» »இந்த மூன்று இந்திய நகரங்களும் உலகிலேயே மிக மலிவானவையாம்! நம்பமுடிகிறதா?

இந்த மூன்று இந்திய நகரங்களும் உலகிலேயே மிக மலிவானவையாம்! நம்பமுடிகிறதா?

Written By: Udhaya

உலகின் டாப் 10 மலிவான நகரங்கள் பட்டியலில் இந்தியாவில் இருந்து மூன்று நகரங்கள் இடம்பெற்றுள்ளன. சர்வதேச அளவில் உள்ள நகரங்களில் வாழ்வதற்கு ஆகும் செலவுகள் அடிப்படையில் எடுக்கப்பட்ட 2018 ஆண்டு சர்வேயில் இந்திய நகரங்களில் சில குறைந்த அளவில் செலவாகும் நகரங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. அந்த நகரங்களைப் பற்றி இந்த பதிவில் காண்போம்.

சென்னை

சென்னை


புதிய நூற்றாண்டு மற்றும் புத்தாயிரத்தின் துவக்கத்திலிருந்து (2000) இன்னும் பிரம்மாண்டமாக தன் எல்லைகளை நாள்தோறும் விரித்தபடி பல துறைகளிலும் தடம் பதித்து நிற்கும் நவீன நகரமாக இது ஒளிர்கிறது. இந்தியாவின் முக்கிய மாநகரங்களில் ஒன்றான சென்னை நகரம் ஒட்டுமொத்த தென்னிந்தியாவின் கலாச்சார கேந்திரமாக சுதந்திர காலம் தொட்டு விளங்கி வருகிறது. தமிழ்நாட்டின் தலைநகரமாக இருந்தாலும் கேரள, தெலுங்கு மற்றும் கன்னட பாரம்பரியங்களும் இங்கு கலந்திருப்பதை ஒரு அற்புதமான தேசிய வரலாற்று பரிமாணம் எனலாம். கொரமாண்டல் எனப்படும் சோழமண்டலக் கடற்கரையில் வங்காளவிரிகுடாவை ஒட்டி சென்னை நகரம் அமைந்துள்ளது. 400 வருட வரலாற்றை கொண்டுள்ள இந்நகரம் தற்போது உலகில் பெரிய மெட்ரோபாலிடன் நகரங்களில் 36வது இடத்தை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

VtTN

பெசண்ட் நகர் பீச்

பெசண்ட் நகர் பீச்

பெசண்ட் நகர் கடற்கரையில் கார்ல் ஷ்மிட் எனும் டச்சு மாலுமிக்காக 1930ம் ஆண்டில் அமைக்கப்பட்ட நினைவுச்சின்னத்தை பார்க்கலாம். நீச்சல் தெரியாத ஒருவரை காப்பாற்ற முயன்று இவர் உயிர் துறந்துள்ளார். இந்த சின்னம் பல தமிழ்ப்படக்காட்சிகளில் இடம் பெற்றுள்ளது. தற்போது சற்றே சேதமடைந்து காணப்படும் இதனை பாதுகாக்க பல ஆர்வலர்கள் முயற்சி எடுத்து வருகின்றனர். பெசண்ட் நகர் கடற்கரை உள்ளூர் மக்கள் மற்றும் பயணிகள் விரும்பி விஜயம் செய்யும் பொழுதுபோக்குத்தலமாக பிரசித்தி பெற்றுள்ளது. பொதுவாக இளைஞர்கள் மாலை நேரத்தில் இங்கு கூட்டமாக கூடி நண்பர்களுடன் உல்லாசமாக பொழுது போக்குகின்றனர்.

KARTY JazZ

வடபழனி முருகன் கோயில்

வடபழனி முருகன் கோயில்

சென்னையிலுள்ள பழமையான கோயில்களில் வடபழனி முருகன் கோயிலும் ஒன்றாகும். இது தமிழ்நாட்டின் முருகபக்தர்களிடையே வெகு பிரசித்தம். 17ம் நூற்றாண்டின் இறுதியில் அண்ணாசாமி நாயக்கர் எனும் தீவிர முருகபக்தரால் இக்கோயில் கட்டுவிக்கப்பட்டுள்ளது. வறியவரான அவர் ஒரு ஓலைக்குடிசையில் முருகன் சித்திரத்தை வைத்து பூஜித்து வந்துள்ளார்.

Simply CVR

 டெல்லி

டெல்லி

புது தில்லி மற்றும் பழைய டெல்லி என்ற இரண்டு நகர்ப்பகுதிகளை அடக்கியுள்ள டெல்லி நகரமானது அந்த பெயர்களுக்கேற்ப மஹோன்னதமான வரலாற்று அடையாளங்களையும், அசர வைக்கும் அதி நவீன அம்சங்களையும் தனது தனித்தன்மையான சிறப்பம்சமாக கொண்டு காட்சியளிக்கிறது. மேலும் இது இந்திய வல்லரசின் அரசியல் செயல்பாடுகளுக்கான மையக்கேந்திரமாகவும் திகழ்கிறது. ஒவ்வொரு இந்திய சுற்றுலா ஆர்வலரும் தம் வாழ்நாளில் ஒருமுறை விஜயம் செய்தே ஆகவேண்டிய முக்கிய நகரங்களில் இந்த டெல்லி மாநகரமும் ஒன்று என்பதில் இருவேறு கருத்துக்களுக்கு இடமேயில்லை.

Hemant banswal

மோட் கி மஸ்ஜித்

மோட் கி மஸ்ஜித்

இந்த மசூதியின் கட்டுமானம் இந்தோ-இஸ்லாமிய கட்டிடக்கலை அம்சங்களுடன் காட்சியளிக்கிறது. சிவப்புக்கற்களால் எழுப்பப்பட்டு ஜாலி வேலைப்பாடுகள் கொண்ட ஜன்னல்கள், எண்கோண வடிவில் சமாதி பீடங்கள், விதான வளவு வாசல்கள், குமிழ்கோபுரம் மற்றும் இரண்டு அடுக்குகள் கொண்ட கோபுரங்கள் போன்ற அம்சங்களை இந்த மசூதி உள்ளடக்கியுள்ளது. இங்கு காணப்படும் நுணுக்கமான பூ வேலைப்பாடுகள் அக்கால கலைஞர்களின் திறமைக்கு சான்றாக காட்சியளிக்கின்றன. பொதுவாக அக்காலத்திய டெல்லி நகர இஸ்லாமிய கட்டமைப்புகள் சிவப்பு மணற்பாறைக்கற்களால் கட்டப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Nvvchar

டெல்லி தேசிய விலங்கியல் பூங்கா

டெல்லி தேசிய விலங்கியல் பூங்கா


நேஷனல் ஜுவாலஜிகல் பார்க் அல்லது டெல்லி (ஜூ) தேசிய வனவிலங்கு பூங்கா என்று அழைக்கப்படும் இந்த வளாகம் டெல்லி பழைய கோட்டைக்கு அருகில் 214 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. சராசரியாக 130 வகையான விலங்கினங்களையும், பறவையினங்களையும் உள்ளடக்கிய 1350 உயிரினங்கள் இந்த பூங்காவில் வசிக்கின்றன. 1959ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி இந்த வனவிலங்கு பூங்காவானது ‘டெல்லி ஜூ' என்ற பெயரில் திறக்கப்பட்டுள்ளது. பின்னாளில் இதன் பெயர் இந்தியாவின் ஏனைய வனவிலங்கு காட்சிக்கூடங்களும் பின்பற்றும்வகையில் ‘நேஷனல் ஜுவாலஜிகல் பார்க்' (தேசிய வனவிலங்கு பூங்கா) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது

Santosh Namby Chandran

 டெல்லி பழைய கோட்டை

டெல்லி பழைய கோட்டை

‘புராணா கிலா' என்று அழைக்கப்படும் ‘டெல்லி பழைய கோட்டை' டெல்லி நகரத்திலுள்ள மிக முக்கியமான சுவாரசியமான சுற்றுலா அம்சமாகும். டெல்லி நகரத்திலுள்ள கோட்டைகள் மற்றும் புராதன அமைப்புகளிலேயே மிகப்பழையானதாக கருதப்படும் இந்த கோட்டை ‘இந்திரபிரஸ்தா' எனும் காவிய முக்கியத்துவம் வாய்ந்த நகர்ப்பகுதியில் வீற்றிருக்கிறது. யமுனை நதிக்கரையில் 5000 ஆண்டுகளுக்கு முன்னர் மஹாபாரத பாண்டவர்களால் நிர்மாணிக்கப்பட்டதுதான் இந்த ‘இந்திரபிரஸ்தா' நகரமைப்பு என்று புராணிகக்கதைகள் கூறுகின்றன. வரலாற்று ஆசிரியர்களும் இந்த புராணா கிலா எனும் கோட்டைச்சுவர் வளாக ஸ்தலத்தில் இந்திரப்பட்டணம் எனும் கிராமம் இருந்திருக்கவேண்டும் என்றே கூறுகின்றனர்.

Varun Shiv Kapur

 பெங்களூரு

பெங்களூரு

பன்முக கலாச்சார சமூகத்தை கொண்டுள்ளதால் பெங்களூரு சர்வதேச உணவு வகைகள் கிடைக்கின்றன. சாலையோரக் கடைகளிலில் துவங்கி சர்வதேச துரித உணவு விடுதிகள் வரை இங்கு எல்லாமே உள்ளன. மக் டொனால்ட், கே எஃப் சி, பீட்ஸா ஹட் போன்ற உணவகங்களின் கிளைகள் நகரெங்கும் அமைந்துள்ளன. தரமான உள்ளூர் உணவு வகைகளுக்கு எம்டிஆர் போன்ற உணவுகங்களும் உள்ளன. வடக்கிந்திய மற்றும் கிழக்கிந்திய உணவு வகைகளும் தாராளமாக கிடைக்கும்படி உணவு விடுதிகள் ஏராளம் உள்ளன. ஃபோரம், கருடா மால், செண்ட்ரல் மற்றும் மந்த்ரி மால் போன்ற ‘மால்'கள் (பல அடுக்கு வணிக மையங்கள்) இங்கு பல்விதமான உள்நாட்டு மற்றும் சர்வதேச பொருட்களை வாங்குவதற்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளன. எம்ஜி ரோடில் அமைந்துள்ள காவேரி எம்போரியத்தில் பாரம்பரிய சந்தன மர கைவினைப்பொருட்கள் மற்றும் சென்னப்பட்டணா மரப்பொம்மைகளை வாங்கலாம். இளம் தலைமுறையினர் அதிகம் நிறைந்துள்ள மாநகரம் என்பதால் இங்குள்ள இரவுக் கொண்டாட்டங்களும் கேளிக்கை வசதிகளும் பிரசித்தி பெற்று விளங்குகின்றன.

Dineshkannambadi

 உல்சூர் ஏரி

உல்சூர் ஏரி

பெங்களூர் நகரத்தின் வட கிழக்கு பகுதியில் எம்.ஜி ரோடுக்கு அருகில் உல்சூர் ஏரி அமைந்துள்ளது. பெங்களூரை உருவாக்கிய கெம்பே கவுடாவால் இந்த ஏரி உருவாக்கப்பட்டுள்ளது. 1.5 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஏரியில் குட்டி குட்டி தீவுகள் காணப்படுகின்றன. ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இங்கு கணேசா திருவிழா பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது.

Ramesh NG

லால் பாக் தாவரவியல் பூங்கா

லால் பாக் தாவரவியல் பூங்கா

பெங்களூரின் தெற்குப்பகுதியில் புகழ்பெற்ற இந்த லால் பாக் தாவரவியல் பூங்கா (botanical garden) என்றழைக்கப்படும் பிரமாண்ட பூங்காத்தோட்டம் (பார்க்)அமைந்துள்ளது. லால் பாக் என்றால் ‘சிவப்பு தோட்டம்' என்பது பொருள். இந்த பூங்காத்தோட்டமானது புகழ் பெற்ற முகலாய தோட்டங்களை போன்று அமைக்கும் நோக்கத்துடன் ஹைதர் அலியால் துவங்கப்பட்டு அவரது மகன் திப்புசுல்தானால் முழுதும் உருவாக்கி முடிக்கப்பட்டது. 240 ஏக்கர் பரப்பளவில் காணப்படும் லால் பாக்கில் 1000 வகையான மலர்ச்செடிகளும் பலவகைப்பட்ட வறண்ட பிரதேச வகைத் தாவரங்களும் காணப்படுகின்றன. இங்குள்ள செடிகள் வாடாமல் இருப்பதற்கு நன்கு திட்டமிடப்பட்ட நுட்பமான நீர்ப்பாசன முறை உள்ளது

Muhammad Mahdi Karim

Read more about: travel chennai bangalore delhi

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்