Search
  • Follow NativePlanet
Share
» »3D போட்டோ, 3D சுவர் போல இந்தியாவில் முதன்முறையாக 3D தபால் நிலையம்!

3D போட்டோ, 3D சுவர் போல இந்தியாவில் முதன்முறையாக 3D தபால் நிலையம்!

D போட்டோ, 3D சுவர், 3D தரை ஏன் 3D இல் காபி கோப்பைகள், தலையணைகள், பெட்ஷீட்கள் கூட நாம் பார்த்திருக்கிறோம். அது என்ன 3D தபால் நிலையம் என்று யோசிக்கிறீர்களா? பெங்களூரு கேம்பிரிட்ஜ் லேஅவுட்டில் இந்தியாவின் முதல் 3D அச்சிடப்பட்ட தபால் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. பெங்களூருவிற்கு வருகை தரும் மக்கள் அனைவரும் இங்கு வந்து 3D தபால் நிலையத்தை பார்த்து செல்கின்றனர்!

பெங்களூருவில் அமைந்துள்ள 3D தபால் நிலையம்

18 ஆகஸ்ட் 2023 பெங்களூரு வாசிகளுக்கு ஒரு சிறப்பான நாள், ஆம்! பெங்களூரு கேம்பிரிட்ஜ் லேஅவுட்டில் அமைந்துள்ள இந்தியாவின் முதல் 3D அச்சிடப்பட்ட தபால் நிலையத்தை மத்திய ரயில்வே, தகவல் தொடர்பு, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் திறந்து வைத்தார். இந்தியாவின் இந்த மாபெரும் சாதனையை பிரதமர் மோடி கூட சமூக வலைதளங்களில் பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

1

IIT மெட்ராஸ் மற்றும் லார்சன் அண்ட் டூப்ரோ லிமிடெட் கூட்டு முயற்சி

பெங்களூரு கேம்பிரிட்ஜ் லேஅவுட்டில் உள்ள கேம்பிரிட்ஜ் லேஅவுட் தபால் அலுவலகம் இந்தியாவின் முதல் 3D அச்சிடப்பட்ட அலுவலக கட்டிடமாகும். மெரூன் மற்றும் வெள்ளை நிறத்தில் இந்த கட்டிடம் 560008 என்ற பின் குறியீட்டுடன் கம்பீரமாக நிற்கிறது. 1,021 சதுர அடி பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இது இப்போது செயல்படும் மற்றும் பொதுமக்களுக்கு திறக்கப்பட்டுள்ளது. IIT மெட்ராஸின் வழிகாட்டுதலுடன் லார்சன் அண்ட் டூப்ரோ லிமிடெட் இந்தியாவில் இந்த வகையான முதல் கட்டிடத்தை கட்டியதாக தபால் அதிகாரிகள் தெரிவித்தனர்.

43 நாட்களில் கட்டி முடிக்கப்பட்ட 3D தபால் நிலையம்

பெங்களூருவில் திறக்கப்பட்ட 3D தபால் நிலையம் அதன் காலக்கெடுவிற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக 43 நாட்களில் முடிக்கப்பட்டது. கட்டுமானப் பொறியியல் துறையின் கட்டிடத் தொழில்நுட்பம் மற்றும் கட்டுமான மேலாண்மைப் பிரிவின் பேராசிரியர் மனு சந்தானத்தின் வழிகாட்டுதலின் இந்த கட்டிடம் எழுப்பப்பட்டது.

முழு தானியங்கி கட்டிட கட்டுமானம்

இது உண்மையில் முழு தானியங்கி கட்டிட கட்டுமான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட வடிவமைப்பின்படி ஒரு ரோபோடிக் பிரிண்டர் தானாகவே கான்கிரீட் அடுக்கை அடுக்கி வைக்கிறது. கட்டமைப்பை அச்சிட அடுக்குகள் பிணைக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்ய விரைவாக கடினப்படுத்தப்படும் ஒரு சிறப்பு தர கான்கிரீட் உள்ளது.

2

23 லட்சம் மட்டுமே செலவு

பெங்களூருவில் அதே தபால் நிலையத்தை கட்டுவதற்கு வழக்கமான முறையில் ஈடுபட்டிருந்தால், அதற்கு 6 முதல் 8 மாதங்கள் ஆகியிருக்கும். இருப்பினும், இந்த 3D அச்சிடப்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, இது வெறும் 43 நாட்களில் மட்டுமே ஆனது. இந்த புதிய தொழில்நுட்பம் வழக்கமான கட்டிட நடைமுறைகளுக்கு மாற்றாக செயல்பட முடியும் என்பதற்கான சான்று இதுவாகும். அதுமட்டுமில்லாமல், 23 லட்சம் செலவில் மட்டுமே இது கட்டப்பட்டுள்ளது. இது வழக்கமான முறைகளில் உள்ள செலவை விட 30-40 சதவீதம் குறைவாகும்.

பாராட்டிய பாரத பிரதமர்

இந்த சாதனையைப் பாராட்டி பிரதமர் நரேந்திர மோடி X (முன்னாள் ட்விட்டர்) க்கு கணக்கில், "இந்தியாவின் முன்னேற்றம் மற்றும் புதுமைக்கான சான்று" என்று அவர் கூறினார். மேலும், பெங்களூரில் உள்ள இந்தியாவின் முதல் 3டி அச்சிடப்பட்ட அஞ்சல் அலுவலகம் ஆத்மநிர்பர் (தன்னம்பிக்கை) தேசத்தின் உணர்வை வெளிப்படுத்துகிறது என்றும் அவர் கூறினார்.

நீங்கள் எப்போதாவது பெங்களூரு சென்றால் கட்டாயம் இந்த 3D தபால் நிலையத்தை பார்த்து விட்டு வாருங்கள்!

More News

    Read more about: bengaluru
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+