» »இந்த பீச்சுக்கு போனா பேய் கூட வாக்கிங் போகலாமாம்? வாங்க போயித்தான் பாக்லாமே!

இந்த பீச்சுக்கு போனா பேய் கூட வாக்கிங் போகலாமாம்? வாங்க போயித்தான் பாக்லாமே!

Written By: Udhaya

அடுத்தது :திருநள்ளாறுவில் மீண்டும் தடுமாறிய செயற்கைகோள்கள் - உண்மை என்ன தெரியுமா?

இந்த காலத்துல போயி பேயாவது பிசாசாவது.. சும்மா கிளப்பி விடாதீங்க... அப்படித்தானே சொல்றீங்க... அட நீங்க வேற இந்த கட்டுரைய முழுசா படிச்சிட்டு சொல்லுங்க

பேய் இருக்கா இல்லையா இல்லனா பேய் வர்றதுக்கு எதாச்சும் அறிகுறிகள் இருக்கா?

நீங்க பீச்சுக்கு போறீங்க... காலார நடக்கலாம்னு நினச்சி கொஞ்சதூரம் நடந்து போறீங்கனு வைப்போம்.. உங்க கூடவே ஒரு உருவம் நடந்து வந்தா எப்படி இருக்கும்...

'தல' ரசிகர்களே! அவரைப் பற்றிய இந்த விசயம் தெரியுமா?

தலைகால் தெறிக்க ஓடிட மாட்டீங்க.... அப்படி ஒரு பீச் எங்க இருக்கு தெரியுமா?

அட நம்ம இந்தியாவுல தானுங்கே.. வாங்க ஒரு சுற்றுலா போயி பாக்கலாம்.... அப்படி என்னதான் இருக்குனு ஒரு ஆய்வு நடத்திட்டு வந்துடலாம்.

இந்த மாதத்தில் பட்டையை கிளப்பிய டாப் 5 கட்டுரைகள் கீழே

எங்கே இருக்கு அந்த பீச்

எங்கே இருக்கு அந்த பீச்

குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள டுமாஸ் என்ற இடத்தில் உள்ளது அந்த பீச்.

எப்படி போகலாம்..

எப்படி போகலாம்..

குஜராத் மாநிலம் சூரத் நகரிலிருந்து 21 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த டுமாஸ் பீச்.

பேய் சுற்றுலா

பேய் சுற்றுலா


இந்த பீச் குஜராத்தின் முக்கிய சுற்றுலாத் தளமாக விளங்குகிறது. பேய் பயம் இருந்தாலும் இங்கு பலர் தங்கள் குடும்பத்துடன் வந்து கொண்டுதான் இருக்கின்றனர்.

அவிங்கள்லாம் வெளியூர் காரய்ங்க.. உள்ளூர் மேட்டர் தெரிஞ்சா கிளிஞ்சிடாது..

marvada

பேயுடன் வாக்கிங்

பேயுடன் வாக்கிங்

பகல் நேரங்களில் மட்டும்தான் இந்த கடற்கரை அமைதியாக காட்சியளிக்கும்.. மாலை மங்க மங்க அதன் வேளையைக் காண்பிக்கும் பீச்.

பேயுடன் வாக்கிங் போகணுமா வாங்க வாங்க....

marvada

அனுபவங்கள்

இந்த கடற்கரைக்கு சுற்றுலா சென்றவர்கள் பலர் இந்த அனுபவத்தை உணர்ந்துள்ளனர். ஆம் கண்ணுக்கு எளிதில் புலப்படாத நிழல் உருவம் ஒன்று தன்னைக் கடந்து செல்வது போன்று உணர்ந்ததாக பலர் குறிப்பிடுகின்றனர்.. இந்த வீடியோவைப் பாருங்கள்.

wiki

மயக்கம் ஏற்படும் நிகழ்வுகள்

மயக்கம் ஏற்படும் நிகழ்வுகள்

மாலை வேளைகளில் இந்த பகுதியில் நடமாடும் மக்களில் பெரும்பாலானோர்க்கு மயக்கம் ஏற்படுகிறதாம். அதே நேரத்தில் சிலருக்கு எதுவும் தோன்றவில்லை என்கின்றனர்.

Gagum

கடற்கரையைப் பற்றி....

கடற்கரையைப் பற்றி....


பொன்னிறத்தில் மின்னும் கடற்கரை மணல், தெளிந்த நீல நிறத்தில் கடல் நீர்,, சில்லென வீசும் தென்றல் இவையெல்லாம் இந்த இடத்துக்குச் சுற்றுலாப் பயணிகளைச் சுண்டியிழுக்கும்.

per meistrup

பேய் நடமாட்டத்திற்கான ஆதாரம்

பேய் நடமாட்டத்திற்கான ஆதாரம்


இந்த கடற்கரையைப் பற்றிச் சொல்லப்படும் கதை அப்படி சுகமானது கிடையாது. இந்த இடம் முன்னொரு காலத்தில் சுடுகாடாக இருந்ததாகவும் இங்கு இப்போதும் அந்தி சாய்ந்த பிறகு பேய்கள் நடமாட்டம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் சூரியன் மறைந்த பிறகு சுற்றுலா பயணிகள் யாரும் இங்கு வருவதில்லை.

Keith tyler

இடம் டுமாஸ் கடற்கரை நாள் 1

இடம் டுமாஸ் கடற்கரை நாள் 1

பேய் பற்றிய ஆய்வு என்பதால் மாலை 6 மணிக்கெல்லாம் அசால்ட்டாக வந்து விட்டோம் . மனசுக்குள்ள படபட இருந்தாலும், வெளிய தெரியாம மெயின்டெயின் பண்ணிட்டு, பேய் இருக்கா இல்லையானு பாப்போம் வாங்க...

Rahul bhadane

நான்கில் இரண்டு

நான்கில் இரண்டு


டுமாஸில் நான்கு கடற்கரைகள் உள்ளன, அவற்றில் இரண்டு தான் சுற்றுலாப் பயணிகள் விரும்பும் இடமாகும். பேய் வேட்டைக்கு சென்ற நாம் அங்கு கேமராக்களை பொருத்திவிட்டு அருகிலுள்ள கடைக்கு சென்றோம். ஆனால் கடைக்காரர் 7 மணிக்கெல்லாம் கடையை சாத்திவிட்டு கிளம்பிவிட்டார்...

பேய்னா...சும்மாவா... பின்ன...

wiki

பிணங்களின் புகலிடம்

பிணங்களின் புகலிடம்

இந்த கடற்கரையின் ஒரு பகுதியை எங்களின் ஒரு குழு கண்காணிக்க, மற்றொரு குழுவினர் அடுத்த பகுதியை நோட்டமிட்டனர். அதிர்ச்சிகளும் முடிச்சுகளும் நிறைந்த கடற்கரை..

Ray Dumas

சுடுகாடு

சுடுகாடு

பெரும்பாலும் இந்துக்கள் இங்குதான் இறந்தபின் எரிக்கப்படுகின்றனர். அவர்களின் ஆவி இங்கு உலாவுவதாக கூறப்படுகிறது.

எங்கள் கேமராக்களிலும் சரி, வெறுங்கண்ணுக்கும் சரி எந்த பேயும் ஆவியும் புலப்படவில்லை. இரவு 11 மணி ஆகிவிட்டது... வயிற்றில் கொடும்பசி.. கொண்டு வந்த உணவு காலியாகிவிட.. தண்ணீரை குடித்து வயிற்றை அடைத்தோம்.

wiki

12 மணி

12 மணி


பேய் வாக்கிங் போற நேரம் என்று கூறப்படும் அந்த நேரமும் வந்தது.. ஆனால் பேயைத்தான் காணவில்லை.... ஏமாற்றத்துடன் வீடு திரும்பினோம்.

சுற்றுலா

சுற்றுலா


பேய் இருப்பதாக கூறப்படும் இந்த இடம் சுற்றுலாவுக்கு மிக சிறந்த இடமாகும். இங்கு பலவகையான உணவுகள், திண்பண்டங்கள் கிடைக்கின்றன.

பாஜியா, பாவ் பாஜி, சீன உணவுகள் என நிறைய கிடைக்கின்றன.

பேய் இருக்கோ இல்லையோ.. ஒரு நல்ல சுற்றுலாத்தளம் இந்த டுமாஸ் பீச்..

நீங்களும் நேரம் கிடைச்சா ஒரு டூர் போய்ட்டு வாங்களேன்...

Read more about: travel, ghost