Search
  • Follow NativePlanet
Share
» »மணிக்கணக்கில் காத்திருக்க தேவையில்லை – டிக்கெட்டில் குறிப்பிட்ட நேரத்திற்கு கோயிலுக்கு வந்தால் போதும் – TTD அற

மணிக்கணக்கில் காத்திருக்க தேவையில்லை – டிக்கெட்டில் குறிப்பிட்ட நேரத்திற்கு கோயிலுக்கு வந்தால் போதும் – TTD அற

உலகப்பிரசித்தி பெற்ற திருமலை ஏழுமலையான் கோயிலுக்கு உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர். பக்தர்களுக்கு விரைவான தரிசனத்தை வழங்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் விஐபி பிரேக் தரிசனம், ஆர்ஜித சேவாக்கள் மூலம் பல தரிசனம், ரூ.300 சிறப்பு தரிசனம், ஆதார் டிக்கெட் தரிசனம், திவ்ய தரிசனம், சர்வ தரிசனம் என பல தரிசனங்களை வழங்கி வருகிறது. அதிக நேரம் காத்திருக்காமல் பக்தர்கள் விரைவாக இலவச தரிசனம் பெறும் வகையில் அறிமுகம் செய்யப்பட்ட ஆதார் டிக்கெட் தரிசனத்தில் இப்போது TTD நிர்வாகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது!

விரைவாக இலவச தரிசனம் பெற ஆதார் டிக்கெட் தரிசனம்

சிறப்பு தரிசனம், விஐபி தரிசனம், திவ்ய தரிசனம் இல்லாத சாமானிய மக்களும் விரைவாக சுவாமி தரிசனம் செய்ய வேண்டும் என்பதற்காக ஆதார் டிக்கெட் முறையில் டோக்கன் தரிசனம் செய்யும் முறை அறிமுகம் செய்யப்பட்டது. அதன்படி நீங்கள் உங்கள் ஆதார் டிக்கெட்டுகளை கொடுத்து டிக்கெட் முன்பதிவு செய்து விட்டால் போது, அதில் திருமலை ஏழுமலையான் தரிசனம் செய்யும் நேரமும் தேதியும் சரியாக குறிப்பிடப்பட்டு உங்களுக்கு ஒரு டிக்கெட் வழங்கப்படும். அந்த குறிப்பிட்ட நேரத்திற்கு உள்ளே சென்றால் போதும், இலவசமாக விரைவாக சுவாமி தரிசனம் செய்திடலாம்.

3 மணி நேரம் காத்திருப்பு, இலவசமாக ஒரு திருப்பதி லட்டு

இந்த ஆதார் டிக்கெட் டோக்கன் தரிசனம் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து இலவசமாக தரிசனம் செய்யும் பக்தர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். காரணம், சர்வ தரிசனத்தில் குறைந்த பட்சம் 10-12 மணி நேரம் இல்லாமல் ஏழுமலையானை தரிசனம் செய்ய முடியாது. ஆனால், ஆதார் டோக்கன் தரிசனம் மூலம் நீங்கள் அந்த குறிப்பிட்ட நேரத்திற்கு கவுண்டருக்கு சென்றால் போதும். அந்த நேரத்தில் இருந்து வெறும் 3 மணி நேரத்திற்குள் அதாவது ரூ.300 சிறப்பு தரிசனம் செய்பவர்களுக்கு இணையாக நீங்களும் சுவாமி தரிசனம் செய்திடலாம். கூடுதலாக, உங்களுக்கு ஒரு திருப்பதி லட்டுவும் பிரசாதமாக வழங்கப்படும்.

darshanattherighttimeprintedintheticketintirupati

கொரோனா தொற்றால் இடைநிறுத்தம் செய்யப்பட்ட டோக்கன் தரிசனம்

கொரோனா பெருந்தோற்று ஏற்பட்ட காலகட்டத்தில் பலவகையான தரிசனங்களும் நிறுத்தப்பட்டன. திருப்பதியில் இருந்து திருமலைக்கு பேருந்துகள் இயக்கப்படவில்லை. அதன் காரணமாக சர்வ தரிசனம் உட்பட ஆதார் டோக்கன் தரிசனம், திவ்ய தரிசனம், விஐபி பிரேக் தரிசனம் என அனைத்து வகையான தரிசனங்களும் நிறுத்தப்பட்டன. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் ஆதார் டிக்கெட் தரிசனமும், நடந்து செல்பவர்களுக்கு வழங்கப்படும் திவ்ய தரிசனமும் மீண்டும் துவங்கப்பட்டன.

கால்கடுக்க காத்திருக்க தேவையில்லை

ஆனால் டிக்கெட் மீண்டும் வழங்கப்பட்டாலும் கூட மக்கள் டிக்கெட்டில் உள்ள நேரத்திற்கு முன் கூட்டியே சென்று காத்திருக்கின்றனர். இதனால் தேவையில்லாமல் அவர்கள் குடவுனில் அடைக்கப்பட்டு காக்க வைக்கப்படுகின்றனர் என TTD நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆதலால், டிக்கெட்டில் குறிப்பிட்டுள்ள சரியான நேரத்திற்கு கவுண்டருக்கு வாருங்கள், சரியான நேரத்தில் சுவாமி தரிசனம் செய்யுங்கள் என TTD நிர்வாகம் பக்தர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

devotees can come to darshan

எந்தெந்த இடங்களில் ஆதார் டோக்கன் பெறலாம்

விஷ்ணு நிவாசம் (திருப்பதி ரயில் நிலையம் எதிரில்)

சீனிவாசம் வளாகம் (திருப்பதி பிரதான பேருந்து நிலையம் எதிரில்)

இந்த இரு இடங்களிலும் உங்களது ஆதார் டிக்கெட் ஒரிஜினலை காண்பித்து நீங்கள் டிக்கெட் வாங்கிக் கொள்ளலாம். திருமலைக்கு பக்தர்கள் தரிசன டிக்கெட்டில் கூறப்பட்டுள்ள நேரத்துக்கு வந்தால் போதுமானது. அதுவரை திருப்பதி நகரிலும் மற்றும் நகரை சுற்றிலும் உள்ள பல்வேறு திருத்தலங்களை பக்தர்களை தரிசிக்கலாம் என்று TTD நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

விஐபி டிக்கெட்டுகளும் நேரத்திற்கு வந்தால் போதும்

அதே போல விவிஐபிகள், விஐபிக்கள், உயரதிகாரிகள் மற்றும் அரசியலமைப்பு அந்தஸ்தில் உள்ளவர்கள். இப்பகுதியில் உள்ள கோயில்களைக் கையாளும் அமைப்பான திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) பக்தர்களுக்கு தரிசனத்திற்காக நேர டோக்கன்களை ஒதுக்கியுள்ளதாக மேலும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 5 முதல் 10 சதவீத பக்தர்கள் சிபாரிசு கடிதங்கள் மூலம் வருகை தருகின்றனர். விஐபி தரிசனத்தை தேர்வு செய்ய விரும்பும் பொது பக்தர்களுக்கு, TTD டைம் ஸ்லாட் டோக்கன்களை வழங்கியுள்ளது. 25,000க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டோக்கனில் கொடுக்கப்பட்டுள்ள நேரத்தின்படி, வரிசையில் வந்த 3 மணி நேரத்திற்குள் TTD ஏற்பாடுகளை செய்யும் என்று தெரிவித்துள்ளது

More News

Read more about: tirupati travel guide tamilnadu
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+