» »காலக்கெடு... இந்த தூண் விழுந்தால் உலகமே அழிந்துவிடும்!

காலக்கெடு... இந்த தூண் விழுந்தால் உலகமே அழிந்துவிடும்!

Written By: Udhaya

லேட்டஸ்ட் : பேய்கள் அலையும் சுற்றுலாத் தளங்கள்! கொஞ்சம் ஜாக்கிரதையா போங்க!

பார்த்தவுடனே பயம்கொள்ளத் தோன்றும் விசயம் இது. என்ன உலகம் அழியப்போகிறதா என்று எள்ளி நகையாடுபவர்களும் இருக்கலாம். அடப்போப்பா இப்படித்தான் மாயன் நாகரிகம் சொன்ன டிசம்பர் 21 உலகம் அழிஞ்சிடும்னு வெளிவந்த கதையெல்லாம் கேட்டு அலுத்துப் போச்சினு நினைக்கலாம்.

ஆனால் உங்களுக்கு ஒன்று நினைவிருக்கட்டும், மாயன்களைக் காட்டிலும் மிகுந்த அறிவு கொண்டவர்கள் நம் முன்னோர்கள் என்பதுதான் அது. நம் முன்னோர்கள் சொன்ன பல விசயங்கள் நடந்துகொண்டே வருகிறது. முன்னோர்கள் வெறும்வாயால் சொன்னால் நம்பமாட்டோம் என்றுதான் அதனுடன் இறை நம்பிக்கையையும் இணைத்து கூறிவந்தனர்.

இந்த கடற்கரையில் பேய் இருக்கா? ஒரு திரில் எக்ஸ்பெரிமண்ட் வீடியோ

பொதுவாகவே, இந்து மதத்தின் சில உண்மைகளும், அமானுஷ்யங்களும் இன்றும் கூட அறிவியல் ரீதியாக பதில் தெரியாத புதிராக தான் காணப்படுகின்றது. அப்படி ஒரு இடம்தான் இது. இங்குள்ள ஒரு தூண் விழுந்தால், உலகமே அழிந்துவிடும் என்பதுதான் நமக்கு அதிர்ச்சி அளிக்கும் விசயம். ஆம் ... உலகம் அழியப்போகிறதாம்.

உலகம் அழியப்போவதை கணிக்கும் மற்ற நிகழ்வுகள் இதுதான்: 

இந்த மாதத்தின் சிறந்த டாப் 5 கட்டுரைகள் கீழே

எங்குள்ளது

எங்குள்ளது

மகாராஷ்டிர மாநிலத்தில் காணப்படும் ஒரு சிறப்பு வாய்ந்த கோயில்தான் "ஹரிஷ்சந்திரகட் கோயில்". தானே மாவட்டத்தில் அமைந்துள்ள கிரேஷ்வர் எனும் கிராமத்தில் அமைந்துள்ளதுதான் இந்த கோயில்.

rohit gowaikar

எப்போது கட்டப்பட்டது

எப்போது கட்டப்பட்டது

இந்த கோயில் மிகவும் பழமை வாய்ந்ததாகும். இது 6-ஆம் நூற்றாண்டில் கலாசூரி பேரரசால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இதற்கு தகுந்த ஆதாரங்களும் உள்ளதாக தெரிகிறது.


Cj.samson

உலகம் அழிகிறதா

உலகம் அழிகிறதா


ஹரிஷ்சந்திரேஷ்வர் கோயிலுக்கு அருகில் "கேதாரேஷ்வர்" என்ற ஆச்சரிய குகையினை காணலாம். இந்த குகைக்குள் சென்றால் பல மர்ம முடிச்சுகள் அவிழும் என்று கூறப்படுகிறது.

Dinesh Valke

குகைக்குள் மர்மம்

குகைக்குள் மர்மம்


குகைக்கு உள்ளே சென்றால் அங்கு நீரினால் சூழப்பட்ட சிவலிங்கம் ஒன்றை பார்க்கலாம். இந்த சிவலிங்கமானது 5 அடி உயரம் கொண்டது. இதன் அருகில் சென்று வழிபடுவது என்பது மிகவும் ஆபத்தானது.

Ssriram mt

சிரமத்திலும் சிரமம்

சிரமத்திலும் சிரமம்

இந்த சிவலிங்கத்தை சுற்றி காணப்படும் நீர் மிகவும் குளிர்ச்சியாக இருக்கும். சாதாரண சூழ்நிலையில் இதை கடந்து லிங்கத்தை அடைவதே சற்று கடினம் தான். அப்படி இருக்க குளிர் காலங்களில் செவ்லதென்பது மிகவும் சிரமமானது. மேலும் மழைக்காலங்களில் இக் குகையை சென்றடைவது கணிப்புக்கு மீறிய விசயமாகும்.

Dinesh Valke

நான்கு தூண்கள்

நான்கு தூண்கள்


இந்த சிவலிங்கத்தை சுற்றி நான்கு தூண்கள் அமையப் பெற்றுள்ளன. இவை தான் உலகம் அழியப்போவதை கணிப்பதாக கூறப்படுகிறது.

தூண்கள் சொல்லவருவதென்ன?

தூண்கள் சொல்லவருவதென்ன?

இந்த நான்கு தூண்களும், "சத்ய யுகம், த்ரேத யுகம், த்வாபர யுகம், கலியுகம்" ஆகிய நான்கு யுகங்களை தெளிவு படுத்துவதாக நம்பப்படுகின்றது. நான்கு யுகங்கள்தான் உள்ளது என புராணம் கூறுவதாக நம்பப்படுகிறது.

Dinesh Valke

தூண்கள் இடிந்தால் என்ன நடக்கும்

தூண்கள் இடிந்தால் என்ன நடக்கும்

ஒவ்வொரு யுகமும் முடிவடையும் சந்தர்பத்தில் ஒவ்வொரு தூணாக இடிந்து விழுமாம். தூண்கள் இடிவது என்பது ஒரு யுகம் முடிந்துவிட்டதை குறிப்பதாகும். அப்படியானால் உலகம் அழிகிறதா?

rohit gowaikar

3 தூண்கள் 4 வது யுகம்

3 தூண்கள் 4 வது யுகம்

ஒரு யுகம் என்பது நம்மால் அளவிடமுடியாத வருடங்களாகும். பலர் தங்கள் கருத்துப்படி பல்வேறு வருடக் கணக்கை கூறுகின்றனர். ஆனால் இதுவரை மூன்று யுகங்கள் முடிந்துவிட்டதாகவும், நடப்பது நான்காவது யுகம் என்றும் கூறுகின்றனர்.

கலிகாலம்

கலிகாலம்

அதன்படி தற்போதைய 3 தூண்கள் இடிந்துவிட்ட நிலையில் கலியுகத்தின் முடிவில் நான்காவது தூணும் இடிந்து உலகம் அழிந்துவிடும் என நம்பப்பட்டு வருகின்றது. உலகம் அழிந்தாலும் அந்த அழிவிலிருந்து மனித ஜென்மத்தை காப்பாற்றவும் வழி உள்ளது.

அந்த இடத்துக்கு சென்று பரிகாரம் செய்யுங்கள்

அந்த இடத்துக்கு சென்று பரிகாரம் செய்யுங்கள்

உலகம் அழிவிலிருந்து மனித இனத்தை காப்பாற்றவும் சில பரிகாரங்கள் செய்யவும் சில இடங்களை குறிப்பிட்டுள்ளனர். அவையாவன, சப்த தீர்த்த புஸ்கர்னி, கேதரேஸ்வர் குகை, கொங்கன் கடா, தரமட்டி சிகரம், ஹரிஸ்சன்ரகட் உள்ளிட்ட பல இடங்கள் பரிகாரம் செய்வதற்கு ஏற்ற இடங்களாகும். இவற்றை நீங்கள் நம்பவில்லை என்றாலும் ஒரு சாகச பயணத்துக்கு ஏற்ற இடமாக அமையும் இந்த இடங்களுக்கு ஒரு டூர் போய்ட்டு வாங்களேன்!

இதே போன்று உலகம் அழியும் என்று சொன்ன சித்தர் எங்கே தெரியுமா?

இதன் அருகிலுள்ள சுற்றுலாத் தளங்களாவன :

இதன் அருகிலுள்ள சுற்றுலாத் தளங்களாவன :

கேதரேஸ்வர் குகைகள், ராஜாச்சி கும்பா குகைகள், கிரேஸ்வர், கல்சுபாய் ஹரிசந்தர்காட் உயிரியல் காடுகள், காலு ஆறு முதலிய பல்வேறு இடங்கள் உள்ளன.

 கேதரேஸ்வர் குகைகள்

கேதரேஸ்வர் குகைகள்

மிகவும் பழமையான இந்த குகைகள் ஹரிஸ்சந்தர்கட் பகுதியில் காணப்படும் அரிய வகை குகைகள் ஆகும்.

அதே மலைப்பகுதியில் 1 மணி நேரம் நடந்து செல்லும்போது இந்த குகைகளை கண்டறியலாம்.

ராஜாச்சி கும்பா குகைகள்

ராஜாச்சி கும்பா குகைகள்


இதுவும் அதன் அருகிலுள்ள குகைகளின் தொகுப்பு ஆகும். இதன் அருகிலேயே பிள்ளையார் கோயில் ஒன்றும் உள்ளது.

சவர்னே

சவர்னே


இதன் அருகிலுள்ள சவர்னே எனுமிடத்தின் அருகே அழகிய நீர்வீழ்ச்சி ஒன்றும் உள்ளது. 18 கிமீ தொலைவிலுள்ள இந்த இடத்தை 1 மணி நேரத்துக்கும் குறைவான நேரத்தில் அடையலாம்.


Read more about: travel, temple