Search
  • Follow NativePlanet
Share
» »" டஃப் ஃபைட் "தரும் பாபா கணவாயினை நோக்கியதொரு அழகிய அனுபவத்தினை வாங்க பெறலாம்!

" டஃப் ஃபைட் "தரும் பாபா கணவாயினை நோக்கியதொரு அழகிய அனுபவத்தினை வாங்க பெறலாம்!

" டஃப் ஃபைட் "தரும் பாபா கணவாயினை நோக்கியதொரு அழகிய அனுபவத்தினை வாங்க பெறலாம்!

By Balakarthik Balasubramanian

கடல் மட்டத்திலிருந்து சுமார் 4685 மீட்டர்கள் உயரத்தில் காணப்படும் பாபா கணவாய் இமாசலப் பிரதேசத்தில் அமைந்து அழகியக் காட்சிகளைக் கண்களிற்கு தந்து மனதினை இதமாக்கும் ஒரு இடமாக இருக்கிறது.

உங்களால் எளிதில் நம்ப முடியாத மாய உலகம்...இவற்றை தெரியுமா?உங்களால் எளிதில் நம்ப முடியாத மாய உலகம்...இவற்றை தெரியுமா?

இமயமலையில் காணப்படும் இந்தப் கணவாய், சுற்றுலாப் பயணிகள் குறைவாக வந்துபோகும் ஒரு இடமாக தென்பட்டாலும், வந்து செல்வோர்கள், "இத்தகைய இடத்தினை இவ்வளவு நாட்கள் காணாமல் சென்றது ஏனோ!" என்றதொரு ஏக்கம் நிரம்பவே திரும்புகின்றனர் என்றுக் கூறலாம். அப்படி என்ன தான் நம்மை ஏக்கமுற செய்யும் அழகு இங்கு நிறைந்திருக்கிறது., வாங்கப் பார்க்கலாம்.

உலகின் பழம்பெரும் கோயில் தமிழ்நாட்டில்தான் இருக்கு தெரியுமா?உலகின் பழம்பெரும் கோயில் தமிழ்நாட்டில்தான் இருக்கு தெரியுமா?

நான் கடந்த 7-8 வருடங்களாகப் பயணத்தின் மூலம் பல புதிய அனுபவங்களை அடைந்துக்கொண்டிருக்கும் நபர் என இயற்கையுடன் வாழும் ஒரு வாழ்க்கையைப் பற்றி கூறுகையில் இன்பம் பொங்கி இதழ்களை வருடுவதாகவே நான் உணருகிறேன். இருப்பினும் என் பயணத்தில் நான் தேர்ந்தெடுக்கும் ஒரு கடினமானப் பயணம் எனக்கு பல்வேறு அனுபவங்களை மனதளவிலும் உடல் அளவிலும் உண்டாக்கி, வாழ்க்கைக்கு பெரும் உதவி புரிகிறது.

திருவண்ணாமலையார் பற்றி உங்களுக்குத் தெரிந்திராத மர்மங்கள்!திருவண்ணாமலையார் பற்றி உங்களுக்குத் தெரிந்திராத மர்மங்கள்!

வாழ்க்கை என்பது எளிதானதொரு இலக்கு அல்ல என்பதனை நான் இந்த கடினப் பயணங்களின் மூலம் நிறையவே உணர்ந்தேன். அப்பேற்ப்பட்ட ஒரு கடினமானதொருப் பயணத்தினை ஆராய்ந்து மீண்டும் செல்ல ஆசைப்பட்டது என் மனம். அப்படிப் பட்டதோர் பயணமாக பாபா கணவாய் பயணம் எங்களை வரவேற்க, நான் வழக்கமாக அழைத்து செல்லும் பயணப் பிரியர்கள் 6 பேரினை சேர்த்துக்கொண்டேன்.

அன்று நாங்கள் ஒன்றாக அமர்ந்து அடுத்தப் பயணத்தினை பற்றி யோசித்த போதும் எந்த ஒரு முடிவும் அற்று அமைதியாக இருந்தோம்.

இந்த மாதம் அல்டிமேட் டாப் 5 கட்டுரைகள்:கீழே

பாபா கணவாய்

பாபா கணவாய்

பாபா கணவாய் என்பது பூத்துக்குலுங்கும் வளமான கின்னார் பள்ளத்தாக்கிற்கும் உலர்ந்த மற்றும் தரிசாக காணப்படும் ஸ்பித்திப் பள்ளத்தாக்கிற்கும் இடைப்பட்டப் பகுதியில் அமைந்துள்ள ஒரு பாலமாகும். இந்தப் பாலம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4685 மீட்டர் உயரத்தில் காணப்படுகிறது. இமயமலையில் அமைந்துள்ள இந்தப் பாலம், காண்போர்களால் வெகுவாக கவர்ந்தாலும் குறைந்த எண்ணிக்கையில் வந்துபோகும் ஒரு இடமாக இந்தப் பகுதி இருக்கிறது.

இந்தப் பயணம் ஒரு சவாலானப் பயணமாக மட்டும் இல்லாமல், நிலப்பரப்பும் நிலையற்று பயணத்தின்போது மாறிக்கொண்டே இருக்கிறது. மேலும் பயணத்தின் மூலம் நல்லதொரு மனதாற்றலைக் கொண்டவர்களுக்கும் உடல் அளவில் சிறந்து விளங்குவோருக்குமே இந்த பாபா கணவாய் பயணம் இனிமையானதொரு உணர்வினை தருகிறது என்றும் கூறப்படுவதால் அப்படி என்ன தான் இங்கு இருக்கிறது என்ற ஆர்வம் மலை ஏறும் ஆர்வலர்களின் மனதினை வெகுவாக பற்றிக்கொள்கிறது என்றும் கூறலாம்.


Snotch

இந்தப் பயணத்திற்கு ஏதுவானதொருக் காலநிலை:

இந்தப் பயணத்திற்கு ஏதுவானதொருக் காலநிலை:

ஜூன் முதல் செப்டம்பர் வரையிலானக் காலங்கள் இந்தப் பயணத்திற்கு சிறப்பானதொரு உணர்வினை தருகிறது. பருவக்காலங்களில் சிறப்பான பயணமாக அமைவதுடன் குளிர்காலத்தில் நாம் பயணத்தினை திட்டமிடாமல் தவிர்ப்பது நல்லதாகும். மேலும் குறிப்பிட்ட மாதங்களில் பனிப் பொழிவின் தாக்கமும் குறைவாகவேக் காணப்பட அதுவும் நம் பயணத்தினை கால நிலைகளைக் கொண்டு எளிதாக மாற்றிவிடுகிறது.

Aawaravineet

பயணத்தின் போது நமக்குத் தேவையான அத்தியவாசியப் பொருட்கள் ஒரு பார்வை:

பயணத்தின் போது நமக்குத் தேவையான அத்தியவாசியப் பொருட்கள் ஒரு பார்வை:

பயணம் என்னும் ஒற்றை சொல் என் மனதில் சவாரி செய்ய ஆரம்பிக்க, நான் கால நிலைகளுக்கு ஏற்ற காலணி வகைகளை மனதார வாங்கிக்கொண்டேன். அதுமட்டுமல்லாமல், முதுகில் மாட்டும் தன்மைக் கொண்டதொருப் பை, தூங்குவதற்கு உகந்தக் கூடாரம், பூச்சிகளில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளப் பயன்படும் மருந்து மற்றும் ஷ்ப்ரே வகைகள், மருந்துகள் அடங்கிய முதலுதவிப்பெட்டி, தலை முதல் கால் வரை கவரும் ஒரு ஓவர்கோட், வெப்பங்கள், மலைகளை ஏற ஏதுவாகப் பயன்படும் குச்சிகள், தலையினைப் பனியிலிருந்துக் காத்துக்கொள்ளப் பயன்படும் குல்லா வகைகள், கதிரவன் வீசும் வீச்சுகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ளப் பயன்படும் கண்ணாடிகள், தலையில் மாட்டிக்கொள்ளக் கூடிய ஒளி விளக்கு, தலையைப் பாதுகாத்துக் கொள்ள பயன்படும் தொப்பி என அனைத்து அத்தியவாசியப் பொருட்களையும் வாங்கிக்கொண்டு நான் வீடு வந்து சேர்ந்தேன்.

சிம்லாவின் கப்னூ கிராமத்தில் தொடங்கிய எங்களுடையப் பயணம், இரயிலின் மூலம் தில்லியினை நோக்கித் தொடர்ந்தது. அங்கிருந்து சிம்லாவிற்கு சென்ற நாங்கள், அந்த அழகியக் காட்சியினைக் காண்பதற்க்காக அந்த நாளின் இதர நேரத்தினை அங்கேயே செலவிட்டோம். அடுத்து நாள் காலை, நாங்கள் கப்னூவை நோக்கிப் புறப்பட்டோம்.

Nickowner

நாள் 1: சிம்லா முதல் கப்னூ வரை

நாள் 1: சிம்லா முதல் கப்னூ வரை

சிம்லாவிலிருந்து 280 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கப்னூப் பகுதியினை நாங்கள் 9 மணி நேரப் பயணத்தின் மூலம் அடைந்தோம். நாங்கள் கண்ட அந்த சுட்லெஜ் நதி, இடதுப் புறத்தில் அமைந்து எங்களுக்கு காட்சிகளைக் கலை நயத்துடன் வழங்கிக்கொண்டிருந்தது. இந்தப் பயணத்தின் முற்பகுதியில் இதுவரை நாங்கள் எந்த ஒரு களைப்பையும் உணரவில்லை என்று உற்சாகத்துடன் சொல்லலாம். இந்த சாகசம் நிறைந்தப் பயணம், வாங்க்டூ நகரத்திலிருந்து கப்னூவை நோக்கி காணப்படும் கின்னார் பள்ளத்தாக்கில் அமைந்திருக்கும் கடைசி கிராமம் வரை சென்றது.

சிம்லா முதல் கப்னூ வரை

சிம்லா முதல் கப்னூ வரை

நாங்கள் கொஞ்சத் தூரத்தினைக் கடந்து செல்ல, அங்குக் கண்ட அழகிய ஏரி ஒன்று, எங்கள் கால்களை கட்டிப்போட்டு அங்கு நிற்க வைத்தது. அந்த ஏரியின் அழகில் தொலைந்த எங்கள் மனதினை தேடிய நாங்கள், களைப்புற்று மதிய உணவினை அந்த ஏரிக்கு அருகிலே அமர்ந்து உண்டோம். மதிய உணவினை உண்டு, மீண்டும் கப்னூவை நோக்கிப் புறப்பட்டு, அங்கு இரவின் மடியில் தவள ஆசைக்கொண்டு கூடாரத்தினை அமைத்தோம். இந்தப் பயணத்தின் முதல் பாதி நெடியப் பயணமாக இருந்தது மட்டுமல்லாமல் சாலைகளும் கரடுமுரடாக நடந்து செல்வதற்கு கடினமானதாகவும் தோன்றியது. அதனால், நாங்கள் மனதளவில் உற்சாகத்துடன் முன் செல்லத் துடித்தாலும். மறு நாள் பயணத்தினை கருத்தில் கொண்டு அசதியுற்று கூடாரத்தில் படுத்துக் கதைகள் பேசியபடி அயர்ந்து தூங்கினோம்.

wiki

நாள் 2: கப்னூ முதல் முல்லிங்க் வரை

நாள் 2: கப்னூ முதல் முல்லிங்க் வரை

நாங்கள் காலையில் எழுந்து உணவினை வயிறு நிரம்ப உண்டு மகிழ்ந்தோம். இருப்பினும், நாங்கள் பேசிக்கொண்டக் கதைகளும், நினைவுகளுமென அவை அனைத்தும் எங்கள் வயிற்றை மட்டும் நிரப்பாமல் மனதினையும் நிரப்பி இன்பமானதொரு நாளாக இனிதே தொடங்கியது அந்தப் பயணம். நாங்கள் முல்லிங்கினை நோக்கிச் செல்ல, ஹோம்டி என்னும் சிறு கிராமத்தினைக் கடந்து சென்றோம். அந்தப் பகுதியில் ஒரு கிளையாக பிரிந்த, நாங்கள் கண்ட அந்த அழகிய மெல்லியப் பள்ளத்தாக்கு, பார்வைக்குக் காட்சிகளால் உணவை பரிமாறி எங்கள் இயற்கை தாகத்தைப் போக்கியது.

நாங்கள் நடந்து சென்றப் பாதையின் வலதுப்பக்கத்தில் இருந்த நதியினைக் கடக்க தடுமாறிய எங்கள் கால்கள், அந்தப் புள்ளியிலிருந்து மேல் நோக்கி ஏற முற்பட்டது. அதன் பிறகு பசுமையானக் காட்சிகளால் அடர்ந்து காணப்பட்ட ஊசியிலை நிறைந்தக் காடுகளை கடந்து செல்ல, 6 மணி நேரப் பயணத்தின் பிறகு சிறிது களைப்பு எங்களைத் தொற்றிக்கொள்வதனை நாங்கள் உணர்ந்தோம்.

கப்னூ முதல் முல்லிங்க் வரை

கப்னூ முதல் முல்லிங்க் வரை

இருப்பினும் நாங்கள் கண்ட அந்த அழகியக் காட்சி எங்கள் களைப்பிற்கு ஓய்வு தந்து, பசுமையானப் புல்வெளிகளையும், அழகானப் பள்ளத்தாக்குகளையும், உயர்ந்த மரங்களையும் கண்டு அகன்ற கண்களுடன் பிரமித்துதான் போனது. அந்த அழகியக் காட்சிகளைக் கண்டு நாங்கள் முன் நோக்கி செல்ல, இறுதியாக முல்லிங்கினை அடைந்தோம். அந்தப் பசுமை நிறைந்த சமமான புல்வெளிகளில் எங்களின் இரண்டாம் நாள் ஓய்வு கூடாரத்தினை அமைத்து களைப்பாறத் தொடங்கினோம். கடல் மட்டத்திலிருந்து 3200 மீட்டர் உயரத்தில் காணப்பட்ட அந்த முல்லிங்க் பகுதியின் அழகினைப் பற்றி வருணித்து கவிதைகள் சொல்லியபடி எங்கள் இரவு உணவினை உண்டு வானில் மின்னிய நட்சத்திரங்களை ரசித்தபடி தூங்க ஆயத்தம் ஆனோம்.

nevil zaveri

நாள் 3: முல்லிங்க் முதல் கஹ்ரா வரை

நாள் 3: முல்லிங்க் முதல் கஹ்ரா வரை

புல்வெளிகளால் அலங்கரிக்கப்பட்ட இந்த கஹ்ரா பகுதி, முல்லிங்கிலிருந்து 3 மணி நேரப் பயணத்தின் வாயிலாக நம்மை வரவேற்க துடிக்கும் ஒரு அழகியப் பகுதியாகும். நாங்கள் கண்ட அந்த நதியினைக் கடந்து சென்ற எங்கள் கால்கள், இயற்கை அன்னையால் உருவாக்கப்பட்ட ஒரு பாலத்தினைப் பிரமிப்புடன் நோக்கி சென்றது. நாங்கள் மேல் நோக்கி ஏற ஆரம்பிக்க, பூத்துக் குலுங்கும் அழகிய மலர்கள் எங்கள் நடைக்கு முற்றுப்புள்ளி வைத்து, அதிலிருந்து வீசிய மகரந்த வாசனையின் முன்பு மனதினை பறிக்கொடுத்தோம். மேலும் நாங்கள் முன் நோக்கி ஏறி செல்ல, மேய்ப்பவர்களின் பாரம்பரியத்தின் பெருமையையும் கண்டு அதிசயித்து போனோம்.
கடல் மட்டத்திலிருந்து 3550 மீட்டர்கள் உயரத்தில் காணப்படும் ஒரு அழகிய இடம் தான் கஹ்ரா. இந்தப் பகுதியினை அடையும் நாம், செழித்தோங்கிக் காணப்படும் கின்னாரையும், தரிசுக் கொண்டு தோற்றம் தரும் ஸ்பித்தியின் அழகினையும் கண்டு மூன்றாம் நாள் பயணத்திற்கு முட்டுக்கட்டைப் போட்டு கூடாரத்தினை அமைத்து ஓய்வுக்குத் தயாராகிறோம்.

நாள் 4: கஹ்ரா முதல் புஷ்டிராங்க் வரை

நாள் 4: கஹ்ரா முதல் புஷ்டிராங்க் வரை


கஹ்ராவிலிருந்து புறப்படும் நாம், கடல் மட்டப் பகுதியிலிருந்து 3975 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும் பாபா கணவாயின் அடிப்பகுதியான புஷ்டிராங்கினை அடைகிறோம். ஓடைகளின் இடதுப் புறத்தில் நாம் நடந்து செல்ல, பின்னணியில் காணப்படும் பனிப்பாறைகளையும், பனிகளால் ஆடையுடுத்தப்பட்ட மலைகளின் உச்சங்களையும் கண்டு அன்னாந்துப் பார்த்தபடி வியப்பு அடங்காமல் அதிசயித்து நிற்கிறோம்.

கஹ்ரா முதல் புஷ்டிராங்க் வரை

கஹ்ரா முதல் புஷ்டிராங்க் வரை

கடல் மட்டத்திலிருந்து 5840 மீட்டர் உயரத்தில் காணப்படும் உயர்ந்த ஹன்பீசன் மலைப்பகுதி நம் மனதினை தூக்கிக்கொண்டு மலைப்புறத்தின் இடையில் மறைத்துக்கொள்கிறது. அடுத்து 3 மணி நேரப் பயணத்திற்கு பிறகு புஷ்டிராங்கை அடைந்த நாங்கள், அந்த இரவு பொழுதில் கண்களால் கண்ட காட்சிகளை, வார்த்தைகளால் இனிமையாக்க ஆசைக்கொண்டு கூடாரத்தினை அமைத்து ஓய்வெடுக்கத் தயாராகினோம்.

Jelle Visser

நாள் 5: புஷ்டிராங்க் – பாபா கணவாய் – பாரா பல்டர்

நாள் 5: புஷ்டிராங்க் – பாபா கணவாய் – பாரா பல்டர்


நாங்கள் பயணத்தின் ஐந்தாம் நாளில் முன்னோக்கி ஏறத்தொடங்க பாபா கணவாயினை நோக்கி சென்றுக்கொண்டிருந்தோம். அந்தப் பகுதி செங்குத்தாக அமைந்திருக்க, அதன் அழகு பனிகளால் கவர்ந்திருந்தது. எங்களுடன் வந்த வழிக்காட்டியாளரின் உதவியுடன் பனி ஊடுருவல் நுட்பங்களை நாங்கள் நன்றாக தெரிந்துக்கொண்டு கவனமாக சென்றோம். "பனிகளால் மட்டும் நான் உன்னை பயமுறுத்தப்போவதில்லை" என்று சொன்ன அந்த இடம், கற்பாறைகளைக் கொண்டும், சிறு கற்களைக்கொண்டும், ஏற்றம் இறக்கமாக சென்று ஆபத்துக் கடந்த ஒரு அழகிய உணர்வினையும் எங்களுக்கு தந்து மகிழ்வித்தது.

புஷ்டிராங்க் – பாபா கணவாய் – பாரா பல்டர்

புஷ்டிராங்க் – பாபா கணவாய் – பாரா பல்டர்

நாங்கள் ஏறியப் பகுதியில் கண்ட அந்த ஆடுகளும் அதனை மேய்ப்பவர்களும் எங்கள் மனதினை, பாரம்பரியத்தின் தன்மைக் கொண்டு வெகுவாக கவர்ந்தனர். இந்தக் கணவாயின் பக்கத்தில் இருந்துப் பார்க்கும்பொழுது நாம் காணும் பின் பார்வதி பள்ளத்தாக்கு நம் மனதினை வருடி இயற்கையால் இதமாக்குகிறது. அதன் பிறகு கடல் மட்டத்திலிருந்து 3963 மீட்டர் உயரத்தில் காணப்படும் பாரா பல்டர் பகுதியினை, இறக்கத்தின் வாயிலாக நாம் அடைகிறோம். அந்தப் பகுதியின் அழகு எங்கள் மனதினை வசீகரம் செய்ய, ஸ்பித்தியினை நோக்கி செல்லும் பாரா பல்டர் பக்கத்தில், கூடாரத்தினை அமைத்து ஓய்வுக்குத் தயாரானோம். புல்வெளிகளாலும், மலைகளாலும் சூழ்ந்து காணப்படும் இந்தப் பகுதி நம் மனதினை இயற்கைக் காற்றால் வருட, இனிமையானதொரு இரவு பொழுதாய் அது எங்களுக்கு அமைந்தது.

Krishna G S

நாள் 6: பாரா பல்டர் – முத் – காஷா

நாள் 6: பாரா பல்டர் – முத் – காஷா

முத் பகுதியினை நோக்கி கீழே இறங்க, நிலப்பரப்பில் நாங்கள் கண்ட ஊதா வண்ணத்தால் தீட்டப்பட்ட அந்த மலைகளும், நதிகளும், முடிவற்றப் பள்ளத்தாக்குகளும் எங்கள் மனதினை நெகிழ்ச்சியடைய செய்து பிரமிப்பில் ஆழ்த்தியது. நாங்கள் 4 மணி நேரப்பயணத்தின் வாயிலாக முத்தினை அடைந்தோம். ஸ்பித்திப் பள்ளத்தாக்கில் அமைந்திருக்கும் கடைசிக் கிராமம் இந்த முத் என்பது குறிப்பிடத்தக்கது.

பாரா பல்டர் – முத் – காஷா

பாரா பல்டர் – முத் – காஷா

இங்கிருக்கும் அழகிய மடம், நம் மனதினை அமைதி நிரம்பக் காத்திருக்கிறது என நம் வழிக்காட்டியாளர்களின் சொல்லினை கேட்கும் நம் மனம், இந்த மடத்தினை காண தவியாய் தவித்து உள்ளே செல்கிறது. அங்கு அமர்ந்து வழிபட்டு அமைதியினைத் தேடி நாங்கள் செல்ல, கடல் மட்டத்திலிருந்து 3650 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும் காஷாப் பகுதியில் ஆறாம் நாள் ஓய்வுக் கூடாரத்தினை அமைத்து அமைதியானதொரு தூக்கத்திற்கு ஏக்கத்துடன் தயாரானோம்.

ryguywy

நாள் 7: காஷா முதல் மணலி வரை

நாள் 7: காஷா முதல் மணலி வரை

ஏழாம் நாள் பயணம் ஏக்கத்துடன் எங்களை எட்டிப்பார்க்க கார் மூலம் காஷாவிலிருந்துப் புறப்பட்டு, நாங்கள் மனதற்று மணலியினை அடைந்தோம். இந்தப் பயணம் நீண்ட நெடியதொருப் பயணமாக இந்நாளில் அமைய, 7 மணி நேரம் பிரயாணத்தின் மூலம் செலவிட்டோம். இந்த 6 நாள் நாங்கள் கண்ட காட்சிகளும் அதிகம், தூரத்தால் நாங்கள் கொண்ட துயரங்களும் அதிகம் என்னும் கவலை மனதில் எட்டிப்பார்க்க, பயணத்தின் நினைவுகள் முந்திக்கொண்டு, கவலைகளை மனதினை விட்டு துரத்த முயன்றுக்கொண்டிருந்தது. இத்துடன் பாபா கணவாய் பயணம் முடிவுக்கு வர, மீண்டும் மணலியிலிருந்து கல்காவினை நோக்கி காரின் மூலம் சென்று அங்கிருந்து தில்லிக்கு இரயில் மூலம் செல்லத் தயாராகினோம்.

இந்த மர்மங்களுக்கு இன்னமும் விடை கிடைக்கலயேப்பா !

Read more about: travel treaking
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X