» »கர்நாடகாவின் புகழ்பெற்ற கோவில் நகரமான தர்மஸ்தலாவைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!!

கர்நாடகாவின் புகழ்பெற்ற கோவில் நகரமான தர்மஸ்தலாவைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!!

By: Bala Karthik

ஆலய நகரமான தர்மஸ்தலா கர்நாடக மாநிலத்தின் தக்ஷினா கன்னட மாவட்டத்திலுள்ள பெல்தங்குடி தாலுக்காவின் நேத்ரவதி நதிக்கரையில் காணப்படுகிறது. இந்த நகரமானது தர்மஸ்தலாவிற்கு பெயர்பெற்று காணப்பட, சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டும் காணப்படுகிறது.

இவ்விடத்தில் காணப்படும் சிவன் ஆலயமானது மஞ்சுநாதர் என அழைக்கப்பட, அதோடு இணைந்து தேவியும் காணப்பட, இதனை அம்மானவாரு என்றும், சந்திரநாத் மற்றும் தர்ம தெய்வா எனவும் அழைக்கப்பட, இவர் தான் தர்மத்தின் பாதுகாவலர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த ஆலயத்தின் தனித்தன்மையாக ஜெய்ன் நிர்வாகமானது காணப்பட, இந்து குருக்களால் பூஜையும் நடத்தப்படுகிறது.

 எப்படி அடைவது?

எப்படி அடைவது?

ஆகாய மார்க்கமாக அடைவது எப்படி?


அருகில் காணப்படும் சர்வதேச விமான நிலையமாக மங்களூரு விமான நிலையமானது காணப்பட, இங்கிருந்து 65 கிலோமீட்டர் தொலைவிலும் இது காணப்படுகிறது. இந்த விமான நிலையமானது நாட்டின் பல முக்கிய நகரங்களுடனும், சில அயல் நாட்டுடனும் இணைந்தே காணப்படுகிறது.

தண்டவாள மார்க்கமாக அடைவது எப்படி?


மங்களூரு சந்திப்பு அருகாமையிலிருக்க, அது பெங்களூரு, மும்பை, மற்றும் முக்கிய நகரங்களுடன், நாட்டின் பல நகரங்களுடன் இணைந்தே காணப்படுகிறது. இந்த இரயில் நிலையமானது 74 கிலோமீட்டர் தொலைவில் காணப்படுகிறது.

சாலை மார்க்கமாக அடைவது எப்படி?


தர்மஸ்தலாவை நாம் அடைய ஒரு சிறந்த வழியாக சாலைவழியானது காணப்படுகிறது. இந்த நகரமானது சாலையுடன் நல்ல முறையில் இணைக்கப்பட்டிருக்க, மாநிலத்தின் பல முக்கிய நகரங்களுடன் வழக்கமான பேருந்து சேவைகளும் தர்மஸ்தலாவிற்கு காணப்படுகிறது.

ஆரம்ப புள்ளி: பெங்களூரு

இலக்கு: தர்மஸ்தலா

காண சிறந்த நேரம்: அக்டோபர் முதல் மார்ச் வரை

PC: Naveenbm

 பயணத்துக்கான திசை:

பயணத்துக்கான திசை:

பெங்களூருவிலிருந்து தர்மஸ்தலாவிற்கான ஒட்டுமொத்த தூரமாக 297 கிலோமீட்டர்கள் காணப்படுகிறது. இந்த பயணத்துக்கு மொத்தம் இரண்டு வழிகள் காணப்பட அதனை நாம் இப்போது பார்க்கலாமே.


வழி 1: பெங்களூரு - நெலமங்கலா - குனிகல் - யாடியூர் - ஹாசன் - சக்லேஷ்பூர் - தர்மஸ்தலா வழியாக தேசிய நெடுஞ்சாலை 75


வழி 2: பெங்களூரு - ராமநகரா - சன்னாப்பட்னா - மாண்டியா - சன்னராயப்பட்னா - ஹாசன் - சக்லேஷ்பூர் - தர்மஸ்தலா வழியாக தேசிய நெடுஞ்சாலை 275 & தேசிய நெடுஞ்சாலை 75

முதலாம் வழியை நீங்கள் தேர்ந்தெடுத்தால், இந்த வழி பயணத்திற்கு தோராயமாக தர்மஸ்தலாவிற்கு 5 மணி நேரம் 45 நிமிடங்கள் ஆகிறது.

வழி: பனடட்கா - பெங்களூரு சாலை


இந்த வழியாக நாம் செல்ல பெயர் பெற்ற ஹாசன், சக்லேஷ்பூர் சாலைவழியாக நம் பயணமானது செல்லக்கூடும்.


இந்த சாலையானது நல்ல முறையில் பராமரிக்கப்பட்டிருக்க, நல்லதோர் வேகத்தை கொண்டு இந்த 297கிலோமீட்டரை கடந்து நம்மால் இலக்கை எட்டவும் முடிகிறது.

இரண்டாம் வழியை பயணத்துக்காக நீங்கள் தேர்ந்தெடுத்தால், பெங்களூருவிலிருந்து தர்மஸ்தலாவிற்கான 341 கிலோமீட்டரை கடக்க நமக்கு 7 மணி நேரங்கள் ஆக, தேசிய நெடுஞ்சாலை 275 & தேசிய நெடுஞ்சாலை 75ஆகவும் நம் பயணமானது அமையக்கூடும்.

நம் பயணமானது வாரவிடுமுறை திட்டமாகவும் அமைந்திடலாம். அதனால், சனிக்கிழமை காலையில் நீங்கள் புறப்பட ஒன்றரை நாட்கள் இனிமையான பயணமாக நமக்கு அமைவதோடு, பெங்களூரை அடைய ஞாயிற்றுக்கிழமை காலை அல்லது மதிய வேளை ஆக, நகரத்தை இரவுப்பொழுதிலும் நாம் அடைந்திடலாம்.

 நெலமங்கலா மற்றும் ஹாசனின் சிறு நிறுத்தங்கள்:

நெலமங்கலா மற்றும் ஹாசனின் சிறு நிறுத்தங்கள்:

பெங்களூருவின் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க, அதிகாலை புறப்படுவது சிறப்பாக அமைய, நெரிசலை தவிர்த்து இலக்கை நம்மால் வேகமாகவும் எட்டமுடியும். நெடுஞ்சாலையை அடையும் நாம், எண்ணற்ற வழிகளில் காலை உணவை உண்ணலாம்.

விரைவான பயணம் மூலம் நெலமங்கலாவை நாம் அடைய, அங்கே கிடைக்கும் சூடான தோசையை வாயில் பிய்த்துப்போட்டுக்கொண்டு கிளம்ப, மதிய நேர வேளையில் ஹாசனில் நிறுத்திடலாம்.

நெலமங்கலாவின் சாலைகளானது உங்களை கிராமப்புற கர்நாடகாவை நோக்கி அழைத்துசெல்ல, ஏதோ ஒரு வித்தியாசத்தை நாம் உணர்வதோடு, பெங்களூரு போன்ற மெட்ரோ சிட்டியை கடந்த புத்துணர்ச்சியையும் பெறுகிறோம்

PC: Prashant Dobhal

பெளூர் & ஹலேபிடு:

பெளூர் & ஹலேபிடு:

ஹாசன், ஹொய்சலா பேரரசின் பிரசித்திப்பெற்ற வீடாக பெளூர், ஹலேபிடு, ஷ்ரவணபெலாகோலா என பல தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த தளங்களும் காணப்படுகிறது.

பெளூரின் சென்னக்கேஷவா ஆலயமும், ஹலேபிடுவின் ஹொய்சலேஷ்வரா ஆலயமும் நாம் காண வேண்டிய அற்புதமான கட்டிடக்கலை கொண்ட ஆலயங்களாகும்.

ஹாசனில் மதிய உணவை முடித்து புறப்படும் நாம், தர்மஸ்தலாவை நோக்கி செல்ல 117 கிலோமீட்டர் வாயிலாக 2 மணி நேரத்தில் தர்மஸ்தலாவை நாம் அடைகிறோம்.

PC: Philip Larson

 இலக்கு: தர்மஸ்தலா:

இலக்கு: தர்மஸ்தலா:


இந்த தர்மஸ்தலா ஆலயம், 800 வருடங்களுக்கு பழமை வாய்ந்து காணப்பட, அசாதாரணமாக மஞ்சுநாதேஷ்வரரை நம்மால் வணங்கமுடிய, இதனை கடந்து குருக்களும் வைஷ்ணவர்களாக காணப்பட, விஷ்ணு பெருமானை பின் தொடர்ந்தும் அவர்கள் காணப்படுகின்றனர்.

மற்றுமோர் சுவாரஸ்ய விஷயமாக, இந்த ஆலயமானது ஜெய்ன் வம்சாவளியான ஹெக்கடே என்பவர்களால் நிர்வகிக்கப்பட்டும் வருகிறது.

PC: B.yathish6

 ஹெக்கடே:

ஹெக்கடே:


தர்மாவின் புகலிடமென பொருள்தரும் தர்மஸ்தலா, மனித நேயமும், நம்பிகையையும் கொண்ட ஓர் இடமும் கூட. தர்மஸ்தலாவில் ஹெக்கடேவின் நிலையாக தனித்துவம் கொண்டு காணப்பட, நாட்டின் மற்ற பிற மதமையங்களானது இங்கே தெரிவதில்லை.

பாரம்பரியத்தின்படி, ஹெக்கடேவை மஞ்சுநாத கடவுளாகவே காணப்படுகிறது. இந்த ஹெக்கடே என்பது மதசார்புடன் காணப்பட, ஸ்ரீ மஞ்சுநாத சுவாமி ஆலயத்தையும் இங்கே கொண்டிருக்கிறது. Dr.D.வீரேந்திர ஹெக்கடே தான் தற்போது காணப்படும் தலைமையாக, பாரம்பரியத்தின்படி அனைத்து பொறுப்புகளையும் அவர் எடுத்து செய்துக்கொண்டிருக்கிறார்.

PC: Offical Site

சந்திரநாத சுவாமி பாசடி:

சந்திரநாத சுவாமி பாசடி:

நூற்றாண்டுகளை கடந்த ஸ்ரீ சந்திரநாத சுவாமி பாசடி இந்த பகுதியில் மற்றுமோர் ஈர்ப்பாக காணப்பட, நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு காணப்படுவதோடு, தென்னிந்தியாவில் வணங்கப்படும், கொண்டாடப்படும் திகம்பரா ஆலயத்தையும் கொண்டிருக்கிறது. நம்பிக்கையின் பார்வைப்படி, தர்மஸ்தலா என்னும் பெயரைக்கொண்டு மரபு வழக்கப்படி அதனை கடைப்பிடித்தும் வரப்படுகிறது.

PC: Naveenbm

 பாகுபலி:

பாகுபலி:

ரத்னகிரி சிறுகுன்று மேலே காணப்படும் பாகுபலி சிலை, மஞ்சுநாத ஆலயத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் வெளியில் காணப்படுகிறது. இந்த 39 அடி உயரமான சிலையானது 1982ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் Dr.D. வீரேந்திர ஹெக்கடேவால் நிறுவப்பட்டும் காணப்படுகிறது.

PC: Abdulla Al Muhairi