Search
  • Follow NativePlanet
Share
» »வானமே எல்லை: சென்னை - பெங்களூர் - கூர்க்

வானமே எல்லை: சென்னை - பெங்களூர் - கூர்க்

ஆசை எப்படி வெட்கம் அறியாதோ அப்படிதான் நம் கனவுகளை நோக்கிய பயணமும் எல்லை அறியாதவை. 3 நாட்கள் விடுமுறையில் அற்புதமான பயணம் ஒன்றை மேற்கொள்ளலாம் என ஆசைப்படுகிறீர்களா? வாருங்கள் சென்னையில் இருந்து கிளம்பி வேலூர் கிருஷ்ணகிரி வழியாக பெங்களுருவை அடைந்து அங்கிருந்து கூர்க் என்ற அற்புதமான பயணத்திற்கு தேவையான சில தகவல்கள், செல்லும் வழியில் அவசியம் பார்க்க வேண்டிய இடங்கள், எங்கு தங்குவது போன்ற விஷயங்களை அறிந்து கொள்ளலாம்.

ஹோட்டல் புக்கிங்கில் 50% உடனடியாக தள்ளுபடி பெற இங்கே கிளிக்குங்கள்

சென்னை டு பெங்களுரு:

சென்னை டு பெங்களுரு:

சென்னையில் இருந்து பெங்களுரு 326 கி.மீ தூரமாகும். இந்த பயணம் குறைந்தது 6 மணி நேரமாவது ஆகும். NH4 வழியாக ராணிபேட்டை வந்து அங்கிருந்து சித்தூர் வழியாக இல்லாமல் வேலூர் கிருஷ்ணகிரி வழியாக செல்வது சிறந்தது. விரும்புவோர் வேலூரில் புகழ் பெற்ற ஆம்பூர் பிரியாணியை சுவைத்துவிட்டு பயணத்தை தொடரலாம். கிருஷ்ணகிரியில் இருந்து ஹோசூர் வந்து அங்கிருந்து பெங்களுருவை சுலபமாக அடையலாம். இந்த சாலை நெரிசல் இல்லாமல் சீக்கிரம் செல்லக்கூடிய வகையில் உள்ளது.

புகைப்படம்:Ashwin Kumar

வேலூர்:

வேலூர்:

பெங்களுருவை அடையும் முன்பாக எங்கேனும் ஒரு சின்ன சுற்றுலா செல்லலாம் என நினைப்பவர்கள் வரும் வழியான வேலூரில் ஒரு சிற்றுலா செல்லலாம் . அங்கு உள்ள பழமைவாய்ந்த வேலூர் கோட்டை, அதனுள் இருக்கும் ஜலகண்டேஸ்வரர் கோயில் மற்றும் ஏலகிரி மலை ஆகியவை உள்ளன. தமிழ் நாட்டில் பாராகிளைடிங் ஏலகிரி மலையில் மட்டுமே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வேலூரில் கிடைக்கும் உலகப்புகழ் பெற்ற ஆம்பூர் பிரியாணி அதி சுவையானது. அதனை ஒரு பிடி பிடிக்க மறந்து விடாதீர்கள். வேலூரில் இருக்கும் தங்க கோயில் தமிழ் நாட்டின் அதிசயங்களில் ஒன்று. முடிந்தால் அங்கும் சென்று வாருங்கள்.

பெங்களுரு:

பெங்களுரு:

பெங்களுருவில் இரவு தங்கிவிட்டு அடுத்தநாள் பெங்களுருவை சுற்றிப்பார்க்க கிளம்புங்கள். பெங்களுருவில் அமைதியாக சுற்றிப்பார்க்கவும் சரி, நண்பர்களுடன் கொண்டாடவும் சரி ஏராளமான இடங்கள் உண்டு. வோண்டேர் லா, லால் பாக் மலர் பூங்கா, பநேர்கட்டா தேசிய பூங்கா, கிப்பன் பூங்கா மற்றும் பல ஷாப்பிங் மால்கள் என முழுமையான ஒரு அனுபவத்தை பெங்களுருவில் நீங்கள் பெறலாம்.

Image Source: Wikipedia

பெங்களுரு - கூர்க்:

பெங்களுரு - கூர்க்:

பெங்களுருவை சுற்றிப்பார்த்துவிட்டு அடுத்தபடியாக கூர்க்கை நோக்கி பயணப்படுங்கள். பெங்களுருவில் இருந்து கூர்க் செல்ல மூன்று முக்கிய வழிகள் உள்ளன அதில் கனகபுரா மைசூர் வழியாக NH209இல் கூர்க்கை அடையும் வழியே சிறந்தது. மொலுமொலுப்பான அந்த சாலையில் பயணித்தால் 6 மணி நேரத்தில் நாம் கூர்க்கை அடைந்துவிட முடியும். இதை தவிர இருக்கும் மற்ற இரண்டு சாலைகளில் சென்றால் தூரம் குறைவு என்றாலும் மோசமான சாலைகளை கொண்டவை அவை. நாம் செல்லும் NH209 சாலையில் சுற்றிப்பார்க்கவும் நல்ல இடங்கள் உள்ளன.

புகைப்படம்:Vineeth

மைசூர்:

மைசூர்:

கனகபுராவில் இருந்து மலவல்லி, பானூர் வழியாக அளனஹள்ளியை அடைந்து அங்கிருந்து மைசூரை எளிதாக அடையலாம். மைசூரில் கண்டிப்பாக சுற்றிபார்க்க நிறைய இடங்கள் இருக்கின்றன. குறைந்தது ஒரு நாளேனும் மைசூரில் சுற்றிப்பார்க்க வேண்டிய இடங்களை தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

புகைப்படம்: Suchana Seth

மைசூரில் சுற்றிபார்க்க வேண்டிய இடங்கள்:

மைசூரில் சுற்றிபார்க்க வேண்டிய இடங்கள்:

கர்நாடகாவின் முக்கிய சுற்றுலா நகரமான மைசூரில் மைசூர் அரண்மனை, பிருந்தாவன் கார்டென், அற்புதமான இயற்கை காட்சிகளை வழங்கும் குக்கரஹல்லி ஏரி போன்றவை உள்ளன. மைசூரில் இருந்து சற்று தொலைவில் நூற்றுக்கணக்கான பறவைகள் வரும் ரங்கனதிட்டா பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. குழந்தைகளுடன் சுற்றிப்பார்க்க நல்ல இடமாக மைசூர் திகழ்கிறது.

Image Source: Flickr

மைசூர் டு கூர்க்:

மைசூர் டு கூர்க்:

பயணத்தின் இறுதி கட்டமாக மைசூரில் இருந்து கூர்க் வரையிலான இறுதிகட்ட பயணத்தை துவங்கலாம். மைசூரில் இருந்து மாநில நெடுஞ்சாலை 88 வழியாக நேராக கூர்க்கை அடையலாம். 130 கி.மீ தொலைவுள்ள இந்த பயணத்தை முடிக்க குறைந்தது இரண்டரை மணி நேரமாவது ஆகும்.

கூர்க் - உள்ளம் கொள்ளை போகுமே:

கூர்க் - உள்ளம் கொள்ளை போகுமே:

காவேரி நீர் உற்பத்தியாகும் குடகு மலை தான் கூர்க் என அழைக்கப்படுகிறது. அற்புதமான இயற்க்கை காட்சிகளையும், சாகச விளையாட்டுகள் செய்ய ஏற்ற இடங்களும் இங்கே நிறைய இருக்கின்றன. உங்கள் துணையுடன் காதல் பொங்க தேனிலவு கொண்டாடவும் இது சிறந்த ஒரிடமே. சரி வாருங்கள் கூர்கின் புகழ்பெற்ற சில சுற்றுலாதலங்களை பற்றி அறிந்து கொள்வோம்.

Image Source: Flickr

அப்பே அருவி :

அப்பே அருவி :

கூர்க் நகரிலிருந்து 23 கி.மீ தொலைவில் உள்ள அப்பே நீர்வீழ்ச்சி அடர்த்தியான காபி மற்றும் ஏலக்காய் தோட்டங்களின் வழி செல்லும் ஒரு குறுகிய பாதையின் முடிவில் திடீரென்று தோன்றி நம்மை திடுக்கிட வைக்கின்றது. இந்த அருவியை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்க வசதியாக ஒரு தொங்கு பாலம் ஒன்று அருவிக்கு சற்று அருகே அமைக்கப்பட்டுள்ளது. ஆபத்தான பகுதி என்பதால் இங்கே சுற்றுலாபயணிகள் குளிக்க அனுமதி இல்லை.

புகைப்படம்: Sooraj Shajahan

வாலனூர் பிஷிங் கேம்ப்:

வாலனூர் பிஷிங் கேம்ப்:

கூர்கிலிருந்து 30 கி.மீட்டருக்குள் துபாரெவுக்கு வெகு அருகில் வாலனூர் பிஷிங் காம்ப் அமைந்துள்ளது. வாலனூர் பிஷிங் காம்ப்பிலிருந்து துவங்கும் இந்த முகாம்கள் அங்கிருந்து காவிரி ஆற்றின் வழியில் அமைந்துள்ள தொட்டம்கலி, பீமேஸ்வரி போன்ற இடங்களுக்கு சென்று இறுதியாக கலிபோரே பகுதியில் முடிவடைகிறது. பலவகையான மீன்கள் வாழும் இங்கு தூண்டிலில் மீன் பிடிக்க வனத்துறையிடம் முன் அனுமதி பெற வேண்டியது அவசியம் ஆகும்.

சாகசப்படகு சவாரி:

சாகசப்படகு சவாரி:

கூர்கில் சாகசப்படகு சவாரி மிகவும் பிரபலம். பரபோலே ஆற்றின் குறுக்கே சீறிப்பாயும் நீருடன் போராடி இந்த சாகசப்பயணம் செய்வதென்பது சுவாரஸ்யமானதாக அமையும். சுற்றிலும் நிறைந்திருக்கும் காடுகளை ரசித்தபடி நண்பர்களுடன் கொண்டாட சாகசப்படகு சவாரி சிறந்த ஒரு தேர்வாகும். தேனிலவு வருபவர்களும் தங்கள் தேனிலவை மறக்கமுடியாததாக்கிட தங்கள் அன்பானவருடன் இந்த சாகசப்பயணம் மேட்கொள்கின்றனர். நீர் பெருக்கெடுத்தோடும் பருவ மலை காலங்களில் இங்கே வரலாம்.

இப்படியாக ஒரு மூன்று நாள் பயணத்தை நிறைவு செய்யுங்கள். மனதிலும், உடலிலும் புத்துணர்ச்சி நிறைந்திடும்.

புகைப்படம்:Philip Larson

More News

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+