவானது 20 டிகிரி செல்சியஸாகவும் காணப்படக்கூடும். அதனால், உடுப்பியை காண சிறந்த நேரமாக குளிர்காலமானது பெருமளவில் பரிந்துரை செய்யப்படுகிறது.

PC: Anuragg7990

 உடுப்பியை அடைவது எப்படி?

உடுப்பியை அடைவது எப்படி?

ஆகாய மார்க்கமாக அடைவது எப்படி?

உடுப்பிக்கு அருகாமையில் காணப்படும் ஒரு விமான நிலையமாக மங்களூரு சர்வதேச விமான நிலையமானது காணப்படுகிறது. பெங்களூருவிலிருந்து ஒரு நாளைக்கு இரண்டு முதல் நான்கு விமானங்கள் வரை செல்கிறது. பறக்கும் நேரமாக 50 நிமிடங்களும் தேவைப்படுகிறது. மங்களூருவிலிருந்து 54 கிலோமீட்டர் தூரத்தில் உடுப்பியானது காணப்படுகிறது.

தண்டவாள மார்க்கமாக அடைவது எப்படி?

உடுப்பியில் இரயில் நிலையமானது காணப்படுகிறது. பெங்களூருவிலிருந்து உடுப்பி செல்லும் கர்வார் விரைவு இரயில் (இரயில் எண்: 16523) வாரத்தின் அனைத்து நாட்களும் காணப்படுகிறது.

சாலை மார்க்கமாக அடைவது எப்படி?


பெங்களூருவிலிருந்து உடுப்பிக்கு மொத்தம் மூன்று வழிகளானது காணப்படுகிறது.

வழி 1: பெங்களூரு - சன்னராயப்பட்னா - சக்லேஷ்பூர் - மங்களூரு - உடுப்பி;

வழி: தேசிய நெடுஞ்சாலை 75;

ஒட்டுமொத்த தூரம்: 403 கிலோமீட்டர்;

கால அவகாசம்: 7 மணி நேரம் 32 நிமிடங்கள்

வழி 2: பெங்களூரு - தும்கூரு - ஹிரியூர் - தீர்த்தஹல்லி - உடுப்பி;

வழி: தேசிய நெடுஞ்சாலை 48;

ஒட்டுமொத்த தூரம்: 438 கிலோமீட்டர்;

கால அவகாசம்: 8 மணி நேரம் 47 நிமிடங்கள்


வழி 3: பெங்களூரு - மைசூரு - மடிக்கேரி - மங்களூரு - உடுப்பி;

வழி: தேசிய நெடுஞ்சாலை 275;

ஒட்டுமொத்த தூரம்: 443 கிலோமீட்டர்;

கால அவகாசம்: 9 மணி நேரம் 9 நிமிடங்கள்

முதலாம் வழியானது பரிந்துரை செய்யப்பட, நேரம் மற்றும் தூரமும் மற்ற வழிகளை காட்டிலும் குறைவாகவே இருக்கிறது.

பெங்களூருவில் தொடங்கி, சன்னாப்பட்னா நோக்கி செல்ல, பெங்களூருவிலிருந்து 146 கிலோமீட்டர் தொலைவிலும் காணப்படுகிறது. 2.5 மணி நேரங்களில் நாம் சன்னாப்பட்னாவை அடைகிறோம். செல்லும் வழியில் ஆதிச்சுவன்நகரி கணிதத்தை காண, இது தான் வோக்கலிகா குலத்தின் மதக்கூட்டத்திற்கான இடமென்பதும் தெரியவருகிறது.

 ஷ்ரவணபெலாகோலா:

ஷ்ரவணபெலாகோலா:

ஜெய்ன் மக்களுக்கான முக்கிய மற்றும் மிகவும் பிரசித்திப்பெற்ற யாத்ரீக இலக்காக ஷ்ரவணபெலாகோலா காணப்படுகிறது. இவ்விடமானது 57அடி பாகுபலி சிலையை கொண்டிருக்க, உலகிலேயே உயரமான ஒற்றைக்கல் சிலை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

PC: Ananth H V

 சக்லேஷ்பூர்:

சக்லேஷ்பூர்:


சன்னராயப்பட்னா முதல் சக்லேஷ்பூருக்கு செல்ல, அடுத்த வழியாக 76.6 கிலோமீட்டர் தூரத்தில் காணப்படும் இவ்விடத்தை ஒன்றரை மணி நேரம் மூலமாக அடைகிறோம். சக்லேஷ்பூர் எனப்படும் இந்த அழகிய இடமானது நம் பயணத்திற்காக உதவக்கூடும். இந்த பசுமையான பயணமானது சக்லேஷ்பூரிலிருந்து ஆரம்பித்து குக்கே சுப்பிரமணியாவில் நிறைவுபெறுகிறது. இங்கே ஜெனுக்கல் குடாவை நாம் ஏறுவதும் சக்லேஷ்பூரில் ஒரு சிறப்பம்சமாக காணப்படக்கூடும். மஞ்சேஹல்லி நீர்வீழ்ச்சியானது சக்லேஷ்பூரில் காணப்படும் மிகவும் விரும்பத்தகும் நீர்வீழ்ச்சியாகவும் அமைகிறது. சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பழமைவாய்ந்த சக்லேஷ்வர ஆலயமும் இங்கே காணப்படுகிறது. இவ்வாலயமானது ஹொய்சால கட்டிடக்கலை பாணியை பின்தொடர்ந்தும் காணப்படுகிறது.

PC: L. Shyamal

மங்களூரு:

மங்களூரு:

சக்லேஷ்பூரிலிருந்து 130 கிலோமீட்டர் தொலைவில் காணப்படும் மங்களூரு உடுப்பிக்கு அடுத்ததாக நாம் செல்லும் வழியில் காணப்படுகிறது. நீங்கள் இவ்விடத்தை மூன்று மணி நேரத்தில் அடையலாம். கர்நாடகாவின் பனம்பூர் கடற்கரையானது மிகவும் விரும்பத்தக கடற்கரைகளுள் ஒன்றாக காணப்படுகிறது. இங்கே பட்டத்திருவிழாவானது ஏப்ரல் மாதத்தில் நடத்தப்படுகிறது.

இங்கே குட்ரோலி கோகர்நாத் ஆலயமானது ஒடுக்கப்பட்ட வர்க்கத்துக்காக காணப்பட, குறிப்பிட்ட ஆலயங்களில் அனுமதிக்கப்படாததால் கட்டப்பட்டதாகவும் தெரியவருகிறது. இங்கே முன்னிலை தெய்வமாக கோகர்நாதேஷ்வரா காணப்பட, இக்கடவுளை சிவபெருமான் என்றும் அழைப்பர்.

இந்த கத்ரி மஞ்சுநாத் ஆலயமானது கட்டிடக்கலையின் மூலமாக புத்த ஆதிக்கத்தை காட்டுவதாகும். தலைமை தெய்வமாக மஞ்சுநாதன் எனப்படும் சிவபெருமான் காணப்படுகிறார். பனம்பூர் கடற்கரையானது குறைவான கூட்டத்தை கொண்டிருக்கிறது. இந்த நேரங்களில் அனைவரும் உல்லால் கடற்கரை நோக்கியும் சென்றுவிடுகின்றனர்.

PC: Nithin Bolar k

சுல்தான் பேட்டரி:

சுல்தான் பேட்டரி:


திப்பு சுல்தானால் கட்டப்பட்ட சுல்தான் பேட்டரி எனும் கடிகார கோபுரம், குர்பூர் நதிக்கரையை நோக்க கட்டப்பட்டிருக்கிறது. இதன் அழகாக, கோட்டைபோல் காணப்பட, கடிகார கோபுரத்தை ஒத்த அமைப்பானது குறைவாகவே காணவும்படுகிறது. இருப்பினும், இன்றைய நிலையில் இது இடிபாடுகளுடன் காணப்படுகிறது. சோமேஷ்வரா மற்றும் தன்னீர் பவி எனப்படும் நெகிழ செய்யும் கடற்கரையும் மங்களூருவில் காணப்படுகிறது.

மற்றுமோர் முக்கிய ஆலயமாக மங்கலாதேவி ஆலயமானது காணப்பட, மங்களூரு என்னும் பெயரிலிருந்து இதன் பெயரானது வைக்கப்பட்டதாகவும் தெரியவருகிறது. சைன்ட் அலோசியஸ் தேவாலயம், ரோசரியோ தேவாலயம் என அழகிய தேவாலயங்களும் மங்களூருவில் நாம் பார்க்க ஏதுவாக அமைந்திருக்கிறது.

மங்களூருவிலிருந்து உடுப்பியானது ஒரு மணி நேர பயணமாக அமைய, 56 கிலோமீட்டர் தூரத்திலும் காணப்படுகிறது.

PC: Premnath Kudva

கிருஷ்ணா ஆலயம்:

கிருஷ்ணா ஆலயம்:


உடுப்பியானது கிருஷ்ண ஆலயத்துக்கு பெயர்பெற்று விளங்குகிறது. உடுப்பியின் கிருஷ்ணா மடம் பதிமூன்றாம் நூற்றாண்டில் மாதவச்சாரியாவால் கட்டப்பட்டதாகும். இந்த ஆலயத்தில்தான் சுவையூட்டும் உலக பிரசித்திப்பெற்ற உடுப்பி உணவானது பிறந்ததாக நம்பப்படுகிறது. இங்கே குருக்களால் சுகாதாரமான, எளிமையான உணவுகளானது கொடுக்கப்பட, கடவுளுக்கான அந்த உணவுகள் மிகவும் ருசியாகவும் இருக்கிறது.

இவ்விட உணவை பலரது மனமானது விரும்ப, குறிப்பாக தோசை இங்கே அனைவரது நாக்கையும் உச்சுக்கொட்ட வைத்திடும். மக்களால் இந்த உணவானது விரும்பப்பட, பல உடுப்பி ஹோட்டல்கள் இந்தியா மற்றும் வெளிநாடுகளிலும் கொண்டுவரப்பட்டது.

இங்கே காணப்படும் ஆலயங்களை சுற்றி பல புராணங்கள் பேசப்படுகிறது. பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞரான கண்ணகதாசன் இந்த ஆலயத்தின் உள்ளே வர மறுத்ததாகவும், அவர் ஒரு தாழ்ந்த சமூகத்தை சேர்ந்தவரென சொல்லப்படுகிறது. அவரை ஆலயத்தின் உள்ளே அனுமதிக்காத காரணத்தால், ஜன்னல் வழியாக காணப்பட்ட ஓட்டை வழியாக கடவுளை அவர் தரிசித்திருக்கிறார். இருப்பினும், கடவுளின் பின்புறத்தை மட்டுமே அவரால் பார்க்க முடிய, கவலையும் கொண்டிருக்கிறார் கண்ணகதாசன். இதனால், கிருஷ்ண பெருமான் தான்னை திருப்பிக்கொண்டு கண்ணகதாசனுக்கு காட்சியளித்ததாகவும் புராணம் சொல்கிறது. இந்த சம்பவத்தை கண்ட கண்ணகதாசன் கடவுளை புகழ்ந்து பாடியுள்ளார். இதனால், இந்த ஜன்னலை ‘கனகன கிண்டி' என்றும் அழைக்கப்படுகிறது.

அஷ்டமாதா (எட்டு மாதா/மடாலயம்) மாதவச்சாரியாவால் தியதி பள்ளியின் தத்துவம் போதிக்க நிறுவப்பட்டது. எட்டு மாதாக்களாக பேஜாவரா, பளிமாரு, அடமாரு, புட்டிகே, சோதே, கனியூரு, ஷிரூரு மற்றும் கிருஷ்ணபுராவானது காணப்படுகிறது. உடுப்பி என்பது சின்டிகேட் மற்றும் கார்ப்பரேஷன் வங்கியின் பிறப்பிடமாகவும் இருக்கிறது.

PC: Shravan Kamath94

உடுப்பியில் நாம் காண வேண்டிய சில இடங்கள்:

உடுப்பியில் நாம் காண வேண்டிய சில இடங்கள்:


உடுப்பி ஸ்ரீ கிருஷ்ண ஆலயம்:


கிருஷ்ண பெருமானுக்கு இந்த ஆலயமானது அர்ப்பணிக்கப்பட, குழந்தை வடிவத்தில் சிலையாகவும் காணப்பட, இதற்கு காரணமாக தன் தாயான யசோதா.., குழந்தை வடிவத்தில் காண விரும்பியதாகவும் சொல்லப்படுகிறது. தச சாஹித்யாவின் பிறப்பிடமாக ஸ்ரீ கிருஷ்ணர் ஆலயமானது காணப்பட, இலக்கிய வடிவத்தையும் கொண்டிருக்கிறது. இந்த கடவுளை ஜன்னல் வழியாக மட்டுமே நம்மால் வணங்கமுடிய ஒன்பது துளைகளும் அலங்கரிக்கப்பட்டு காணப்படுகிறது. இதனை ‘நவக்கிரஹ கித்தகி' என்றும் அழைப்பர். இந்த ஆலயமானது பெரும் கூட்டத்துடன் வாரவிடுமுறைகளில் காணப்படவும்கூடும். இந்த பிரசாதத்தின் சுவை பார்க்க மறந்தும் விடாதீர்கள் என்பதோடு - இது கடவுளின் சுவையாகவும் இருக்கக்கூடும்.

PC: Avinashisonline

கடற்கரைகள்:

கடற்கரைகள்:

கௌப் கடற்கரை, மால்பே கடற்கரை, த்ராசி மரவந்தே கடற்கரை, மட்டூ கடற்கரை என உடுப்பியில் மிகவும் பிரசித்திப்பெற்ற கடற்கரைகள் காண, அமைதியான தூய்மையான தண்ணீரைக்கொண்டு கண்கொள்ளா காட்சியையும் பரிசாய் தருகிறது. நீங்கள் கடற்கரையை நோக்கிய சிறு சுற்றுலாவையும் திட்டமிடலாம். இந்த கடற்கரைகளில் சாகச விளையாட்டுகளான உலாவல், பாரா சைலிங்க், படகுப்பயணம் என பலவும் காணப்படுகிறது.

PC: vivek raj

ஹஷ்ட ஷில்பா பாரம்பரிய கிராமம்:

ஹஷ்ட ஷில்பா பாரம்பரிய கிராமம்:

மனிப்பாலில் காணப்படும் ஹஷ்ட ஷில்பா கிராமம், பாரம்பரியத்தையும், மதிப்பையும், வரலாற்றையும் தொல்பொருள்கள், கலை, கட்டிடங்கள் என பல வடிவத்தில் காண்பிக்கிறது. நாட்டுப்புற கலையைக்கொண்ட அருங்காட்சியகம் கிராமத்தின் உள்ளே காணப்பட இந்தியாவின் ஒரு வகையான, மிகவும் விரும்பப்படும் ஒன்றாகவும் காணப்படக்கூடும்.

PC: wikimedia.org

 சைன்ட் மாரி தீவு:

சைன்ட் மாரி தீவு:

இந்தியாவிற்கு வந்த வாஸ் கோட காமா காலடி பதித்த இடம் தான் இது. கர்நாடக கடற்கரையில் காணப்படும் சிறுதீவான இவ்விடம், கடற்கரையின் வெள்ளை மணலையும் கொண்டிருக்கிறது. நான்கு தனித்தனி தீவுகளைக்கொண்டு காணப்படும் சைன்ட் மாரி தீவு, ‘தேங்காய் தீவு', ‘வடக்கு தீவு', ‘தெற்கு தீவு' மற்றும் தரியா பஹதுர்கார்ஹ் தீவு எனவும் அழைக்கப்படுகிறது. இந்த தீவானது கடற்கரைகளுக்கும், சுற்றுலாவுக்கும் ஏற்ற சிறந்த இடமாக அமைய, இருப்பினும் முழுவதுமாக மேம்படுத்தப்படாமலும் காணப்படுகிறது. இருப்பினும், படகு சவாரியின் மூலம் தீவில் செல்ல, நாம் பார்க்க வேண்டிய காட்சிப்பட்டியலில் பகலவன் உதயமும் இடம்பிடித்திடக்கூடும்.

PC: Ashwin06k

 கரந்த் சமரகா பவன்:

கரந்த் சமரகா பவன்:

இந்த அருங்காட்சியகம்/நினைவிடமானது சிவராம் கரந்த் வரைக்கும் செல்ல, உடுப்பியின் ஞானபீத் விருது பெற்ற கோட்டா கிராமத்தையும் நம்மால் காணமுடிகிறது. இந்த யோசனையின் பின்புலனாக இந்த பவன் நிறுவப்பட, கரந்த் நினைவின் பிறப்பிடமாகவும் இது காணப்படுகிறது. இங்கே பெரும் அரங்கமானது (ரங்க மந்திரா) காணப்பட, பல புத்தகங்களை கொண்டதோர் நூலகமும், ஓர் பால் பவனும் (குழந்தைகளுக்காக) மற்றும் கரந்த் குட்டையும் (கோலா) தென்படுகிறது.

PC: wikimedia.org

அனேகுட்டே:

அனேகுட்டே:


யானை சிறுகுன்றான அனேகுட்டே, இலக்கியரீதியாக அழைக்கப்படுகிறது. இதனை கும்பாஷி என்றும் அழைப்பர். உடுப்பியிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் இது காணப்படுகிறது. இந்த சிறுகுன்றின் உச்சியில் கணேஷன் ஆலயமானது காணப்படுகிறது. பரசுராமரால் உருவாக்கப்பட்டதாக நம்பப்படும் இவ்விடமானது பல யாத்ரீகத் தளங்களுள் ஒன்றாக விளங்குவதாகவும் தெரியவருகிறது.

PC: Raghavendra Nayak Muddur

 சோமேஷ்வர வனவிலங்கு சரணாலயம்:

சோமேஷ்வர வனவிலங்கு சரணாலயம்:

அரை பசுமைமாறா தன்மையுடனும், பசுமைமாறா காடுகளையும் கொண்டிருக்கிறது இந்த சரணாலயம். இவ்விடமானது குட்ரேமுக் தேசிய பூங்காவிற்கு அருகாமையில் காணப்படுகிறது. இங்கே காணப்படும் விலங்குகளாக புலி, சாம்பார் எனப்படும் வகை மான், எருமையினம், குள்ள நரி, நீண்ட வால் உடைய குரங்கு, ராஜ நாகம், மலைப்பாம்பு, விசிலடிக்கும் வெண்புண் பறவை, மலபார் ட்ரோகன் என பலவற்றையும் நம்மால் பார்க்க முடிகிறது.

PC: Dinesh Valke

 கூடளு தீர்த்த வீழ்ச்சி:

கூடளு தீர்த்த வீழ்ச்சி:

உடுப்பியில் 40 கிலோமீட்டர் தூரத்தில் காணப்படும் அழகிய நீர்வீழ்ச்சியான கூடளு நீர்வீழ்ச்சி, சீதா நதியின் முதல் நீர்வீழ்ச்சியாகவும் விளங்குகிறது. இதன் நீரானது 126 அடி உயரத்திலிருந்து நேரடியாக குட்டை குளத்தில் விழுகிறது. இந்த குட்டையானது புனிதமாக நம்பப்பட, இந்த நீரின் தன்மையில் மருத்துவ குணங்கள் நிறைந்திருப்பதாகவும் தெரியவருகிறது.

PC: Roland mendonca

நாணய அருங்காட்சியக கார்ப் வங்கி:

நாணய அருங்காட்சியக கார்ப் வங்கி:


கார்ப்பரேஷன் வங்கியால் நிறுவப்பட்ட இவ்விடத்தில் காணும் அருங்காட்சியகத்தில் அரிதான நாணயங்கள் காணப்பட, நாணயப்பிரியர்களுக்கு சொர்க்கமாக இவ்விடமானது காணப்படுகிறது. இங்கே வைக்கப்பட்டிருக்கும் நாணயங்கள் எல்லாம் 3500 வருடங்களுக்கு பழமையானவை எனவும் சொல்லப்படுகிறது. இந்த அருங்காட்சியகம் தான் கார்ப்பரேஷனால் முதன்முதலில் நாட்டில் ஆரம்பிக்கப்பட்டது. நீங்கள் இங்கே பழங்காலத்தில் வியாபாரத்துக்கு பயன்படுத்திய பண்டமாற்று பொருட்களை கண்டிடலாம்.

PC: Arivumathi