» »இந்தியாவின் பாரம்பரிய பழமையான விளையாட்டுக்கள் நடக்குமிடம் இவை

இந்தியாவின் பாரம்பரிய பழமையான விளையாட்டுக்கள் நடக்குமிடம் இவை

Posted By: Udhaya

தமிழகத்தைத் தொடர்ந்து மகாராஷ்டிர அரசும் அவர்களின் பாரம்பரிய விளையாட்டான காளை வண்டி போட்டியை சட்டப்பூர்வமாக்கும் சட்டத்தை நிறைவேற்றியது.

இந்தியாவின் டாப் இடங்கள் இவை தானாம் .. போயிருக்கீங்களா

என்ன சுற்றுலா பக்கத்துல இந்த செய்திய ஏன் போடுறீங்கனு பாக்குறீங்களா. காரணம் இருக்கு. மனிதனின் வாழ்வில் சந்தோசம் என்பது எவ்வளவு முக்கியம். வேலை செய்து களைத்து ஓய்வெடுக்கும் முயற்சி உடலுக்கு அலுப்பை போக்கலாம் ஆனால் மனதிற்கு. அதற்காகத்தான் சுற்றுலா வழிகாட்டி பக்கம் உங்களை அழைத்துச்செல்கிறது.


அலறியடித்து ஓட்டம்பிடிக்கும் பக்தர்கள் 6 மணிக்கு மேல் கல்லாகும் மனிதர்கள் எங்கே தெரியுமா?

தமிழக இளைஞர்களே ஒட்டுமொத்தமாக ஒன்று சேர்ந்து தமிழக அரசையே ஆட்டுவித்த செயல் உலக சரித்திரத்தில் பொறிக்கப்படவேண்டியது. அவர்கள் போராடியது பாரம்பரியத்தை காக்கத்தான். அதே நேரத்தில் இந்தியனாக நம் அண்டை மாநிலவத்தரின் பாரம்பரிய விளையாட்டுக்களை தெரிந்து வைத்துக்கொள்வது அவசியம்தானே.

வாழ்ந்தா இந்த மாதிரி இடத்துலதா வாழணும் ..ப்பா என்ன பிரம்மாண்டம்!

காளைகளை வைத்து விளையாடப்படும் பாரம்பரிய விளையாட்டுக்கள் என்னென்ன அவை விளையாடப்படும் இடங்கள் எவை என்பது பற்றி இந்த பதிவில் காண்போம்

கர்நாடகம்

கர்நாடகம்


கர்நாடக மாநிலத்தில் பாரம்பரியமாக மாடுகளுடன் விளையாடும் விழாவிற்கு கம்பளா என்று பெயர்.

எருதுகளை பூண்டி வண்டியில் பந்தயம் நடத்துவது இம்மாநில கடற்கரைப் பகுதியில் வசிக்கும் மக்களின் பாரம்பரியமாகும்.


நடைபெறும் இடங்கள்

கடற்கரை கிராமங்களான வண்டாறு, குல்வாடி ஆகிய ஊர்கள் கம்பளாவிற்கு மிகப் புகழ் பெற்றதாகும்.

Pernoctator

சிறப்பு

சிறப்பு


மஞ்சுநாதசுவாமி கோயிலில் நடைபெறும் கட்ரி கம்பளா மிகவும் சிறப்பு பெற்றதாகும்.

இது அரசு கம்பளா என்றும் அழைக்கப்படுகிறது.

சுற்றுலா செல்ல ஏற்ற நேரங்கள்

நீங்கள் கம்பளாவை நேரில் காணவேண்டுமென்றால் நவம்பர் டிசம்பர் மாதங்களில் கர்நாடக மாநிலத்துக்கு சுற்றுலா செல்லுங்கள்.

Naveenbm

ஆந்திரம்

ஆந்திரம்


கர்நாடகத்தைப் போல் ஆந்திராவிலும் காளைவண்டி பந்தயம் பாரம்பரியமாக நடைபெறுகிறது.

எங்கே

குண்டூர் அருகே சிலகல்லுரிப்பேட்டை எனுமிடத்தில் காலம்காலமாக பாரம்பரிய காளை வண்டி பந்தயம் நடைபெறுகிறது.

எப்போது

எப்போது

நமக்கு பொங்கல் திருநாளைப் போல, தெலுங்கு மொழி மக்களுக்கு சங்கராந்தி மிக சிறப்பானதாகும். அது ஜனவரி மாதம் நடைபெறுகிறது. அந்த சமயங்களில் மூன்று நாள்கள் நடைபெறும் போட்டியில் வெற்றி பெறுவோர்க்கு பரிசுகள் வழங்கி பெருமைப்படுத்துவார்கள்.

Arangajanan

தமிழகம்

தமிழகம்

தமிழகத்தில் இதுபோன்ற பாரம்பரியம் கோயம்புத்தூர் பகுதிகளில் நடைபெறும். தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையின் போது கோவையின் சுற்றுப்புற பகுதிகளில் நடைபெறும் ரேக்ளா மிகச் சிறப்பு வாய்ந்ததாகும்.

எஸ்ஸார்

எப்போது நடைபெறும்

ரேக்ளா பந்தயமானது பொங்கல் திருநாளின் மூன்றாவதுநாளான காணும்பொங்கல் நாளில் நடத்தப்படுகிறது.

மகராஷ்டிரம்

மகாராஷ்டிர மாநிலத்தில் இந்த மாதிரியான காளை வண்டி பந்தயங்கள் காலம்காலமாக நிகழ்ந்து வந்துள்ளன. ஆனால் காளை மீதான தடை வந்ததும் இந்த போட்டியை நடத்தவிடாமல் ஆகிவிட்டது.

இந்நிலையில் தான் தற்போது அம்மாநில சட்டமன்றம் இந்த சட்டத்தை நிறைவேற்றியுள்ளனர்.

பஞ்சாப்

பஞ்சாப் மாநிலம் பல்வேறு விசயங்களில் தமிழகத்தை ஒத்துள்ளது. அவர்களின் நடை, உடை, உணவு பழக்கவழக்கங்கள் மாறுபட்டாலும், கபடி, காளை பந்தயம் உள்ளிட்ட பல முக்கிய விளையாட்டுக்களில் இரு மாநில மக்களும் சிறப்பானவர்களாக இருக்கின்றனர்.

காளை பந்தயம்

பஞ்சாபிலும் காளைப்பந்தயம் வெகு விமர்சையாக நடைபெறும் ஒரு திருவிழாவாகும்.

Read more about: travel